நான் எப்படி ஜெயங்கொள்வது? Jeffersonville, Indiana, USA 63-0825M 11.ஜெபத்துக்காக நாம் தலைவணங்குவோம், எங்கள் பிதாவே, இன்று காலை நாங்கள் மறுபடியுமாக ஒன்றுகூடி வந்துள்ள இந்த கம்பீரமான நேரத்துக்காகவும், கர்த்தருடைய வார்த்தையை நீர் திறந்து எங்களுக்கு முன்னால் இங்கு வைக்கப்போவதற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறோம். பரிசுத்த ஆவியானவர் தாமே தேவனுடையதை எடுத்து எங்களுக்குக் கொடுத்து, நாங்கள் இந்த ஆராதனை ஸ்தலத்தை விட்டுச் செல்லும்போது, எங்கள் இருதயங்கள் மகிழ்ச்சியினால் நிறைந்திருக்கவும், கர்த்தாவே, உம்முடைய மீட்பின் மகத்தான வல்லமையை நாங்கள் காணவும், அது எவ்வாறு சிறைப்பட்டவர்களை விடுதலையாக்குகிறதென்று நாங்கள் அறிந்துகொள்ளவும், இருந்ததும், இருப்பதும் வரப்போவதுமான காரியங்களை எங்களுக்கு அறிவிக்கவேண்டுமென்றும் வேண்டிக்கொள் கிறோம். இவைகளுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். நாங்கள் ஒருமித்து உமது வார்த்தையை ஆராயும் இந்த நேரத்தில் எங்களை ஆசீர்வதித்தருளும். நாங்கள் இங்கிருந்து செல்லும்போது, ''வழியிலே பரிசுத்த ஆவியானவராகிய அவர் நம்முடனே பேசினபோது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா?' என்று நாங்கள் கூற அருள்புரியும். 2எல்லாவிடங்களிலுமுள்ள போதகர்களை - உமது சத்தியத்துக்காக நிற்கும் உமது ஊழியக்காரரை- இன்று ஆசீர்வதிப்பீராக. வியாதியஸ்தருக்காக அவர்கள் ஏறெடுக்கும் ஜெபங்களுக்கு மறு உத்தரவு அருளுவீராக. வியாதியால் அவதியுறுபவர்களை சுகப்படுத்துவீராக. கர்த்தாவே, நீர் ஜனங்களின் மத்தியில் சென்று அங்குள்ள முன்குறிக்கப்பட்ட வித்தை தேடிக் கண்டுபிடித்து, எப்படியா யினும் அவர்கள் பாதையில் வெளிச்சம் விழச் செய்யும்படியாக வேண்டிக்கொள்கிறோம். கர்த்தாவே, காலதாமதமாகிவிட்டதென்றும், சூரியன் மேற்கில் மறைந்து கொண்டிருக்கிறதென்றும் நாங்கள் விசுவாசிக்கிறோம். விரைவில் காலம் என்பது இருக்காது. அப்பொழுது காலமும் நித்தியமும் ஒன்றாக இணைந்து, தேவனும் அவருடைய ஜனங்களும் ஒன்றாக இணைந்திருப்பார்கள். தேவனே, அந்த சமயத்தில், கிறிஸ்துவுடன் இணைக்கப்பட்டு, அவருடைய மணவாட்டி என்று அழைக்கப்படுபவர்களில் நாங்களும் ஒருவராக எண்ணப்பட வேண்டுமென்று ஜெபிக்கிறோம். நாங்கள் இன்று ஆயத்தமாகிக் கொண்டிருக்கும்போது, எங்களுக்கு உதவி செய்யும். நாளை என்ன நடக்குமென்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் கர்த்தாவே, அது நீர் எங்களுக்காக வைத்துள்ளது என்று நாங்கள் அறிந்துள்ள வரைக்கும், நாங்கள் எதையும் ஏற்றுக்கொள்ளத் தயாராயிருக்கிறோம். இந்த ஆசீர் வாதங்களை தேவனுடைய மகிமைக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். (நீங்கள் உட்காரலாம்). 3நான் உள்ளே நடந்து வந்தபோது, கர்த்தரை ஆராதிப்பதற் கென ஜனங்கள் ஒன்று கூடியுள்ளதைக் கண்டுமிக்க மகிழ்ச்சியடைந்தேன். இன்றிரவு சுகமளிக்கும் ஆராதனை ஒன்றிருக்கும். நாங்கள் வியாதியஸ்தருக்காக இன்றிரவு ஜெபிப்போம். சற்று நேரத்துக்கு முன்னால் நான் உள்ளே நுழைந்தபோது, என் மகன் பில்லி, 'அப்பா, எளிய நிலையிலுள்ள ஒருவர் இங்கிருக்கிறார். அவர் வெகு தூரத்திலிருந்து காரோட்டி வந்திருக்கிறார். அவரை அறையில் உட்கார வைத்திருக்கிறேன்'' என்றான். 4நேற்றிரவு நான் தாமதமாக வீடு திரும்பினேன். எனவே இன்று காலை நான் பேச நினைத்திருந்த ஞாயிறு பள்ளிபொருளைக் குறித்து அதிகம் படிக்கவில்லை. ஏதோ ஒரு சகோதரன் பேச நான் கேட்டதை ஆதாரமாகக் கொண்டு, ஒரு சில குறிப்புகளை மாத்திரம் நான் எழுதி வைத்துக்கொண்டு, இன்று காலைக்கான ஞாயிறு பள்ளி பாடத்துக்கென ஒரு பொருளைத் தெரிந்துகொண்டு, மாலை ஆராதனைக்கு நன்றாக ஆயத்தம் செய்யலாமென்று எண்ணினேன். பில்லி என்னிடம், “வியாதியாயுள்ள ஒரு மனிதன் அங்கிருக்கிறார். நீங்கள் சென்று அவரைப் பார்த்தால் நலமா யிருக்கும்'' என்றான். நான் சற்று முன்பு அறைக்குள் சென்றேன். அவர் ஏறக்குறைய என் வயதுள்ள சகோதரர். அவரும் அவருடைய மனைவியும் அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தனர். சற்று முன்பு பரிசுத்த ஆவியானவர் அறைக்குள் எங்கள் மத்தியில் இறங்கி வந்தார். சற்று யோசித்து பாருங்கள், சுகமளிக்கும் ஆராதனையைப் பற்றி கூறியவுடனே அவர் அங்கு வந்துவிட்டார். பாருங்கள்? அவர் அந்த சகோதரனிடம், அவர் என்னவெல்லாம் செய்தாரென்றும், அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றும், அவருக்கு இத்தொல்லை நேரிடக் காரணம் என்னவென்றும், அவர் எங்கிருந்து வருகிறாரென்றும் அவரைக் குறித்த எல்லா விவரத்தையும் கூறினார். ஒரு பெரிய இருண்ட நிழல் அந்த அறையில் தொங்கிக் கொண்டிருந்தது. அது சிறிது சிறிது சிறதாக வெளுப்பாகத் தொடங்கினது; முடிவில் பரிசுத்த ஆவியானவர் ஆதிக்கம் கொண்டார். 5அந்த மனிதன் இங்கு எங்கோ பின்னால் இருக்கிறார் என்று நினைக்கிறேன். அவரும் அவருடைய மனைவியும் ஒருக்கால் கட்டிடத்துக்குள்வராமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் எப்படியும் ஆராதனைக்குத் தங்கப் போவதாக கூறினார்கள். அவர்கள் வாஷிங்டனிலுள்ள யாகிமாவி லிருந்து காரோட்டி இங்கு வந்துள்ளனர். அவர் சுவிசேஷ ஊழியர். அவர் மனநல மருத்துவவிடுதியில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். பரிசுத்த ஆவியானவர் இதையெல்லாம் வெளிப்படுத்திக் கொடுத்த கிருபையைப் பாருங்கள். மருத்துவர்கள் அவருக்கு தங்களால் இயன்ற எல்லாவற்றையும் செய்தனர். ஆனால் அந்த நிலையை மாற்றி அமைக்க தேவனிடமிருந்து ஒரு சிறுதொடுதல் அவசியமாயிருந்தது. அதிர்ச்சி சிகிச்சை நல்லதுதான். ஆனால் “இருளில் சுடுதல்' என்று நாம் கூறுவது போல் அது உள்ளது. நீங்கள்... அது உங்கள் நிலையை மோசமாக்கவும் செய்யக்கூடும் (பாருங்கள்?), ஏனெனில் உங்கள் நினைவில் உள்ளதையும் கூட நீங்கள் மறக்கும்படி அது செய்து விடும் - அவர்கள் அந்த மருந்தை உட்புகுத்தும் போது. ஆனால் தேவனாகிய கர்த்தர், அவருடைய கிருபையும் இரக்கமும்... நான் ஒரு வார்த்தை ஜெபிப்பதற்கு முன்பே, அவர் குணமடைந்து விட்டார். பாருங்கள்? அதைச் செய்ய தேவனு டைய பிரத்தியேக ஒன்று - தேவனுடைய பிரத்தியேக தொடுதல் - அவசியமாயிருந்தது. இதை நான் கூறியிருக்கக்கூடாது ... ஆம், அவர் இங்கிருக்கிறாரா என்று நான் பார்க்கிறேன். என்ன ? உம்மால் இன்று வரமுடியுமா இல்லையாவென்று எனக்குத் தெரியவில்லை. 6இந்த வாரம் நான் தங்கியிருந்த நகர்புறத்தில் அங்குள்ள என் நண்பர்களை நான் மிகவும் நேசிக்கிறேன். இந்த பெரிய கூட்டங்களுக்கு முன்பு அது எனக்கு சிறு விடுமுறை. பாருங்கள்? அந்த சகோதரர்களுடன் அணில் வேட்டைக்கு செல்வதற்காக நான் வீடுதிரும்பி அங்கு செல்லவிருக்கிறேன். நான் அங்கு தங்கும் குடும்பம் - இல்லை, குடும்பங்கள் - மிகவும் அருமையானவர்களைக் கொண்டது. அந்த மனிதன் உண்மையான சகோதரன், நண்பன் - அவர்கள் எல்லோருமே . அவர்களில் ஒருவர் வேட்டை நாய்கள் வளர்ப்பதில் அதிகப் பிரியம் கொண்டவர். அவர் ஒரு பட்டி நிறைய நாய்களை வைத்திருக்கிறார். அங்கு மிகவும் அழகான சிறு வேட்டை நாயைக் கண்டேன். அது சாதாரண நாயின் பாதி அளவு உயரமும், இரண்டு மடங்கு நீளமும் கொண்டது அவை வீடு முழுவதும் ஓடித்திரிகின்றன. ''அப்படிப்பட்ட ஒன்றை வளர்ப்பதில் ஜோவுக்கு மிகவும் பிரியமாயிருக்கும் அல்லவா?'' என்று எண்ணினேன். 7ஆனால் அரிசோனாவில் அது எனக்கு உபயோகமிராது. அது முட்செடிகளில் சிக்கிக் கொள்ளும். அதுவே அதன் முடிவா யிருக்கும். நான், 'இந்த நாய்களை அங்கு வளர்க்க முடியாது ... அந்த பாகத்தில் அவர்கள் நாய்களை வளர்ப்பதில்லை. ஏனெனில் அவை.... அந்த நகரின் சீதோஷ்ண நிலையும்- அங்கு முட்செடிகள் வளருகின்றன. நாய்கள் முட்செடிகளில் சிக்கிக்கொண்டு செத்துவிடும். அது மாத்திரமல்ல, அவை வெளியே சென்றால் ஓநாய்கள் அவைகளைக் கொல்ல வகையுண்டு'' என்றேன். அந்த மனிதன், ''வேண்டுமானால் நீங்கள் இந்த நாயை எடுத்துச் செல்லுங்கள்'' என்றார். என்னால் முடியாது. அவரை நான் பாராட்டினேன். அது அவருக்கு மிகவும் விருப்பமான நாய்களில் ஒன்று என்று பிறகு கேள்விப்பட்டேன். 8இந்த மனிதனுக்கு அருமையான மனைவியும் சிறுபிள்ளைகளும் உள்ளனர். அன்றொரு நாள் அவன் தன் ஓல்ட்மோபைல் காரை பின்புறம் ஓட்டின்போது, அந்த நாய்க்குட்டியின் மேல் அது ஏறி அதை நசுக்கிவிட்டது. அவள் அதை மிருக மருத்துவ சாலைக்கு கொண்டு செல்வதற்கு பதிலாக.... அந்த மருத்துவ சாலையில் அவர்கள் உறக்கமருந்து கொடுத்து அதை கொன்றிருப்பார்கள்... வேறொரு இளைஞன் என்னுடன் இருந்தான். அவன் அங்கு அடைந்தவுடன், ''இது என் நாயாயிருந்தால், அதை சுட்டுக் கொன்றிருப்பேன். இப்படியா அதை வேதனை அனுபவிக்கவிடுவது'' என்றான். நான், ''அதை சுட்டுக் கொல்ல வேண்டாம். சிறிது நேரம் காத்திருப்போம்' என்று கூறி, எல்லோரையும் வெளியே போகும்படி செய்துவிட்டு, அந்த நாய்க்குட்டிக்காக ஜெபித்தேன். அது குணமடைந்து, முன் தாழ்வாரம் வரைக்கும் என் பின்னால் வந்தது. பாருங்கள்? ''நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக் கொள்வோம் என்று விசுவாசியுங்கள். அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும்'' (மாற். 11:24). எவைகளை! அது தான் நம்முடைய தேவன், இல்லையா? அவர் ஆச்சரியமானவர், அற்புதமானவர். அவரை இன்று காலை நாம் நிச்சயமாக நேசிக்கிறோம், அவரை நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்... 9பாருங்கள், அன்றொரு நாள், ஒரு வயோதிப தம்பதிகள், இந்த விசுவாசிகளின் சபையில் சிறந்த அங்கத்தினராக விளங்கும் ஒருவரின் தாயும் தந்தையும், தாய்க்கு சுமார் நூறு வயதிருக்கும் என்று நினைக்கிறேன். இந்த மனிதன் ஏறக்குறைய பன்னிரண்டு ஆண்டு காலமாக நடக்கமுடியாமல், மல்லாந்து படுத்துக் கொண்டிருந்தார். அவரால் ஒருக்களித்துக் கூட படுக்க முடியாது. பன்னிரண்டு ஆண்டு காலமாக அந்நிலையில் படுத்திருந்தார் - வயோதிபமே அதற்கு காரணம். தாய்க்கு ஏறக்குறைய அவருடைய வயது, நூறு வயதுக்கு அருகாமையில் இருக்கும் என்று நினைக்கிறேன். பாவம் அந்த ஏழை அம்மாளுக்கு புத்தி சுவாதீனம் போய்விட்டது. யாரோ அவர்களுடைய பொருட்களை எல்லாம் எடுத்துக்கொள்வதாக கற்பனை செய்து கொள்வார்கள். நாங்கள் எல்லோரும் - வாலிபரும் வயோதிபரும் - மேசையில் உட்கார்ந்துகொண்டிருந்த போது நான், ''நாம் எங்கு சென்று கொண்டிருக்கிறோம்? நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?'' என்று கேட்டேன். நான் தங்கியிருந்த வீட்டின் ஸ்திரீயின் பெற்றோர் தான் இந்த வயோதிப தம்பதிகள். நான் அவளைப் பார்த்து, “நீயும் கூட அந்த வழியில் தான் சென்று கொண்டிருக்கிறாய்'' என்றேன். அது முற்றிலும் உண்மை , நாம் எல்லோருமே . பாருங்கள்? 10இன்றைய பாடத்தை துவங்குவதற்கு முன்பு இதை சற்று யோசித்து பாருங்கள். அதை நோக்கியே நீங்கள் சென்று கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் எதற்காக தவித்துக் கொண்டிருக்கிறீர்கள்? உயிர் வாழ . நீங்கள் எதற்காக உயிர் வாழ்கின்றீர்கள்? மரிப்பதற்காக. அப்படியிருக்க, தேவன் நமக்கு அளித்துள்ள நித்திய ஜீவனை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது மூடத்தனமான செயலாயிருக்குமல்லவா? அதைக் குறித்து நாம் என்ன நினைக்கிறோம்? அதிலிருந்து நமது கவனத்தை வேறொன்றுக்கு இழுக்கும்படியாக நமது சிந்தையில் என்ன உள்ளது? உங்களுக்கு கோடிக்கணக்கான டாலர்கள் இருந்து, நீங்கள் இந்தியானாவை அல்லது வேறெந்த நாட்டை அல்லது முழு உலகத்தை சொந்தமாக வைத்திருந்தாலும், அதனால் என்ன பயன்? போதிய நாட்கள் வாழ்ந்தபின்பு, நீங்களும் மரிக்க வேண்டிய இடத்துக்கு வரவேண்டியவர்களாயிருக்கிறீர்கள். பாருங்கள்? ஒவ்வொரு நாளும், உங்கள் இருதயம் விடாமல் துடிக்கம் போதெல்லாம், நீங்கள் வெற்றியடையப்போவதில்லை. நீங்கள் தோல்வியடையும் பக்கத்தில்தான் இருக்கிறீர்கள். நீங்கள் இழக்கத்தான் வேண்டும். ஆனால் தேவனுடைய வாக்குத்தத்தம், ''என் நிமித்தமாக தன் ஜீவனை இழந்து போகிறவன் அதை இரட்சித்துக்கொள்வான்'' என்றுரைக் கிறது. (மாற் 8:35). ஜீவனைக் காட்டிலும் மேலான பொக்கிஷம் வேறெது உள்ளது? நீங்கள் உலகம் முழுவதையும் உங்கள் சொந்தமாக்கிக்கொண்டிருந்தாலும், நீங்கள் ஜீவனை பெறுவீர்களானால் உலகிலுள்ள மிகப்பெரிய பொக்கிஷத்தை கண்டுபிடித்தவர்களாயிருப்பீர்கள். 11இப்பொழுது என் பாடத்துக்க வர விரும்புகிறேன். சற்று முன்பு கர்த்தருடைய கிருபையின் மற்றொரு பரிசைக்கண்டேன். சில வாரங்களுக்கு முன்பு என்னைத் தொலைபேசியில் கூப்பிட்டார்கள். இச்சபையின் அருமையான அங்கத்தினர் ஒருவர்.... இதை சபை என்ற அழைக்க நான் விரும்பவில்லை. இதை நான் ... நான் சிலரிடம் பேசிக்கொண்டிருந்தேன், அவர்கள், ''நீங்கள் எந்த சபையைச் சேர்ந்தவர்கள்?'' என்று கேட்டார்கள். நான், “எந்த சபையையும் இல்லை'' என்றேன். அவர்கள், ''நீங்கள் எந்த ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர்கள்? என்றார்கள். நான், “ஒரு ஸ்தாபனத்தையும் சேரவில்லை'' என்றேன். அவர்கள், 'அப்படியானால் நீங்கள் எதை சேர்ந்தவர்கள்!'' என்றார்கள். நான், ''ஒரு ராஜ்யத்தை, ஒரு ராஜ்யத்தை!'' என்றேன். நாம் எல்லோரும் ஒரே ஆவியினால் அந்த ஒரே ராஜ்யத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக் கிறோம். இயேசு, ''உம்முடைய ராஜ்யம் வருவதாக, உம்முடைய சித்தம் பரலோகத்திலே செய்யப்படுகிறதுபோல் பூமியிலேயும் செய்யப்படுவதாக என்று ஜெபம்பண்ணுங்கள்'' என்றார். அவர் மறுரூப் மலையின் மேல் நின்று கொண்டிருந்தபோது, “இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யம் பலத்தோடே வருவதைக் காணுமுன், மரணத்தை ரூசி பார்ப்பதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்'' என்றார். அது மறுரூப மலையின் மேல் முன் கூட்டியே காண்பிக்கப்பட்டது என்று ஏற்கனவே நாம் சிந்தித்திருக்கிறோம். மேலும் வேதாகமம், ”தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறது'' என்கிறது (லூக் 17:21). எனவே இவர்கள் ஒரு ராஜ்யத்தை சேர்ந்த மக்கள், இது இவர்களுடைய வீடல்ல என்ற அறிக்கையிடுபவர்கள். இது நம்முடைய வீடல்ல. ராஜா வந்து ராஜ்யத்தை ஸ்தாபிப்பார் என்று நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். 12நான் ஒருஅவசர கேஸ்க்காக அழைக்கப்பட்டேன். எனக்குத் தந்தையைப் போல் உள்ள வயோதிப சகோதரர் ஒருவர். அவரை எனக்கு நீண்ட காலமாகத் தெரியாது. ஆனால் தண்ணீர் ஞானஸ்நானத்துக்காக அவரைக் கொண்டு சென்ற நாள் எனக்கு நினைவிருக்கிறது. அவருக்கு விரைவில் தொண்ணூற்றொன்று வயதாகும். அவருடைய அருமையான மனைவி என்னை தொலைபேசியில் கூப்பிட்டு - அவர்கள் முன்பு நர்ஸாக பணியாற்றியவர்கள் - அவருக்கு இருதயத் துடிப்பு நின்று விட்டதென்றும்; மேலும் அவருக்கு (ஓ, அந்த பெயர் எனக்கு ஞாபகம் வரவில்லை - மாரடைப்பு (யாரோ ஒருவர் 'கரோனரி' என்கிறார் - ஆசி). நன்றி கரோனரி மாரடைப்பு ) கரோனரி மாரடைப்பு ஏற்பட்டு இருதயத் துடிப்பு முழுவதுமாக நின்று விட்டதாகவும், மருத்துவர் அவரைக் கைவிட்டதாகவும், அவர் மரணத் தருவாயிலிருக்கிறா ரென்றும் கூறி என்னை அழைத்தார்கள். 13நான் என் பழைய ஃபோர்ட் காரில் ஏறி, என்னால் முடிந்தவரை ஓஹையோவுக்கு செல்லும் சாலையில் வேகமாக சென்றேன். சக்கரங்களில் ஒன்று சரியாக பொருத்தப்பட்டிருக்கவில்லை என்பதை நான் அறியவில்லை. அதன் விளைவாக டயர் அதிலிருந்து வெளியே வந்து விட்டது. எனவே நான் பெட்ரோல் நிறைக்கும் ஸ்தலத்தை அடைந்து, அதை விட்டு வெளியே வரும்போது 11.00 மணி ஆகிவிட்டது. நான் அவரைக் குறித்து கவலைகொள்ளத் தொடங்கினேன். அவரை நான் நேசிக்கிறேன். இது இப்படியே தொடர்ந்து கர்த்தருடைய வருகை தாமதிக்குமானால், நாம் ஒருவரையொரவர் இழக்கவேண்டிய நிலை ஏற்படும் என்றறிவேன். ஆனால் அது எடுத்துக்கொள்ளப்படுதலைப் பாதிக்காது. பாருங்கள்? இல்லை. நித்திரையடைந்தவர்கள் முதலாவதாக எழுந்திருப்பார்கள். அவர்கள் முதலில் சென்ற சிலாக்கியம் பெற்றவர்கள். அவர்கள் முதலில் வருவார்கள். பாருங்கள் கர்த்தருடைய வருகை மட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை. தேவ எக்காளம் தொனிக்கும், அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். அப்பொழுது நமக்கு அருமையானவர்களை நம் கண்கள் காணும். பின்பு நாம் ஒரு நிமிஷத்தில் ஒரு இமைப் பொழுதில் மறுரூபமாகி, அவர்களோடே கூட ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படு வோம். பாருங்கள், முதலில் சென்றவர்கள் உயிரோடிருப் பவர்களைக் காட்டிலும் சிலாக்கியம் பெற்றவர்கள். 14நான் பெட்ரோல் நிறைக்கும் இடத்திலிருந்து 11.00 மணிக்குப்புறப்பட்டபோது பரிசுத்த ஆவி என்னிடம், 'அவரைக் குறித்து கவலைப்படாதே. நீ மறுபடியும் அவருடன் தெருவில் கைகுலுக்குவாய். அவர் சபைக்கு வருவார்'' என்றார் - மரணத் தருவாயிலிருந்த தொண்ணூற்றொன்று வயதான மனிதர். அவருடைய மனைவியையும் அவருக்கு அன்பார்ந்தவர் களையும் மருத்துவமனையில் நான் சந்தித்தபோது, அவருடைய உடல் நிலையை அவர்கள் எடுத்துக் கூறினர். நாங்கள் அவரைக் காண உள்ளே சென்றோம். அப்பொழுது அங்கிருந்தவர், ''வினோதமான ஒன்று நடந்தது. அவர் உடல் நிலை 11.00 மணி முதல்தேறத் துவங்கினது'' என்றார். நல்லது, அது... நான் .... கர்த்தர் அவர்களுக்கு எத்தனையோ அற்புதங்களைக் காண்பித்திருக்கிறார். அதைக் குறித்து நான் அவர்களிடம் கூறவில்லை, அவர்களே அதை முதலில் கூறினார்கள். அவர் தேறத் துவங்கினார்; நான் அவர்களிடம் உண்மையையே கூறுவேன் என்று அவர்கள் அறிந்திருந்தனர். சென்ற ஞாயிறு நான் லூயிவில்லிலுள்ள ப்ளு போர் உணவு விடுதிக்கு சென்றிருந்தபோது - ஞாயிறு பிற்பகலில் உணவு உண்ண இந்த சபையோரில் எண்பது சதவிகிதம் பேர் அங்கு தான் கூடுகின்றனர் - தெருவில் வருவதை நான் கண்டது யாரென்று நினைக்கிறீர்கள்? நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். சகோதரன் டோ தெருவில் வருவதை நான் கண்டபோது, என் இருதயம் களிப்பினால் துள்ளியது. அவர் எனக்கு சொன்னபடியே நடந்தது. நான் அவருடன் தெருவில் கைகுலுக்கினேன். 15சென்ற ஞாயிறு நான் இங்கு வந்து ''இணையும் நேரமும் அடையாளமும் என்னும் பொருளின் பேரில் பேசினேன். எனவே அவர் உரைத்தது அவ்வாறே நிறைவேறினது. இதோ அவர் தேவனுடைய கிருபையின் பரிசாக இன்று சபையில் நமது பக்கத்தில் அமர்ந்து கொண்டிருக்கிறார். அவர் பிராணவாயு கூடாரத்தில் இருந்தபோது, அவருடன் நான் கைகுலுக்கி, சகோ. டோ, நீங்கள் நன்றாகி விடுவீர்கள். நான் மறுபடியும் உங்களைச் சபையில் காண்பேன். அது கர்த்தர் உரைக்கிறதாவது என்றேன். பாருங்கள்? இதோ அவர் இப்பொழுது சபையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்- சகோ. டோ. 16நான் தவறாகக் கூறவில்லையென்றால், சற்று நேரத்துக்கு முன்பு நான் குறிப்பிட்ட போதகர் இவர் என்று நினைக்கிறேன். பரிசுத்த ஆவி உள்ளே வந்து, எல்லாவற்றையும் வெளிப்படுத்திக் கொடுத்து, அது எப்படி நடந்ததென்றும், அவருடைய குடும்பத்தாரின் குணாதிசயங்களையும் மற்றெல்லாவற்றையும் அவருக்கு அறிவித்து, அது முடிந்து விட்டதென்றும் கூறினார். இதோ அந்த போதகர் இங்கு வலது பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார் ஐயா, உங்கள் கையை சற்று உயர்த்துவீர்களா? அதோ அவரும் அவருடைய மனைவியும் - சற்று முன்புதான். இதோ சகோ. டோ இப்பொழுது இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறார். ஓ, என்னே , அவர் அற்புதமானவர் அல்லவா? முன் நடந் தவை, இப்பொழுது நடக்கிறவை, இனி நடக்கப் போகிறவை. ஒன்று, இரண்டு, மூன்று சாட்சிகள் - முன் நடந்தவை நீங்கள் முன்பு செய்தவை ; இப்பொழுது நடந்து கொண்டிருப்பவை; இனி நடக்கப்போகிறவை. ஒவ்வொரு முறையும் அது வார்த்தையுடன் இணையாயுள்ளது. தேவன் மாத்திரமே அதை செய்யக்கூடும். ஓ, இவைகளுக்காக நாம் மிக்க மகிழ்ச்சி கொண்டவர்களாயிருக்கிறோம் அல்லவா? 17நான் சிறிது கூடுதலான நேரத்தை எடுத்துக்கொள்ளும் காரணம் என்னவெனில், பில்லி சென்று அவன் மனைவியையும் குழந்தையையும் கூட்டிக்கொண்டு வர வேண்டும். அவன், ''அப்பா, நான் திரும்பி வரும் வரைக்கும் பிரசங்கத்தை துவங்க வேண்டாம்'' என்று கூறிச் சென்றான். அவன் திரும்பி வந்துவிட்டான் என்று நினைக்கிறேன். நானும் அதிக நேரம் எடுத்துக்கொள்ளக்கூடாது. உங்களை நான் நான்கு மணி நேரம் வழக்கமாக தொல்லை செய்வதை நிறுத்திக் கொண்டு பிரசங்கத்தை முப்பத்தைந்து அல்லது நாற்பது நிமிடங்கள் மாத்திரம் நிகழ்த்தலாம் என்றிருக்கிறேன். (பாருங்கள்?) ஒருமுறை நான் சிக்காகோவில் முப்பது, முப்பத்தைந்து நிமிடங்கள் மாத்திரமே பிரசங்கித்தபோது, ஜனங்கள் அதைக் குறித்து பேசத் தொடங்கினர். சென்ற ஞாயிறு இரவு அது நாற்பத்தைந்து நிமிடங்கள் மாத்திரமே. அப்பொழுது பில்லி, ''அப்பா, நீங்கள் உண்மையில் முன்னேறிக் கொண்டு வருகிறீர்கள். அதற்காக உங்களைக் குறித்து நான் பெருமை கொள்கிறேன் என்றான். நல்லது, இன்று காலை இதை சிறு ஞாயிறு பள்ளி போதனையாகச் செய்வோம்..... உங்களை நீண்ட நேரம் நான் வைத்திருக்கப் போவதில்லை. நீங்கள் நேரத்தோடு சென்று பகல் உணவை அருந்தி, ஜெபித்து, மறுபடியும் இன்றிரவு சுகமளிக்கும் ஆராதனைக்கு வரலாம். இன்றிரவு நாங்கள் ஜெபவரிசையை அமைத்து, வியாதியஸ்தருக்காக ஜெபிக்கப் போகின்றோம். 18சுற்று, வட்டாரத்தில் நீங்கள் அறிந்த யாராகிலும் வியாதியா யிருப்பதை நீங்கள் அறிந்த, அவர்களுக்கு ஜெபம் தேவைப் பட்டால், அவர்களை இன்றிரவு இங்கு கொண்டு வாருங்கள். பாருங்கள்? அவர்களை எவ்விதத்திலாவது கொண்டுவர முடியும்மானால், இங்கு கொண்டு வாருங்கள். பாருங்கள்? இன்றிரவு அவர்களை இங்கு கொண்டு வருவதே முக்கியமான காரியம். நாம் எல்லோரும் ஒன்றாக சந்திக்கலாம். அழைப்புக்கு இணங்கி ஒவ்வொரு இடத்துக்கும் செல்வது கடினமானது. அப்படிச் செய்யும்போது, யாரையாகிலும் விட்டு விட நேரிடுகிறது, அதன் விளைவாக மனஸ்தாபம் உண்டாகிறது. ஆனால் அவர்கள் எல்லோரையும் என்னால் ஒரே இடத்தில் கொண்டு வரமுடிந்தால், அவர்களுக்காக நான் ஜெபிக்கலாம். 'மக்கள் ஜெபிக்கப்பட விரும்பினால், அவர்களுக்கு ஜெபம் செய்வீர்களா?'' என்று நீங்கள் கேட்கலாம். ஓ, நிச்சயமாக. அவர்களுக்காக ஜெபிக்கப்படும். அவர்களைக் கொண்டு வாருங்கள். கர்த்தருக்கு சித்தமானால், ஒவ்வொருவருக்காகவும் ஜெபிக்க நாங்கள் இங்கிருப்போம். ஏனெனில் மூன்றாம் இழுப்பு அசையத் தொடங்கி விட்டது என்பதாக நான் உணருகிறேன். பாருங்கள்? அது இப்பொழுது எனக்குள் இருக்கிறது. நான் ஒவ்வொருவருக்காகவும் ஜெபிக்க விரும்புகிறேன். 19இன்று, காலையில் நமக்கு நன்றாகத் தெரிந்த வேதவாக்கியத்துக்கு நாம் திருப்புவோம். நேற்றிரவு அதை அவசரத்தில் தேர்ந்தெடுத்தேன். எனக்கு அதிக உறக்கம் வந்தது. எனவே இதனுடன் சம்பந்தப்பட்ட இன்னும் சில வேத வாக்கியங்களை குறித்து வைத்துக்கொண்டேன். ஒரு முறை ஒரு சகோதரர் இந்த பொருளை உபயோகிப்பதைக் கண்டேன். நான் நினைத்தேன் .... நான் குறித்துக்கொண்டேன். ''அதை குறித்துக்கொள்ளலாம். அது எப்பொழுதாவது நமக்கு உபயோகமாயிருக்கும்'' என்று எண்ணினேன். அநேக முறை நாம் அப்படி குறித்துக்கொள்வது வழக்கம். உங்களில் அநேகர்தாளை வைத்துள்ளதைக் காண்கிறேன். போதகர் கூறும் ஒன்று உங்களுக்கு முக்கியமானதாய் தோன்றக்கூடும், அது உங்கள் இருதயத்தைக் தொடக்கூடும். பரிசுத்த ஆவி அப்படி செய்வாரானால், அதிலிருந்து நீங்கள் தொடங்கி, கர்த்தருக்கென்று ஒரு செய்தியை உருவாக்கக் கூடும். அது நல்லது தான். நான் செல்லும் இடங்களிலெல்லாம், போதகர்களும் மக்களும் குறித்துக் கொள்வதை நான் கண்டிருக்கிறேன். அது நல்லது, அதற்காகத் தான் நாம் இங்கிருக்கிறோம் - இந்த பாதைகளில் ஒருவருக் கொருவர் உதவிசெய்ய . 20இப்பொழுது வெளிப்படுத்தல் 3ம் அதிகாரத்திலுள்ள சபை காலங்களுக்குத் திருப்புவோம் - ஒவ்வொரு சபைக் காலத்தைக் குறித்தும் அதில் சொல்லப்பட்டிருக்கிறது. இப்பொழுது நாம் அங்கு... இந்த ஒரு பொருளைநான் தெரிந்து கொண்ட - நான் தெரிந்து கொண்ட இந்த பொருளை பரிசுத்த ஆவியைக் கொண்டு அதன் பேரில் நூறு ஆண்டுகள் பிரசங்கித்து, அப்பொழுதும் அதிலுள்ள எல்லாவற்றையும் என்னால் எடுத்துக் கூற இயலாமல் போகும், ஏனெனில் இந்த பொருள், வேதத்திலுள்ள மற்றபொருள்களைப் போல், ஒன்றோடொன்று இணைந்துள்ளது. இன்று காலை தான், நான் எப்படி ஜெயங்கொள்வது? என்பதை என் பொருளாகத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இதை நான் தெரிந்துகொள்ளக் காரணம் - எழுப்புதலின் ஆவியை நாம் அணைந்து போகச் செய்யக்கூடாது என்பதே. நாம் எழுப்புதலை கொண்டவர்களாய், அதை ஒவ்வொரு நாளும் எரியச் செய்ய வேண்டும். கிறிஸ்து அவனுக்குள் ஜீவிப்பதற்காக அவன் அனுதினமும் சாகவேண்டியிருந்ததாக பவுல் கூறுகிறான். நாமும் நமக்குள் இருக்கும் எழுப்புதலை சாக விட்டு விடக்கூடாது. இப்பொழுது வெளிப்படுத்தல் 3ம் அதிகாரம், 21ம் வசனம் முதல் படிக்கலாம். நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடே கூட உட்கார்ந்தது போல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடே கூட உட்காரும்படிக்கு அருள் செய்வேன். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது என்றார். 21நீங்கள் கவனித்தீர்களா - அதன் அமைப்பை? பாருங்கள்? ''என்னுடைய சிங்காசனத்திலே உட்காரும்படிக்கு“ (in my throne), ''என்னுடைய சிங்காசனத்தின் மேல்'' என்றல்ல (on mythrone). அது அவருடைய ஆதிக்கம். பாருங்கள்? கிறிஸ்து அந்த நேரத்தில் தேவனுடைய முழு ஆதிக்கத்தையும் ஆளுகை செய்யும்போது சபை அவருடன் கூட இருக்கும், மணவாட்டி முழு ஆதிக்கத்திலேயும் அவருடைய சிங்காசனத்திலே அவருடன் கூட இருப்பாள். பாருங்கள்? ” என்னுடைய சிங்காசனத்தின் மேல்'' அல்ல, ஆனால் 'என் சிங்காசனத்திலே.“ பாருங்கள்? அவருடைய ஆதிக்கம் பரந்துள்ள இடமெல்லாம். சிங்காசனம் ஆதிக்கத்தின் மேல் உள்ளது. அவருடைய ஆதிக்கம் அதன் எல்லைகள் வரைக்கும் பரந்துள்ளது. இது நித்தியத்திலிருந்து நித்தியம் வரைக்கும். அதை யோசித்துப் பாருங்கள். 22இதை நாம் ஆராயும் போது; என் நோக்கம் இங்கு வந்து ஜனங்களாகிய உங்களிடம் ஐக்கியங்கொள்ளுதல் அல்ல. அப்படி செய்ய எனக்குப் பிரியம். எனக்குத் தருணம் கிடைக்குமானால், உங்கள் வீடுகளுக்கு வந்து, உங்களுடன் கைக்குலுக்கி , உங்களுடன் உரையாடி, உங்களுடன் உணவு உண்டு, மரத்தின் நிழலில் சிறிது நேரம் உறவாடி ஐக்கியங்கொள்ளுவேன். ஆனால் இங்கு நாம் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் வந்திருக்கிறோம். இது திருத்தப்படுதலின் வீடு. இது தேவனுடைய சிங்காசனம். தேவனுடைய வீட்டிலிருந்து நியாயத்தீர்ப்பு புறப்பட்டுச் செல்கிறது. இங்குதான் நாம் ஒருவரிலொருவர் அன்பு கூர்ந்து ஒன்றுகூடுகிறோம். கிறிஸ்தவர்கள் மாத்திரமே அவ்வாறு அன்பு கூறமுடியும். இங்கு நாம் பரிசுத்த ஆவியின் தலைமையின் கீழ் இருக்கிறோம். நாம் எந்நிலையில் இருக்கிறோம் என்றும், நமது குறைகள் என்னவென்றும், நாம் எந்த நிலையை அடையவேண்டும் என்றும் இங்கு நாம் கணக்கு பார்க்க வேண்டியவர்களாயிருக்கிறோம். அதைத்தான் நாம் ஆராய வேண்டும். போதகர்கள் தங்கள் மக்களுக்காக அந்த இடங்களை ஆராய்கின்றனர். மக்களின் குறைகளை அவர்கள் காணும்போது, அதை திருத்த முயல்கின்றனர். 23விரைவில் சபையானது ஒரு படி உயர செல்ல வேண்டும் என்பது என் கருத்து. இன்று காலை அவைகளை காண்பிக்க நான் திட்டமிட்டிருக்கவில்லை. ஆனால் விரைவில், கர்த்தருக்கு சித்தமானால், நான் எக்காளங்களைக் குறித்து பிரசங்கிப்பதற்கு முன்பு, நீங்கள் அறிய வேண்டுமென்று நான் கருதுபவைகளை சபைக்கு கொண்டுவர எத்தனித்துள்ளேன். 24இப்பொழுது நாம் ஜெயங்கொள்ளுதலைக்குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம். ஜெயங்கொள்ளுதல் என்னும் சொல்லுக்கு அர்த்தம் உங்களுக்கு தெரியும். நீங்கள் ஏதாவதொன்றின் மேல் ஜெயங்கொள்ளவேண்டும். பரிசுத்த ஆவியானவர் லவோதிக்கேயா சபையைக் குறித்து பேசும்போது (அதை நாம் சற்று முன்பு பார்த்தோம், அதற்கு கடிந்து கொள்ளுதல் அவசியமாயிருந்தது. லவோதிக்கேயா சபை கிறிஸ்துவினிடம் நடந்து கொண்ட விதத்துக்காக கடிந்து கொள்ளப்பட வேண்டியதாயிருந்தது, அது அதன் காலத்தில் கிறிஸ்துவை வெளியே தள்ளிவிட்டது. கிறிஸ்து வெளியே இருந்து கொண்டு உள்ளே வர முயற்சிசெய்கிறார். அது அன்பு. அவர் தமது சொந்த வீட்டிலிருந்து புறம்பாக்கப்பட்ட பின்பு, உள்ளே வர முயற்சித்து “ஒருவன் கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசிப்பேன்'' என்கிறார். பாருங்கள்? முழு சபையுமே அவரைப் புறம்பாக்கிவிட்டது. அப்பொழுது கவனியுங்கள், அவருடைய அழைப்பு சபைக்கல்ல. 'ஜெயங்கொள்ளுகிறவன் எவனோ. ''சபையல்ல, சபை பெண்ணாக வர்ணிக்கப்பட்டிருக்கும் (பாருங்கள்?) - சபை உறுப்பு. ஆனால் ஜெயங்கொள்ளுகிறவன் எவனோ - ஜெயங்கொள்ளும் தனிப்பட்ட நபர். லவோதிக்கேயாவுக்கு அது நேர்ந்தது. 25அது லவோதிக்கேயா சபையின் காலம் என்றும், இந்த காலத்துக்கு தேவனிடமிருந்து கடினமான கடிந்து கொள்ளுதல் அவசியமென்றும் நாம் அறிகிறோம். அதற்கு கடினமான கடிந்து கொள்ளுதல் அவசியம். குருவானவர்கள் மிருதுவாகி, பாட்டனார் பேரப்பிள்ளைகளுக்கு செல்லம் கொடுத்து, அவர்கள் எது செய்தாலும் சரி என்று கூறுவது போல்... தேவன் மிகவும் நல்லவர் என்று கூறி, அவர்கள் அவரை செல்லம் கொடுக்கும் பாட்டனாராகச் செய்துவிடுகின்றனர். பாருங்கள்? அவர் அப்படியல்ல. அவர் பிதா, நீதியுள்ள பிதா, திருத்தும் பிதா, அன்பு எப்பொழுதுமே திருத்துகிறது. பாருங்கள்? அன்பு திருத்துகிறது. அது எவ்வளவுதான் நோகச் செய்தாலும், அது திருத்தும் தன்மை வாய்ந்தது. ஒரு உண்மையான தாய் பிள்ளைகளைத் திருத்துவாள்; அப்படியே ஒரு உண்மையான தகப்பனும் திருத்துவான். பாருங்கள், நீங்கள் மிருதுவாகி, செல்லம் கொடுத்து, அவர்கள் எதையும் செய்ய அனுமதித்தால்... 26ஒரு சிற்றோடையை ஒரு மரக்கட்டையின் மேல் நான் நடந்து கடக்க நேர்ந்தது. அந்த மரக்கட்டையின் மேல் நான் குதித்தேன். வெளிப்புறத்தில் காண அது நன்றாக இருந்தது - வலிமையான மரக்கட்டையைப் போல். ஆனால் நான் அதன் மேல் குதித்தபோது, ஒரு பெரிய துண்டு உடைந்து விழுந்தது. அது உண்மையில் அரிக்கப்பட்டு மிருதுவாய் இருந்தது. கிறிஸ்தவர்களும் அப்படித்தான் ஆகி வருகிறார்கள்“ என்று நினைத்துக் கொண்டேன். அவர்கள்அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் நீண்டகாலமாக மரித்து, மிருதுவாகி விட்டார்கள். அவர்களால் எந்த பளுவையும் தாங்க முடியாது. ஜெயங்கொள்ளுதல் என்றால் என்னவென்று அவர்களுக்குத் தெரியாது. அப்பொழுது இப்பொருளைக் குறித்து சிந்திக்க ஆரம்பித்தேன். ஜெயங்கொள்ளுதல், உங்களுக்குள் ஜீவனைவைத்திருங்கள். ஜீவன் வெளியே சென்றபோது மரக்கட்டை அந்த நிலையை அடைந்தது. பாருங்கள்? அந்த கிளை தண்ணீரில் விழுந்த போது அது இன்னும் மோசமாகிவிட்டது. 27கிறிஸ்தவன் என்று கருதப்படும் ஒருவனை நாம் எடுத்துக் கொள்வோம். தேவனுடைய ஜீவன் அவனைவிட்டுச் சென்றால் கிறிஸ்துவை சேவிப்பதில் களிகூரும் அனுபவத்தைப் பெற்ற சபையில்அவன் இருந்த போதிலும், அவன் இரட்டிப்பு வேகத்தில் அழுகிப்போகிறான் - அப்படிப்பட்ட சபையில் இருந்த போதிலும் (பாருங்கள்? உண்மை !). எனவே இந்நேரத்துக்கான செய்தியை - அல்லது செய்தியின் இந்த பாகத்தையாகிலும் - பின்பற்ற முயலுவோமானால், நாம் எந்நேரமும் கிறிஸ்துவின் ஜீவனைக் கொண்டவர்களாய் வாழ வேண்டும். பாருங்கள்? அப்படி செய்யாமல் போனால், நீங்கள் அங்கேயே தங்கி, இவைகளை நீங்கள் செய்ய வேண்டுமென்று அறிந்திருந்தும் செய்யாமல் போய் விடுவீர்கள், ஒருவன் நன்மை செய்ய அறிந்தவனாயிருந்தும் அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்'' என்று வேதம் கூறுகிறது (யாக். 4:17). நீங்கள் தேவனுடைய ஜீவனிலிருந்து பிரிந்து போகும்போது, மிருதுவாகி அழுகிவிடுகிறீர்கள். எனவே உங்களாலான மட்டும் கிறிஸ்துவின் ஜீவனில் நிலைத்திருக்க பாடுபடுங்கள். அப்பொழுது நீங்கள் கனி கொடுப்பீர்கள். 28நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இக்காலத்தை நாம் காண்கிறோம். இது எல்லா காலங்களைக் காட்டிலும் மிகக் கம்பீரமான காலம். லவோதிக்கேயா சபையின் காலம் எல்லா காலங்களைவிட மிகக்கம்பீரமான காலம். ஏனெனில் இத்துடன் காலம் முடிவடைந்து நித்தியத்துடன் இணைந்துபோகும். அது மாத்திரமல்ல, இது பாவம் பெருகியுள்ளது. மற்றெந்த காலத்தை காட்டிலும் இக்காலத்தில் தான் சாத்தானின் வல்லமையை எதிர்த்துப் போராடுவது மிகவும் கடினமாயுள்ளது. பாருங்கள்? ஆதி சபைகாலங்களில், ஒரு கிறிஸ்துவின் சபையைச் சேர்ந்ததன் நிமித்தமோ, அல்லது கிறிஸ்துவைச் சார்ந்திருந்ததன் நிமித்தமோ தலை வெட்டப்பட்டான். அவன் கொல்லப்பட்டு, தன் துன்பத்திலிருந்து விடுதலையடைந்து, தேவனைச் சந்திக்க வேகமாக சென்று விட்டான். ஆனால் இப்பொழுதோ சத்துரு சபையின் பெயரால் வந்துள்ளதால், அது மிகவும் வஞ்சிக்கத்தக்கதாயுள்ளது. இது வஞ்சகத்தின் பெரிய காலம்... கிறிஸ்து அவ்விதம் கூறியுள்ளார். கடைசி நாட்களில் இவ்விரு ஆவிகளும் ஒன்றுக்கொன்று மிக நெருங்கியிருந்து, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர் களையும் வஞ்சிக்கும் என்று அவர் கூறினார். பாருங்கள், பாருங்கள், பாருங்கள்? கிறிஸ்து கடைசி நாட்களிலுள்ள தெரிந்து கொள்ளப்பட்டவர்களைக் குறித்து கூறியுள்ளார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பாருங்கள்? கூடுமானால் அது தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக அவ்வளவு நெருங்கியிருக்கும். மக்கள் தூய்மையான, பரிசுத்தமான வாழ்க்கை வாழ்ந்து, பாவம் செய்தவர்களாய், விபச்சாரம், மது அருந்துதல், பொய் சொல்லுதல், சூதாடுதல் போன்றவைகளைச் செய்யாமல் அதற்கு அப்பாற்பட்ட வாழ்க்கை வாழ்ந்தும் அதில் இல்லாமல் போகக் கூடும். 29இது கிறிஸ்துவின் தனிப்பட்ட வாழ்க்கையின் காலம். அவருடைய சரீரத்தின் இரசாயனங்கள் - அவருக்குள் இருந்தவை; முதலாவதாக, நீதிமானாக்கப்படுதலின் கீழ் தண்ணீர் ஞானஸ்நானம்; இரண்டாவதாக வெஸ்லியின் மறுபிறப்பின் காலத்தில் பரிசுத்தமாக்கப்படுதல், அது சுத்திகரிக்கிறது; மூன்றாவதாக, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் கீழ், சுத்திகரிக்கப்பட்ட பாண்டம் சேவைக் கென்று நியமிக்கப்படுதல்.... பாருங்கள்? பரிசுத்தமாக்கப் படுதல் (Sanctify) என்னும் சொல்கிரேக்க மொழியில் ஒரு இரட்டை சொல். அது, ''சுத்திகரிக்கப்பட்டு சேவைக்கென்று ஒதுக்கப்படுதல்' என்றும் அர்த்தம் கொண்டது. சேவைக் கென்று ஒதுக்கப்படுதல். பரிசுத்த ஆவி அதை சேவையில் நுழைக்கிறது. பாருங்கள்? 30அசுத்த ஆவி ஒரு மனிதனை விட்டு புறப்படும்போது வறண்ட இடங்களில் அலைகிறது என்று நாம் காண்கிறோம். (மத் 12:43). பரிசுத்தமாக்கப்படுதலில் நம்பிக்கை கொண்டுள்ள பாப்டிஸ்டு, மெதோடிஸ்டு சபைகளுக்கு அதுதான் நிகழ்ந்தது. அசுத்த ஆவி இந்த சபைகளுக்குத் திரும்பி வந்த போது, அந்த வீடு பெருக்கி ஜோடிக்கப்பட்டு இருப்பதை அது கண்டதாக இயேசு கூறினார் - தூய்மையான வாழ்க்கை வாழ்தல். அது நல்லதுதான். ஆனால் அந்த வீடு நிறைக்கப்படாமல், குடி புகாமல், வெறுமையாயிருந்தால், அது தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத் தன்னோடே கூட்டிக்கொண்டு வந்து அங்கு குடியிருக்கிறது. அப்பொழுது அதன் பின்னிலைமை முன்னிலையிலும் ஏழு மடங்கு கேடுள்ளதாயிருக்கும். இந்த வெளிச்சத்தைக் கண்டு அதை பின்பற்றாமல் இருப்பதைக் காட்டிலும் லூத்தரனாகவே இருந்து விடுவது நல்லது. அப்படியே பெந்தெகொஸ்தேயினரும். நான் கூறுவதை நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள். வீடு ஜோடிக்கப்பட்டுள்ளது. 31அன்றொரு நாள் நான் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் ''அநேக பரிசுத்த குழுக்கள் பரிசுத்த ஆவியை 'ஹோலி கோஸ்ட்' (HolyGhost) என்று அழைக்காதபடிக்கு கவனமாயுள்ளனர். அப்படி செய்தால் அவர்கள் பெந்தெகொஸ் தேயினருடன் அடையாளம் கண்டு கொள்ளப்படுவார்கள் என்னும் பயம் அவர்களுக்குண்டு'' என்றார். அவர்கள் அதை 'ஹோலி ஸ்பிரிட் (Holy Spirit) என்றழைக்கின்றனர். பாருங்கள்? அவர்கள் 'ஹோலி கோஸ்ட்' என்றழைப்பதில்லை. ஏனெனில் பெந்தெகொஸ்தேயினர், எளிய ஜனங்கள், வேதத்தில் கூறியுள்ளபடி 'ஹோலி கோஸ்ட்' என்றழைக்கின்றனர். இவ்விரண்டுமே பரிசுத்த ஆவியைக் குறிக்கின்றன. ஆனால் அவர்கள் அதைக் குறித்து கவனமாயுள்ளனர். அவர்கள் அந்நிய பாஷைகள் பேசும் மக்களுடன் அடையாளம் கண்டுகொள்ள விரும்புவதில்லை. அதுவும் 'ஹோலி ஸ்பிரிட் தான். பாருங்கள். என்ன நேர்ந்தது? பரிசுத்தமாக்கப்படுதலின் கீழ் கழுவப்பட்டபோது, வெளியே சென்ற சத்துரு திரும்பி வந்து, அந்த வீடு பரிசுத்த ஆவியினால் நிறைந்திராததைக் கண்டான். இப்பொழுது சபையின் நிலை என்னவெனில், அது உலக சபைகளின் ஆலோசனை சங்கத்தில் சேர்ந்து விட்டது; அந்நிலையில் அது ரோமன் கத்தோலிக்க மார்க்கத்துடனும் அதன் மற்றவைகளோடும் இணைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது அது லூத்தரன் மார்க்கத்திலிருந்து வெளிவந்ததைக்காட்டிலும் ஏழு மடங்கு கேடுள்ளதாயிருக்கிறது. அங்குதான் மனிதன் அதைக்கொண்டு செல்கிறான். 32பரிசுத்த ஆவியைப் பெற்ற பிறகு லவோதிக்கேயா சபையைப் பாருங்கள். அதற்குள் பரிசுத்த ஆவி இருந்து, அது பரிசுத்த ஆவியைக் குறித்த அறிவைப் பெற்றிருந்தும், தேவனுடைய கிரியைகளை அது மறுதலித்து அதை பொல்லாத கிரியைகள் என்று 'அழைப்பதைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? அங்கு தான் கிறிஸ்து தமது சொந்த சபையிலிருந்து வெளியேற்றப்பட்டார். பாருங்கள், அவர்... லவோதிக்கேயா சபையின் காலம் வரும்வரைக்கும் அவர் சபையிலிருந்ததாக காண்பிக்கப்படவில்லை. ஆனால் லவோதிக்கேயா சபையின் காலத்துக்கு அவர் வந்த போது, அவர் சபையிலிருந்து வெளியே தள்ளப்பட்டு, உள்ளே வர முயன்று கொண்டிருக்கிறார். இப்பொழுது, பாருங்கள், நீதிமானாக்கப்படுதல் அவரை உள்ளே கொண்டு வரவில்லை. பரிசுத்தமாக்கப்படுதல் அவருக்காக இடத்தை சுத்தம் செய்தது. அனால் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் வந்தபோது, அது அவரை ஜனங்களுக்குள் வைத்தது. அப்பொழுது அவர் தம்மை நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக காண்பித்து வரும்போது, அவர்கள் அவரை வெளியே துரத்தி விட்டனர். அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்ட தால் அவரை வெளியே துரத்தினர். ஏனெனில் தேவனுடைய ஆவி அவர்களுடைய ஸ்தாபனங்களுடன் இணங்குவதில்லை. இப்பொழுது உங்களுக்குப் புரிகிறதா? அது... அவரை வெளியே துரத்தி விட்டனர். 'இந்த 'டெலிபதி (Telepathy) எங்களுக்கு வேண்டாம், அது பிசாசினால் உண்டானது, அது பிசாசினால் உண்டானது'' என்கின்றனர். பாருங்கள்? அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. கண்கள் காணமுடியவில்லை, காதுகள் கேட்கமுடியவில்லை. பாருங்கள், தேவன் மாத்திரமே தமது சித்தப்படி கண்களைத் திறக்கிறவர். யாரைக் கடினப்படுத்த சித்தமாயிருக்கிறாரோ, அவர்களைக் கடினப்படுத்துகிறார். யாருக்கு ஜீவனைக் கொடுக்க அவர் விரும்புகிறாரோ, அவர்களுக்கு ஜீவனைக் கொடுக்கிறார். அப்படித்தான் வேதம் கூறுகிறது. 33நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தையும், அதன் கட்டத்தையும், அது முன்பு எப்படியிருந்ததென்றும் நாம் காண் கிறோம். பரிசுத்த ஆவி, அவரை வெளியே அனுப்பிவிட்ட காலத்தைக் கடிந்து கொள்கிறார். ஆனால் இவைகளனைத் திலும் நீங்கள் கவனித்தீர்களா? “ஜெயங்கொள்ளுகிறவ னெவனோ.'' இந்த உலகப்பிரகாரமான, பொல்லாங்கான சபை காலத்திலும், ''ஜெயங்கொள்ளுகிறவனெவனோ '' தேவனுக்கு எப்பொழுதும் ஜெயங்கொண்டவர்கள் இருந்து வந்திருக்கிறார்கள் என்று இங்கு நாம் காண்கிறோம். ஒவ்வொரு காலத்திலும் அவருக்கு ஜெயங்கொண்டவர்கள் இருந்திருக்கிறார்கள். இவ்வுலகில் இருந்த ஒவ்வொரு காலத்திலும், தேவன் யாராகிலும் ஒருவரை இவ்வுலகில் சாட்சியாக கொண்டிருக்கிறார். அவர் எப்பொழுதும் சாட்சி இல்லாமல் இருந்ததில்லை - சில சமயங்களில் அது ஒரே ஒரு நபராக இருந்திருக்கலாம். ஆனால் ஜெயங்கொண்ட யாராகிலும் ஒருவர் அவருக்கு இருந்தனர். பழையகாலத்து பரிசுத்தவான்களைப்போல், 34அருமையான ஒருவர், படித்த மேதை, ஏழு முத்திரைகள் பிரசங்கிக்கப்பட்ட பிறகு என்னிடம், 'சகோ. பிரன்ஹாமே, நீங்கள் முன்னடையாளத்தை ஆதாரமாகக் கொண்டு பேசுகிறவர். சபை உபத்திரவ காலத்துக்குள் செல்லாமல் எடுத்துக்கொள்ளப்படுதலில் செல்லும் என்பதற்கு நீங்கள் எப்படி முன்னடையாளம் காண்பிக்கப் போகிறீர்கள்?'' என்றார். அவர் சொன்னார்... பாருங்கள், ஒரு சம்பவம் புதிய ஏற்பாட்டில் இருக்குமானால், அதற்கு முன்னடையாளமாக பழைய ஏற்பாட்டில் ஒன்று இருக்கவேண்டும். நான் உண்மையென்று கூறும் ஒவ்வொன்றுக்கும் பழைய ஏற்பாட்டில் ஒரு முன்னடையாளம் உண்டு. அது ஒரு நிழல். பழையவைகள் வரப்போகும் காரியங்களுக்கு நிழலாயுள்ளன என்று வேதம் கூறுகிறது. அவர் என்னிடம், “பாருங்கள், நீங்கள் பழைய ஏற்பாட்டை நிழலாக எடுத்துக்கொள்கிறீர்கள். இந்த சபையைக் குறித்து என்ன செய்யப் போகிறீர்கள்?'' என்றார். 35இந்த மனிதர். மிகப்பெரிய, சிறந்த போதகர், எனக்கு நெருங்கிய நண்பர். மிகவும் நல்லவர். அவர் ஒரு அருமையான சகோதரன். அந்த சகோதரனுக்கு விரோதமாக ஒரு வார்த்தையும் கூற நான் துணியமாட்டேன்; கிறிஸ்தவன் என்னும் முறையில் நான் அப்படி செய்யவே மாட்டேன். அந்த ஒரு பொருளின் பேரில் அவர் என்னுடன் இணங்குவதில்லை. ஆனால் அவர் என் விலையேறப்பெற்ற சகோதரர். நாங்கள் ஒன்றாக உணவு அருந்துவோம். ஓ, அவர் நன்றாக உடுப்பவர். அவருடைய பத்திரிக்கையிலுள்ள கட்டுரைகளை நான் படிப்பது வழக்கம். என்னுடைய செய்திகளையும் அவர் வெளியிடுகிறார். அவருடைய கட்டுரைகளின்லிருந்து, அல்லது அவர் கூறக் கேட்டவைகளிலிருந்து நான் அநேக பொருள்களைஎன் பிரசங்கத்துக்காக தெரிந்தெடுத்திருக் கிறேன். அவர் பெரியவர். ஆனால் அவரால் என்னுடன் இணங்க முடிவதில்லை. அவருடைய உத்தமத்தை நான் பாராட்டுகிறேன். நீங்கள் கூறும் ஒவ்வொன்றுக்கும் ஆமாம் கூறுபவர் அவரல்ல. அவருக்கு தன் சொந்த கருத்துக்கள் உண்டு, அதில் அவர் உறுதியாய் நிற்கிறார். அதை நான் பாராட்டுகிறேன். அவர் நல்லவர். நான் போதகனோ அல்லது மேதையோ கிடையாது. அவர் இரண்டுமே, 36என்னால் அவருடன் இணங்கமுடியவில்லை. ஏனெனில் என்னால் அதைக்காண முடியவில்லை. அது இரட்சிப்புக்கு சம்பந்தமான ஒன்றல்ல. அது கர்த்தருடைய வருகையுடன் சம்பந்தப்பட்டது. சபை சுத்திகரிக்கப்படுவதற்காக உபத்திரவ காலத்திற்குள் செல்ல வேண்டுமென்பது அவருடைய கருத்து. ஆனால் கர்த்தராகிய இயேசுவின் இரத்தம் சபையை சுத்திகரிக்கிறது என்று நான் கூறுகிறேன். அதற்கு அவசியமில்லை... சபை - அதாவது ஸ்தாபன சபை - உபத்திரவகாலத்துக்குள் செல்லுமென்று விசுவாசிக்கிறேன், ஆனால் மணவாட்டி செல்வதில்லை. விவாகம் செய்வதற்கு முன்பு சுத்திகரிக்கப்பட வேண்டிய பெண்ணை நீங்கள் தெரிந்து கொள்வீர்களா? கிறிஸ்துவின் மணவாட்டி தெரிந்துகொள்ளப் பட்டவள், அவள் தெரிந்துக்கொள்ளப்பட்டவள், அவள் தேவனின் மணவாட்டி, இயேசு கிறிஸ்துவின் மணவாட்டி. 37அவர், ''அதற்கு என்ன முன்னடையாளம் காண்பிக்க போகின்றீர்கள் - அதாவது உபத்திரவ காலத்துக்கு முன்பு மணவாட்டி எடுத்துக்கொள்ளப்படுகிறாள் என்று? சபை உபத்திரவ காலத்தில் உள்ளது என்பதைக் காண்பிக்க எனக்கு வேத ஆதாரங்கள் உண்டு. ஆறாம் முத்திரையைபடித்துப் பாருங்கள். அவ்வளவு தான். அவள் உபத்திர காலத்தில் இருக்கிறாள்'' என்றார். ஆனால் நீங்கள் பார்ப்பீர்களானால், அதற்கு முன்பு மணவாட்டி சென்றுவிடுகிறாள். அந்த சமயத்தில் அவள் மகிமையில் இருக்கிறாள். அவளுக்கு சுத்திகரிப்பு எதுவுமில்லை. பாருங்கள்? ''என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்'' (யோவான் 5:24. நாம் நியாயத்தீர்ப்பில் நிற்பது கூட இல்லையென்று இயேசு வாக்களித்திருக்கிறார். எனவே அவர் என் இடத்தை பரிபூரணமான எடுத்துக்கொண்ட தன் நிமித்தம் நான் பரிபூரணமாக விடுதலையடைந்தேன். நான் மன்னிக்கப் பட்டேன் என்றால் மன்னிக்கப்பட்டு விட்டேன். அவர் என்னை அடகு கடையிலிருந்து என்னை மீட்டெடுத்த பிறகு, என்னை அடமானமாகக் கொண்டிருந்தவன் நான் அவனுக்கு சொந்தம் என்று எப்படி கூற முடியும்? இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் எழுதப்பட்ட ரசீது (ஆமென்! பாருங்கள்?) என்னிடம் உள்ளதே! அந்த விஷயத்தில் நாங்கள் இங்குதான் அடைந்தோம். அவர், ''நீர் குறிப்பிடும் அந்த தெரிந்துகொள்ளப் பட்ட மணவாட்டியை எவ்வாறு பிரித்து, அதற்கு ஒரு முன்னடையாளம் காண்பிக்கப் போகிறீர்?'' என்றார். 38நான் மிகவும் நல்லது. அது இங்குள்ளது. மத்தேயு 27ம் அதிகாரம் 51ம் வசனத்தில் ...'' அந்த வசனத்தை நான் படிக்கப் போகிறேன். அப்பொழுது அதற்கு முன்னடையாளம் உள்ளதா, அது தெரிந்து கொள்ளப்பட்ட மணவாட்டிதானா என்பது தெளி வாகும். மத்தேயு 27ம் அதிகாரம் 51ம் வசனம். சரி. நமது கர்த்தரின் சிலுவை மரணத்தின் போது இதை வாசிக்கிறோம். அப்பொழுது, தேவலாயத்தின் திரைச்சீலை மேல் தொடங்கிக் கீழ் வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது .... 39அது நியாயப்பிரமாணம். அங்கு நியாயப்பிரமாணம் முடிவடைந்தது. ஏனெனில் திரைச்சீலை சபையோரை தேவனுடைய பரிசுத்த பொருட்களிலிருந்து பிரித்தது. அபிஷேகம் பெற்ற ஆசாரியன் மாத்திரமே வருடத்திற்கு ஒரு முறை உள்ளே சென்றான். உங்களுக்கு ஞாபகமுள்ளதா? இப்பொழுது, தேவன் தமது சொந்தகையினால் அந்த திரைச்சீலையை மேல் தொடங்கிக் கீழ்வரைக்கும் - கீழ் தொடங்கி மேல் வரைக்கும் அல்ல . இரண்டாகக் கிழித்தார். (அது நாற்பது அடி உயரமாயிருந்தது.) கவனியுங்கள், கீழ் தொடங்கி மேல் வரைக்கும் அல்ல - இரண்டாகக் கிழித்தார். அது நாற்பது அடி உயரமாயிருந்தது. கவனியுங்கள், கீழ் தொடங்கி மேல் வரைக்கும் அல்ல, மேல் தொடங்கிக் கீழ் வரைக்கும். (அது தேவனால் செய்யப்பட்டது என்பதைக் காண்பிக்கிறது.) அந்த திரைச்சீலை இரண்டாகக் கிழிந்தது. ஆகையால் விருப்பமுள்ளவன் எவனோ அவன் வந்து அவருடைய பரிசுத்தத்தில் பங்குகொள்ளலாம். பாருங்கள்? சரி. ... மேல் தொடங்கிக் கீழ் வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது. கல்லறைகளும் திறந்தது, நித்திரையடைந்திருந்த அநேக பரிசுத்த வான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது, அவர் உயிர்தெழுந்த பின்பு, இவர்கள் கல்லறைகளை விட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து, அநேகருக்குக் காணப்பட்டார்கள். 40அதோ அந்த தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் - மணவாட்டி : யூதசபை முழுவதுமே அந்த சமயத்தில் உயிரோடெழ வில்லை. அவர்கள் எல்லோருமே ஒரே பலியைச் செலுத்தினர். அவர்கள் எல்லோரும் ஆட்டுக்குட்டியின் சிந்தப்பட்ட இரத்தத்தின் கீழ் இருந்தனர். ஆனால் தெரிந்து கொள்ளப்பட்ட ஒரு கூட்டம் அங்கிருந்தது. அந்த சம்பவம் நிகழ்ந்தவுடனே அதில் விசுவாசம் கொண்டு, உறுதியாயும் உத்தமமாயும் இருந்த அந்த தெரிந்துகொள்ளப்பட்ட கூட்டம்... இப்பொழுது நான் “ஜெயங்கொள்ளுதல் என்னும் சொல்லுக்கு வருகிறேன். அதை பிடித்துக்கொள்ளுங்கள். அவர்கள் உண்மையாக ஜெயங்கொண்டு, மற்றவர்கள் செலுத்தின அதே பலியை செலுத்தி, ஆனால் அதை உத்தமமாக செலுத்தி, உலகத்தின் காரியங்களின் மேல் ஜெயங்கொண்டனர். அவர்களுக்காக பிராயச்சித்தம் சரியான விதத்தில் செலுத்தப்பட்டபோது - அந்த நேரம் வரைக்கும் அவர்கள் ஜெயங்கொண்டவர்களாய், பரிதீசில் இளைப்பாறிக் கொண்டி ருந்தனர். அவர்கள் நித்திரையடைந்திருந்தனர் (பாருங்கள்?). புழுதியில் நித்திடையடைந்திருந்திருந்த அநேக பரிசுத்தவான் களுடைய சரீரங்கள் (பாருங்கள்?)... நித்திரையடைந்து 41நமக்கு நேரமிருந்தால் நாம் தானியேலின் புத்தகத்துக்கு செல்லலாம், தெரிந்து கொள்ளப்பட்ட அந்த தானியேல் ஜெயங் கொண்டவனாய் .... அவர் தானியேலை நோக்கி, “தானியேலே, இந்தப் புத்தகத்தை முத்திரைபோடு. நீ இளைப்பாறிக் கொண் டிருந்து, உன் நாட்களின் முடிவில் உன் சுதந்திர வீதத்துக்கு எழுந்திருப்பாய். உன் ஜனத்தின் புத்திரருக்காக நிற்கும் பெரிய அதிபதி எழும்பும்போது, நீ உன் சுதந்தர வீதத்துக்கு எழுந்திருப் பாய்'' என்றார். அது இங்குள்ளது! தேவனுடைய தீர்க்கதரிசியாகிய தானியேல் முடிவு காலம் வருகிறதைக் கண்டான். அவர், ''தானியேலே, அந்த நாளில் உன் சுதந்தர வீதத்துக்கு எழுந்திருப்பாய்'' என்றார். இதோ அவன் எழுந்திருக்கிறான், இஸ்ரவேலர் எல்லாரும் அல்ல, ஆனால் மணவாட்டிக்கு முன்னடையாளமாயிருந்த இஸ்ரவேலர். இஸ்ரவேலர் மீதியானவர்கள் பொதுவான உயிர்த்தெழுதல் வரைக்கும் எழுந்திப்பதில்லை. 42இப்பொழுது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையின் போது, அவருடைய வருகையில் உண்மையில் பிரியம் கொண்டவர்களும் (loving), அதற்கென்று வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் (Living); அவர் ஆகாயத்தில் தோன்றும்போது, கிறிஸ்துவுக்குள் மரித்த சபை எழுந்திருந்து ஒரு இமைப்பொழுதில் மறுரூபமாகும். மற்றவர்கள் அதைக் குறித்து ஒன்றுமே அறியமாட்டார்கள். அவர்கள் நகரத்தில் அநேகருக்குக் காணப்பட்டார்கள் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள் (மத் 27:53). எடுத்துக்கொள்ளப்படுதலின் போதும் அவ்வாறே சம்பவிக்கும். நாம் ஒருவரையொருவர் காண்போம், அவர்களை நாம் காண்போம். உலகத்திலுள்ள மற்றவர்கள் அவர்களைக் காணமாட்டார்கள். அது எடுத்துக் கொள்ளப்பட்டு இரகசியமாக சென்று விடும். அதன் பிறகு அந்த நாளுக்காக காத்திருந்து, அந்த மகிமையான ஆயிரம் வருட அரசாட்சிக்கு அது பூமிக்குத் திரும்ப வரும், மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருடம் முடியுமளவும் உயிரடையவில்லை (வெளி. 20:5) 43அதன் பிறகு பொதுவான உயிர்த்தெழுதல் உண்டாகும். அப்பொழுது இஸ்ரவேலர் எல்லாரும் அங்கு பாருங்கள், பன்னிரண்டு அப்போஸ்தலர்கள், பன்னிரண்டு கோத்திரப்பிதாக்கள், இவர்கள் எல்லோருமே பிரதிநிதித்துவம் வகிக்கின்றனர். அதைக்குறித்து நாம் இன்னும் பார்க்கவில்லை, கர்த்தருக்கு சித்தமானால் அதைக் குறித்து நாம் புதிய ஏற்பாட்டில் காண்போம் - எப்படி வச்சிரக்கல்லால் கட்டப்பட்ட மதில் இருந்ததென்றும், பன்னிரண்டு கற்களும், பன்னிரண்டு வாசல்களும், பன்னிரண்டு அஸ்திபாரங்களும் இருத்தனவென்றும். இதோ அவர்கள் - அந்த நாட்களிலிருந்த செய்தியாளர்கள் - பன்னிரண்டு சிங்காசனங்களின் மேல் வீற்றிருந்து, செய்தியைப் புறக்கணித்தவர்களின் மேல் நியாயத்தீர்ப்பு வழங்குகின்றனர். ஆமென் அந்த மகத்தான நேரம் வந்து கொண்டிருக்கிறது. ஆம், என்ன ஒரு நாள், என்ன ஒரு நேரத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சபையே, நாம் எவ்வளவாக நம்மை ஆராய்ந்து பார்க்க வேண்டியவர்களாயிருக்கிறோம்! வரப்போகும் இவைகளைக் குறித்து நாம் பேசுகிறோம்; இன்றைக்கு இங்கு நிறுத்திக்கொண்டு, நாம் விசுவாசத்தில் சரியாயிருக்கிறோமா என்று நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம். 44சில நிமிடங்களுக்கு ஜெயங்கொண்ட சிலரைக் குறித்து பேசுவோம். இன்றைய காலத்துக்கு இயேசு ஒப்பிட்ட நோவாவின் நாட்களில், எனக்கு பத்து நிமிடங்கள் மாத்திரமே கொடுக்கப்பட்டது. ஆனால் இப்பொழுது அரைமணி நேரமாகிலும் பிடிக்கும். நான் இப்பொழுது தான் முதலாம் பக்கத்தை துவங்குகிறேன். என்னால் முடிந்தால் எழுதிவைத்துள்ள சிலவற்றை விட்டு விட்டு..... கவனியுங்கள் இக்காலத்துக்கு முன்னடையாளமாயுள்ள நோவாவின் நாட்களிலே; இயேசு அதைக் குறிப்பிட்டு, “நோவா வின்காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்'' என்றார் (மத் 24:37). கவனியுங்கள், ஜலப்பிரளயத்துக்கு முன்னால் இருந்த காலத்தில், ஒருக்கால் லட்சக்கணக்கானவர் இருந்திருக்கக் கூடும். ஆனால் ஜெயங்கொண்டவர்கள் எட்டு பேர் மாத்திரமே. அவர்கள் நோவாவின் மூன்று குமாரர்கள், அவர்கள் மனைவிகள், நோவாவும் அவன் மனைவியும். எட்டு பேர் ஜெயங்கொண்டு, சரியான நேரத்தில் பேழைக்குள் பிரவேசித்தனர். அவர்கள் எப்படி அதை செய்தனர்? அவர்கள் தேவனுடைய வார்த்தைக்கு செவிகொடுத்தனர். அவர்கள் பேழையின் வாசலுக்கு வெளியே மாட்டிக்கொள்ளவில்லை. அவர்கள் வாசலுக்கு உள்ளே இருந்தனர். 45ஓ, என் அன்பார்ந்த நண்பர்களே, வாசல் அடைபடக் காத்திருக்காதீர்கள். இயேசு, 'நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்'' என்றார். யாராகிலும் வாசலுக்கு வெளியே மாட்டிக் கொண்டால்.... அவர்களில் அநேகருக்கு நல்லெண்ணம் இருந்திருக்கக்கூடும்.“ என்றாகிலும் ஒரு நாள் அது நடக்கும் போது, நாங்கள் சகோ.நோவாவுடன் உள்ளே சென்று விடு வோம். அவர் மிகவும் நல்லவர்' என்று நினைத்துக் கொண்டிருக்கக் கூடும். ஆனால் பாருங்கள், அது எட்டு பேரை மாத்திரமே உள்ளே விட்டது. இப்பொழுது, சற்று ஆழ்ந்து சிந்தியுங்கள். நீங்கள் அதைக் குறித்து கவலையற்றவர்களாய் இருப்பீர்களானால், துரிதமாக உள்ளே வந்து விடுங்கள். ஏனெனில் எந்த நேரத்திலும் வாசல் அடைபடக்கூடும். 46தேவனுடைய திட்டத்தில் எப்பொழுதுமே ஒரு பேழை (ark) இருந்து வந்துள்ளது. நோவாவின் காலத்தில் அவருடைய ஜனங்களை இரட்சிக்க ஒரு பேழை இருந்தது. நியாயப் பிரமாணத்தின் காலத்தில் ஒரு உடன்படிக்கை பெட்டி (ark) இருந்தது. அவர்கள் உடன்படிக்கை பெட்டிக்குப் பின்னால் சென்றனர். இப்பொழுது மூன்றாம் யுகம் - நோவாவின் காலம், மோசேயின் காலம், தற்போதைய காலம். இப்பொழுது ஒரு பேழை உள்ளது. அது ஸ்தாபனம் அல்ல, அது நீங்கள் செய்யும் நற்கிரியைகள் அல்ல; அது ஒரே ஆவி . 1 கொரி. 12:13: நாம் எல்லாரும் அந்த ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக, அந்த ராஜ்யத்தின் ஆதிக்கத்துக்குள் ஞானஸ்நானம் பண்ணப்படுகிறோம், ஒரே ஆவியின் ஞானஸ்நானம். எவ்வளவு நல்லவர்களாயிருந்தாலும், எவ்வளவு கெட்டவர்களாயிருந்தாலும் நீங்கள் எப்படி இருந்தாலும், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தினால் நீங்கள் அந்த ராஜ்யத்துக்குள் வந்து விடுகிறீர்கள். பாருங்கள்? அந்த ஒரு வழியில் மாத்திரமே நீங்கள் ஜெயங்கொள்ள முடியும். சிந்தப்பட்ட இரத்தத்தின் கீழுள்ள அனைவரும் ஜெயங் கொண்டவர்கள்; ஏனெனில் நீங்களாகவே ஜெயங்கொள்ள முடியாது. அவரே உங்களுக்காக ஜெயங்கொள்ளுகிறார். நீங்கள் இளைப்பாறிக் கொண்டிருக்கிறீர்கள்... ''சகோ. பிரன்ஹாமே, நான் அதற்குள் இருக்கிறேன் என்று எப்படி அறிந்து கொள்வது? நீ எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்கிறாய் என்பதை கவனி. நீ சுற்றிலும் பார். நீ எந்த முயற்சியுமின்றிதானாகவே அந்த வாழ்க்கை வாழ்கிறாயா என்று பார். இல்லாவிட்டால், நீ கடினமாக முயற்சி செய்து அந்த வாழ்க்கை வாழவேண்டியுள்ளதா? அப்படி செய்ய முயலாதே. 47அது குழந்தையின் கையை சட்டை கைக்குள் நுழைப்பது போன்றது. (பாருங்கள்?). அது எழுந்து, கீழே விழுந்து, புரண்டு, எல்லாம் செய்யும். பாருங்கள்? ஆனால் அந்த குழந்தையால் தானாகவே கையை சட்டைகைக்குள் போடமுடியாது. “தேனே ஆ உன் சட்டையை போட்டுக்கொள் என்று சொல்வீர்களா னால், அதனால் செய்ய முடியாது. அது கையை மேலே தூக்கும், கீழே போடும், அதன் கை எல்லாவிடங்களிலும் இருக்கும். அதற்கு ஆடாத உங்கள் கை அவசியம். ஓ, என் கையை பிதாவினிடம் சமர்ப்பித்து, கர்த்தராகிய இயேசுவே, என்னால் செய்ய முடியவில்லை. எனக்குதவி செய்யும். என் சட்டையை எனக்கு அணிவியும். நான் முயற்சி செய்வதை விட்டு விடுகிறேன்'' என்று கூறுவதற்கு எவ்வளவு மகிழ்ச்சியுள்ளவனாயிருக்கிறேன் அவரே அதை செய்யட்டும். 48பாருங்கள், அந்த குழந்தை முயன்று கொண்டேயிருந்து, ''என்னால் முடியவில்லை, என்னால் முடியவில்லை' என்று கூறு மானால், அது எல்லாவிடங்களுக்கும் நகர்ந்து சென்றாலும் அதனால் முடியாது. அப்படித்தான் உங்களாலும் செய்ய முடியாது. என்னாலும் செய்யமுடியாது. ஆனால் நாம் அமரிக்கையாயிருந்து, அவரிடம் நம்மை சமர்ப்பித்து, ''கர்த்தாவே, இதோ நான் இருக்கிறேன், நான் ஒன்றுமற்றவன். என்னை சமர்ப்பிக்கிறேன். என் கையை சரியான இடத்தில் அழைப்பீராக'' என்று கூறி அவர் செய்ய விட்டுக்கொடுப்போமா னால், அதுதான் வெற்றி. அதுதான் ஜெயங்கொள்ளுதல். நீங்கள் ஜெயங்கொள்ள வேண்டியது உங்களையும், உங்கள் கருத்துக்களையும் உங்கள் காரியங்களையுமே. உங்களை அவரிடம் ஒப்புவியுங்கள், அவர் உங்களுக்காக ஜெயங் கொள்வார். அதற்கான வழியை அவர் அறிந்திருக்கிறார்; நமக்கோ அது தெரியாது. 49நோவாவின் காலத்தில் ஜெயங்கொண்டவர்கள் எட்டு பேர் இருந்தனர். அவர்கள் தான் உள்ளே பிரவேசித்தனர். அவர்கள் உள்ளே மாட்டிக்கொண்டனர். நண்பர்களே, இதை கேளுங்கள். அவர்கள் இதை ஒலிப்பதிவு செய்கின்றனரென்று நம்புகிறேன். அது தொலைக்காட்சியில் இருந்தாலும் இல்லாமற் போனாலும் - மன்னிக்கவும், ஒலிநாடாவில் இருந்தாலும் இல்லாமற்போனாலும் - நீங்கள் என்ன செய்தாலும், இப்பொழுது யார் கேட்டுக்கொண்டிருந்தாலும், இனிமேல் யார் கேட்டாலும், காலம் மிகவும் தாமதமாகிவிட்டது. உங்களுக்கு நல்லெண்ணம் இருக்கக் கூடும். ஆயினும் நீங்கள் உள்ளே வந்துவிடுங்கள். நீங்கள் கஷ்டப்பட்டு முயற்சி செய்யாதீர்கள். விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்'' (ரோமர் 9:16). தேவன் அதை செய்யட்டும். உங்களை அவரிடம் ஒப்புவித்து, தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறை வேற்றவல்லவராயிருக் கிறார் என்னும் பரிபூரண, திருப்தியான விசுவாசத்துடன் நடந்து செல்லுங்கள். அது ஒரு ஸ்தாபனத்தை சேர்வதோ, அதை விட்டு வேறொரு ஸ்தாபனத்தை சேர்வதோ, அதை விட்டு வேறொரு ஸ்தாபனத்தை சேர்வதோ, இங்கும் அங்கும் வேறெங்கும் ஓடுவதோ, இதை முயற்சி செய்வதோ கிடையாது. உங்களை தேவனிடம் ஒப்படைத்து அவருடன் நடந்து செல்லுங்கள். சமாதானத்துடன், அமைதியுடன், யாரும் உங்களை தொந்தரவு செய்யாதபடிக்கு, அவருடன் நடந்து கொண்டேயிருங்கள். அதுவே சரியான முறை. மனநலகுலைச்சல் ஏற்பட்ட சகோதரனுக்கு அதை தான் நான் கூறினேன். பாருங்கள்? 'அவரிடம் உங்களை ஒப்புவியுங்கள். அவர் இங்கிருக்கிறார். நீங்கள் என்ன செய்தீர்கள் என்றும், நீங்கள் இப்படியிருக்கக் காரணம் என்னவென்றும், உங்களைக் குறித்து எல்லாமே அவர் அறிந்திருக்கிறார். நீங்கள் என்ன செய்ய வேண்டும்மென்று இப்பொழுது அவர் உங்களிடம் கூறினார். நீங்கள் செய்யவேண்டிய ஒன்றே ஒன்று, பழையவைகளை எல்லாம் மறந்து விட்டு, அதை போய் செய்து, தேவனுடைய மகிமையிலும் பிரசன்னத்திலும் உங்கள் எதிர்கால வாழ்க்கையை நடத்துங்கள்“ என்று அவரிடம் கூறினேன். எட்டு பேர் ஜெயங்கொண்டவர்கள். 50தானியேலின் காலத்தில் அக்கினியின் சோதனைக்கும் சிங்கங்களின் சோதனைக்கும் சிங்கங்களின் சோதனைக்கும் நிற்கக்கூடிய நான்கு ஜெயங்கொண்டவர்கள் இருந்தனர். நாம் சோதிக்கப்பட வேண்டியவர்களாயிருக்கிறோம். பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கும் என் சகோதரனுக்கும் அது ஒரு நல்ல அறிவுரை. தேவனிடத்தில் சேருகிறவன் முதலாவதாக சோதிக்கப்பட வேண்டும். எதனால்? வார்த்தையினால். அது தேவன் நடத்தும் சோதனை. அதை நீங்கள் விசுவாசிக்கிறீர் களா? தேவனிடத்தில் சேருகிறவன் சோதிக்கப்பட வேண்டும். ஒரு உண்மையான பிள்ளை (பாருங்கள்?) சோதிக்கப்பட வேண்டுமென்பதை அது காண்பிக்கிறது. சோதனை உங்களுக்கு நேரிடாமல் நீங்கள் ஜெயங்கொள்ள முடியாது. ஒரு சோதனை உங்களுக்கு அளிக்கப்படுவதே, நீங்கள் ஜெயங்கொள்ள முடிகிறதா இல்லையா என்று காண்பதற்காகவே. “ஜெயங்கொள்ளுகிறவன் எவனோ” என்று இயேசு கூறினார். உங்களுக்கு நேரிடும் மிகப்பெரிய காரியம் இச்சோதனையே. அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும் என்று பேதுரு கூறினதாக வேதாகமத்தில் எழுதி வைக்கப்பட்டுள்ளது (1 பேது. 1:7). இது சோதனையின் நேரம். அது .... நாம் சோதிக்கப்பட்டால், தேவன் நம்மோடு கூட இருக்கிறார் என்பதற்கு அதுவே உறுதியான அத்தாட்சி, ஏனெனில் தேவனுடைய பிள்ளைகள் அனைவருமே சோதிக்கப்பட வேண்டும். 51தானியேல் என்னும் மனிதன் ஒரு தீர்க்கதரிசி. அவன் காலத்தில் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர் இருந்தனர். தானியேல் தீர்க்கதரிசி. அந்த காலத்தில் சபையின் எண்ணிக்கை அவ்வளவு தான் - அதாவது மணவாட்டியின் எண்ணிக்கை. சபையில் அநேகர் இருந்தனர், ஏறக்குறைய இருபது லட்சம்பேர் பாபிலோனுக்கு சென்றனர். ஆனால் ஜெயங்கொண்டவர்களின் எண்ணிக்கை அவ்வளவே. அந்த ஜெயங்கொண்டவர்கள் சோதிக்கப்பட்டனர். ஜெயங்கொள் ளுகிற ஒவ்வொருவனும் சோதிக்கப்படவேண்டும். அவர்கள், ''வார்த்தை கூறுவதை விட்டு விடுங்கள். இல்லையேல் நீங்கள் எரிகிற சூளையில் போடப்படும் வீர்கள்'' என்றனர். வார்த்தை கூறுவதைத் தவிர வேறெதையும் செய்ய அவர்கள் மறுத்தனர். 52வார்த்தை உரைப்பதை செய்யாதிருக்க தானியேலுக்கு ஒரு சோதனை கொடுக்கப்பட்டது. அவர்கள் தேவாலயம் உள்ள திசையை நோக்கி ஜெபம் செய்யவேண்டுமென்றும், அவர்கள் அப்படி ஜெபம் செய்தால், பரலோகத்திலிருக்கிற தேவன் அவர்களுடைய விண்ணப்பங்களுக்கு செவிகொடுத்து, எல்லா வற்றிலிருந்தும் அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கவேண்டும் மென்றும் சாலொமோன் விண்ணப்பம் பண்ணினான். அதுவே அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த வார்த்தை. ஆனால் இவர்களோ, 'இந்த குறிப்பிட்ட நாட்களுக்குள் எவனாகிலும் ஒருவன் தேவாலயத்தை நோக்கி விண்ணப்பம் பண்ணினால், அவன் சிங்கங்களின் கெபியில் போடப்படுவான். நாங்கள் மோதிய - பெர்சியர். எங்கள் சட்டங்களை நாங்கள் மாற்ற முடியாது'' என்றனர். அவர்கள் தானியேலுக்கு கண்ணி வைத்தனர். அதை அந்த தீர்க்கதரிசி அறிந்திருந்தான் என்று நம்புகிறேன். அவர்கள் அவனுக்கு கண்ணி வைத்தனர். அவன் தாழ்மையாய் நடந்தான். ஜெபம் செய்யவேண்டிய நேரம் வந்தபோது. அவனுடைய வீடாகிய எருசலேமில், பலிபீடத்தின் மேல் எரிந்து கொண்டிருக்கும் ஒரு பலி இருந்ததென்று அவன் அறிந்தவனாய், வேவுகாரர் யாருக்கும் பயப்படாமல், ஜன்னல் கதவுகளை மூடி முழங்கால்படியிட்டு, தேவனிடத்தில் கைகளையுயர்த்தி ஜெபம் பண்ணினான். ஏன்? பிழைத்தாலும், மரித்தாலும் அவனுக்கு வெற்றியுண்டு. எனவே வெற்றி அவனுக்கு அதிகமாக இருந்த காரணத்தால், சிங்கங்கள் அவனைத் தின்ன முடியவில்லை. பாருங்கள்? அவன் ஜெயங்கொண்டான். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ அதிக வெற்றி கொண்டிருந்த காரணத்தால் சிங்கம் - அக்கினி அவர்களை எரித்துப் போட முடியவில்லை. உங்களுக்குத் தெரியுமா, வெற்றியை எரித்துப்போடுவது அல்லது தின்றுவிடுவது அல்லது வேறெ தாகிலும் செய்வது மிகக் கடினமான செயல். பாருங்கள், ஆகவே அவர்கள் ஜெயங்கொண்டனர். 53வேறொரு கதாபாத்திரத்தைக் குறித்து இங்கு கூற விரும்பு கிறேன். லோத்தின் நாட்களில் - இயேசு அதைக்குறிப்பிட்டார் - மூன்று பேர் மாத்திரமே ஜெயங்கொண்டனர் : லோத்தும் அவனுடைய இரண்டு குமாரத்திகளும். அவனுடைய மனைவியும் கூட ஜெயங்கொள்ளவில்லை. அவள்... அவள் புறப்பட்டாள்; அவள் முன்னடையாளமாயிருக்கிறாள்.... (நமக்கு நேரம் இருந்தால் நலமாயிருக்கும்; என்னுடைய முப்பது நிமிடங்கள் இப்பொழுதே முடிந்து விட்டது. பாருங்கள்?) அவள் சரியாகத்தான் செய்தாள்; அவள் எல்லாவற்றையும் விட்டு புறப்பட்டாள். இதை உங்களிடம் சிறிது நேரம் கூற வேண்டும். உங்களில் அநேகரும் கூட புறப்பட்டீர்கள். உங்களில் அநேகர் வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்து பிறகு, அதில் நிற்க வேண்டுமென்று இவைகளை விட்டுப்புறப்பட்டீர்கள். நீங்களே சர்வ வல்லமையுள்ள தேவன் உறுதிபடுத்துவதைக் கண்டிருக்கிறீர்கள், அது உறுதிப்படுத்தப்பட்டது என்று வேறொரு வர் கூறின அடிப்படையில் அல்ல, அது எப்படியிருக்கும் என்று வேதம் கூறின அடிப்படையில், அது உண்மையென்று கண்டு கொண்டீர்கள். எனவே நீங்கள் சோதோமை விட்டு, ஸ்தாபனங்களை விட்டு, உங்கள் கோட்பாடுகளுக்குப் பதிலாக வேதாகமத்தை ஏற்றுக் கொண்டீர்கள். நீங்கள் பின்பற்ற தீர்மானித்தீர்கள். 54நல்லது, லோத்தின் மனைவியும் அதைத் தான் செய்தா ளென்று உங்களுக்கத்தெரியும். அவள் புறப்பட்டுச் செல்ல தீர்மானித்து, தன் கணவனாகிய லோத்துடனும், தன் பிள்ளை களுடனும், அன்பார்ந்தவர்களுடனும் புறப்பட்டுச் சென்றாள். ஆனால் அவளுடைய இருதயத்தில் புறப்பட்டுச் செல்ல வேண்டும்மெனும். எண்ணம் இருக்கவில்லை. அவள் அப்பொழுதும்உலகத்தில் அன்பு கூர்ந்தாள். எனவே நீங்கள் புறப்பட்டு வெளியே வந்தாலும், உலகம் உங்களுக்குள் இருக்க வழியுண்டு. பாருங்கள், அவள் ஜெயங்கொள்ளவேயில்லை. அவள் அந்த பாதையில்இருந்த போதிலும், அது முடிவில் அவளை முறியடித்து விட்டது. அவள் திரும்பி, ஒரு பெரிய பார்வை பார்க்கவேண்டியதாயிருந்தது. அங்கு தான் அவள் மாட்டிக்கொண்டாள். நீங்கள் திரும்பிப் பாராதீர்கள் எந்த விருப்பமும்வைத்தீராதீர்கள்! சென்று கொண்டேயிருங்கள்! உங்கள் சிந்தையைகல்வாரியின் மேல் வைத்து, கிறிஸ்துவை நோக்கி சென்று கொண்டிருங்கள்! பாருங்கள், 55அவள் ஜெயங்கொள்ளுகிறவளாக புறப்பட்டாள்; ஆனால் அவள் ஜெயங்கொள்ளவேயில்லை. ஓ, அவள் ஸ்தாபனத்தை விட்டாள். அவள் லோத்துடன் சோதோமைவிட்டு வெளிநடந்தாள். ஆனால் அவள் திரும்பிச்சென்று தன் தலை மயிரைக் கத்தரித்துக்கொள்ள விரும்பினாள். என்ன தெரியுமா? அவள் திரும்பிப்பார்த்தாள். “ஓ, எனக்கு சில நல்ல நண்பர்கள் அங்கிருக்கிறார்கள். இது ஒரு சிறு அசைவாக இருக்கக்கூடும். அது சரியா இல்லையா என்று எனக்குத் தெரியாது. இந்த மனிதர் கூறுவது மாத்திரம் எனக்குத் தெரியும். அவர் எனக்கு கணவனாயிருந்தபோதிலும் (உங்கள் போதகர் ஆவிக்குரிய விதத்தில் உங்கள் கணவரே. பாருங்கள்?) அது சரியா தவறா என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு வேளை அவருடைய வெளிப்பாடு சரியா யிருக்கக் கூடும்.'' உனக்குப் பரிபூரண திருப்தி இல்லையென் றால், அது தேவனுடைய வார்த்தையென்று நீ பரிபூரணமாய் அறிந்திருக்கவில்லை. அப்படியானால் நீ போக முடியாது. பார்? நீ உண்மையில் அதற்கு உன்னை முற்றிலுமாக ஒப்புக்கொடுத்திருக்க வேண்டும். நீ அதை அறிந்திருக்க வேண்டும். மற்றவர்கள் அதை செய்யக் காண்கிறேன். நான் அடையாளத்தைக் காண்கிறேன்'' என்று நீ கூறுவதல்ல. 56உங்களுக்குத் தெரியும், இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தை விட்டுப் புறப்பட்டு வந்தனர் என்று... அதை இதற்கு ஒப்பிட முடியும். அவர்கள் இருபது லட்சம்பேர்களாய் புறப்பட்டனர், ஆனால் இரண்டு பேர்களில் முடிவடைந்தனர். அது உண்மை . அவர்கள் தேவனுடைய கிரியைகளைக் கண்டனர்; அவர்கள் ஆவியின் வெளிப்பாட்டைக் கண்டனர்; அவர்கள் எகிப்தில் மகத்தான அற்புதங்கள் நிகழ்வதைக் கண்டனர்; அவர்கள் புறப்பட்டு வெளியே வந்த போதிலும், அந்த எண்ணம் அவர்கள் இருதயத்தில் இருக்கவில்லை. அவர்கள் ஜெயங்கொள்ள வில்லை, அவர்கள் சும்மா வெளிவந்தனர். இயேசு, 'அவர்கள் வனாந்தரத்திலே அழிந்து, நித்தியமாக மரித்தார்கள்' என்றார். அவர்கள் ஒவ்வொருவரும் மரித்தார்கள்; அது நித்திய பிரிவினையை குறிக்கிறது. அவர்கள் ஒவ்வொருவரும் வனாந்தரத்தில் அழுகிப்போனார்கள். 57ஆனால், யோசுவா, காலேப் என்ற இருவர் இருந்தனர். அது பலப்பரீட்சைக்கு வந்தபோது - தடங்கல்கள் மிகப் பெரியதாக இருந்தன. அவர்களுக்கு முன்பாக அவர்கள் வெட்டுக்கிளிகளைப் போல் காணப்பட்டார்கள். யோசுவா காலேபுடன் சேர்ந்து கொண்டு, ''எங்களால் முடியும்'' என்று கூச்சலிட்டான். ஏன்? தேவன் அவ்வாறு கூறினார். அவர்கள் ஜெயங்கொண்டவர்கள். அவர்கள் ஜெயங்கொண்டனர். ஜனங்கள் கொண்ட அந்த பெரியஸ்தாபனத்தில் அவர்கள் இருவர் மாத்திரமே தெரிந்து கொள்ளப்பட்ட மணவாட்டியை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கு கொண்டு செல்லும் சிலாக்கியத்தைப் பெற்றனர். யோசுவாவும் காலேபும் இரண்டு தளபதிகளாக முன்வரிசையில் நடந்து, நதி வரைக்கும் அவர்களை நடத்தி, நதியை கடக்கச் செய்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குள் அவர்களைக் கொண்டு சென்றனர். ஏன்? அவர்கள் வார்த்தையை விசுவாசித்தனர். ''என்ன நடந்தபோதிலும் - 58தாத்தான் எழும்பினான், கோராவும் எழும்பினான். தேவன் மோசேயை முற்றிலுமாக உறுதிபடுத்தின பின்பும் அவர்கள், ''இந்த மனிதன் தன்னை எல்லாரிலும் மேலாக உயர்த்திக்கொள்ளப்பார்க்கிறான். மற்றவர்களை விட தான் பரிசுத்தன் என்று எண்ணிக்கொள்கிறான்'' என்றனர். அவர்கள், “நாம் ஒரு ஸ்தாபனத்தை தொடங்குவோம். நாம் இதை, அதை, மற்றதை செய்வோம்'' என்றனர். அவர்கள் மரித்து அழிந்துபோயினர். ஆனால் யோசுவாவும் காலேபும் தேவனுடைய வார்த்தையை உடையவர்களாயிருந்தனர். அவர்கள் அதில் நிலைநின்றனர். அவர்கள் அதில் பிரவேசித்தனர். தொடங்குகிறவன் அல்ல, முடிக்கிறவனே. அநேகர் ஓட்டத்தை தொடங்குகின்றனர், ஆனால் ஒருவன் மாத்திரமே அதை முடிக்கிறான். அநேக சபைகள், அநேக குழுக்கள் தொடங்கக் கூடும். ஆனால் ஒரு குழு மாத்திரமே முடிக்கும். அவர்கள் தான் ஜெயங்கொள்ளுகிறவர்கள். 59லோத்தின் நாட்கள். ஆம், லோத்தின் மனைவி ஒரு பெரிய பார்வை பார்த்து, “ஓ, நான் இன்னார் இன்னாரை அங்கு விட்டு வந்து விட்டேனே. நாங்கள் அருமையான தருணம் அனுபவித் தோம். அதை என்னால் மறக்க முடியாது'' என்றாள். அவள், நோவாவின் நாட்களில் நடந்தது போல், வாசலுக்கு வெளியே மாட்டிக்கொண்டாள். அவள் மேல் இரக்கம் காண்பிக்கப்படாமல் வெளியே தள்ளப்பட்டு கதவு அடைக்கப்பட்டது. அவள் அழிந்துபோனாள். அந்த உப்புத் தூண் இன்றைக்கும் அங்கு நின்றுகொண்டிருக்கிறது. அதிலிருந்து ஒரு துண்டை உடைத்து எடுத்தால், அந்த உப்புத் தூண் மீண்டும் வளர்கிறதென்று அவர்கள் கூறுகின்றனர். எனக்குத் தெரியாது. நீங்கள் ''சோதோம் கொமோரா' படத்தைப் பார்த்தால், உப்புத் தூண் அங்கு நின்று கொண்டிருப்பதைக் காணலாம். உப்புத் தூணுக்கும் (Pillar of Salt) அக்கினி ஸ்தம்பத்துக்கும் (Pillar of Fire) வித்தியாசமுண்டு. நீங்கள் இவ்விரண்டில் ஒருவழியில் மாத்திரமே செல்ல முடியும். 60இப்பொழுது கவனியுங்கள். யோவான் ஸ்நானனின் காலத்தில் ஆறு பேர் மாத்திரமே ஜெயங்கொண்டவர்களாக காணப்பட்டனர். எல்லா காலங்களிலும் ஜெயங்கொண்ட வர்கள் இருந்தனர். யோவானின் காலத்தில் ஆறு பேர் இருந்தனர். அவர்கள் யோசேப்பும் மரியாளும், சகரியாவும் எலிசபெத்தும், சிமியோனும் அன்னாளும்; ஒரு ஆண் ஒரு பெண், ஒரு ஆண் ஒரு பெண், ஒரு ஆண் ஒரு பெண். பாருங்கள்? கிறிஸ்துவுக்கும் சபைக்கும் உதாரணம். கிறிஸ்துவும் சபையும், கிறிஸ்துவும் சபையும், கிறிஸ்துவும் சபையும் பாருங்கள், பாருங்கள்? கவனியுங்கள், அது மாம்சப்பிரகாரமான மனிதனிலிருந்து தொடங்குகிறது. நோவா - மோசே- யோசேப்பு . மாம்சப்பிரகார மான மனிதன் யோசேப்பு. அவன் என்னவாயிருந்தான்? அவன் தச்சவேலை செய்பவன். அதன் பிறகு ஆசாரியன். பாருங்கள்? கர்த்தருடைய வீட்டில் ஊழியம் செய்பவன் - சகரியா. அதிலிருந்து தீர்க்கதரிசியாகிய சிமியோனும் ஒரு தீர்க்கதரிசினியும். பார்த்தீர்களா. நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல். பரிசுத்த ஆவியின் அபிஷேகம்'. ஆமென்! நீங்கள் அதை காண்கிறீர்களா? முற்றிலுமாக. ஆறு பேர் ஜெயங்கொண்டனர். அக்காலத்திலிருந்த மற்றவரும் பலி போன்றவைகளை செலுத்தினர். ஆனால் இவர்கள் மாத்திரமே தெரிந்து கொள்ளப்பட்டனர். இவர்கள் ஜெயங் கொண்டனர். 61கவனியுங்கள், ஒவ்வொரு சபை காலத்திலும் ஜெயங் கொண்டவர்கள் இருந்தனர். ஒவ்வொரு சபை காலத்திலும் சிலர் அக்காலத்தின் சோதனையின் மேல் ஜெயங்கொண்டனர். அதற்கு ஆதாரமான வேதவாக்கியங்களை இங்கு குறித்துவைத்திருக்கிறேன். அவைகளைக் கூற இப்பொழுது நேரமில்லை. ஆனால் நமக்குத் தெரியும் ... சபையின் காலங்கள் ஒவ்வொன்றிலும். இக்காலத்திலும் அவ்வாறே யுள்ளது. யாரோ ஒருவர்... பாருங்கள், நான் துவக்கத்தில் கூறினது போன்று, நீங்கள் தோல்வியடைந்தவர்களாகப் பிறந்தீர்கள். அந்த பிறப்பு உங்களை ஒரு போதும் ஜீவனுக்கு கொண்டுவர முடியாது. ஏனெனில் நீங்கள் தோல்வியடைந்தவர்களாகப் பிறந்தீர்கள். நீங்கள் தோல்வியடைந்த உலகில் தோல்வியடைந்த மக்களின் மத்தியில் தோல்வியடைந்த கோட்பாடுகளின் மத்தியில், தோல்வியடைந்த ஸ்தாபனங்களின் மத்தியில் இருக்கிறீர்கள். நீங்கள் எவ்வகையிலாவது வெற்றியடைய வேண்டும். 62அது ஒரு லீலிப்புஷ்பத்தைப் போன்றது. லீலிப்புஷ்பம் எல்லா மலர்களைக் காட்டிலும் மிக அழகானது என்பது என் கருத்து. எனக்கு குளத்து லீலிப்புஷ்பம், இன்னும் மற்ற லீலிப் புஷ்பங்கள் என்றால் மிகப்பிரியம். குளத்தில் வளரும் தண்ணீர் லீலிப்புஷ்பத்தைப் போல் அழகானது எதுவுமில்லை. அது எவ்வளவு பிரகாசமாயுள்ளது. அது எதிலிருந்து தோன்றுகிறது? குளத்தின் அடியிலுள்ள சேற்றில் புதைந்துள்ள ஒரு சிறு விதையிலிருந்து அது தோன்றுகிறது. அது சேற்றில் உள்ள போது, அது மலராகும் போது உள்ள எல்லா பிரகாசத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் அதில் ஏதோ ஒன்றுள்ளது என்பதை அது அறிந்து அனுதினமும் பாடுபட வேண்டியதாயுள்ளது. அது கறுப்பாயுள்ளது; அது அழுக்கா யுள்ளது; அது சேறு நிறைந்தது. அது சகதியில் இருப்பதால் அதுவும் சகதியைப்போல் கொழ கொழ வென்றுள்ளது. இருப்பினும் அச்சேற்றின் வழியாகவும், அழுக்கின் வழியாகவும். தண்ணீரின் வழியாகவும் தள்ளிக்கொண்டு மேலே வந்து, வெளிச்சத்தில் தன் தலையை வெளியே நீட்டி, அதற்குள் இத்தனை காலம் மறைந்திருந்த அனைத்தையும் வெளிப்படுத்துகிறது. அது ஜெயங்கொள்ளுகிறவனுக்கு உதாரணமாயுள்ளது. அவன் ஒரு சமயம் பாவத்தில் மூழ்கியிருந்து தவறான செயல் களைப்புரிந்து வந்தான். அதை குறித்து இப்பொழுது கவலை கொள்ள வேண்டியதில்லை - ஒரு காலத்தில் தவறான செயல்களைப் புரிந்து வந்தான். பிறகு... இப்பொழுது ஏன் மறுபடியும் குளத்தை திரும்பிப் பார்க்கவேண்டும்? பாருங்கள், நீங்கள்.... 63தேவன் தமது முன்குறித்தலின்படி (பாருங்கள்?) இந்த விதையை ஜீவனுக்குக் கொண்டுவந்து, அது தன்னை வெளிப் படுத்தும்படி செய்துவிட்டார், எல்லாவாற்றிற்கும் மேலாக அது ஜெயங்கொண்டுவிட்டது. பாருங்கள், அது சேற்றில் புதைந்து கிடந்திருந்தபோது தன்னை வெளிப்படுத்தவில்லை. அது தன்னை வெளிப்படுத்தவதற்கென மேலே எழும்பி வருகிறது. அவ்வாறே நீங்களும் பாவத்திலும், விபச்சாரத்திலும், ஆபாசமான வாழ்க்கையிலும் இருந்தபோது, நீங்கள் எதையுமே வெளிப்படுத்தவில்லை. ஆனால் அங்கு ஒரு வித்து இருந்தது. அது ஜீவனுக்குள் தன்னை தள்ளிக்கொள்ளத் தருணம் கிடைத்தது. இப்பொழுது நீங்கள் சூரிய வெளிச்சமாகிய இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் துவக்கத்தில் உண்மையில் என்னவா யிருந்தீர்களோ, அது வெளிப்படுகிறது. நான் கூறுவதன் அர்த்தம் உங்களுக்குப் புரிகிறதா? நீங்கள் வெளிச்சத்தைக் கண்டீர்கள். நீங்கள் தேவனை விசுவாசித்தீர்கள். உங்கள் இருதயத்தை திறந்தீர்கள். இப்பொழுது நீங்கள் லீலிப் புஷ்பமாயிருக்கிறீர்கள். 64சங்கை லீலிப்புஷ்பம் என்னும் என் பிரசங்கம் உங்களுக்கு ஞாபகமுள்ளதா? அது பாடுபட்டு உழைக்கிறது, ஆனால் அது நூற்கிறதில்லை. என்றாலும் சாலொமோன் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை .... அதை கவனித்துப் பாருங்கள். அது ஜீவனுக்கு எழும்புகிறது ... அது தனக்கென்று எதையும் வைத்துக்கொள்வதில்லை. அது எதைக் குறித்தும் கவலை கொள்வதில்லை. அது என்ன செய்கிறது? மற்றவர்கள் காணத்தக்கதாக தன் ஜீவனையும் அழகையும் வெளிப்படுத்து கிறது. மற்றவர்கள் மகிமையை காணும்படியாக - சேற்றினுள் புதைந்திருந்தபோது அதற்குள் என்ன இருந்தது என்பதை - அதன் ஜீவன் வெளிப்படுத்துகிறது. இப்பொழுது அது மேலே உள்ளது. அதுதான் ஜெயங்கொள்ளுதல். அது சேற்றை ஜெயங்கொண்டது. அது உலகத்தின் காரியங்களின் மேல் ஜெயங்கொண்டது, இப்பொழுது தன்னை பரிபூரணமாக கொடுக்கிறது. எல்லோரும் அதை காணலாம் - அதன் வாழ்க்கையை நீங்கள் உங்கள் விரலை சுட்டிக்காட்ட முடியாது. பாருங்கள், அது உண்மையில் ஜெயங்கொண்டு விட்டது. அதற்கு விரோதமாக நீங்கள் ஒன்றையும் இப்பொழுது கூற முடியாது. அது சேற்றிலிருந்து தோன்றினது என்று மாத்திரம் ஏளனமாக கூறலாம். ஆனால் இப்பொழுது அது சேற்றில் இல்லை. அதற்கு மேலே வந்து விட்டது. ஆமென். அது முன்பு என்னவாயிருந்தது என்பதை சுட்டிக் காட்டக் கூடாது. இப்பொழுது அது என்னவாயுள்ளது என்பதைத்தான் காண வேண்டும். அது உயரத்துக்கு வந்து விட்டது. வண்டு அங்கு வந்து, 'இது நறுமணம் கமழ்கின்றது, என் வேலையை நான் செய்யப்போகிறேன்'' என்கின்றது. லீலிப்புஷ்பம் தன் இருதயத்தை திறந்து கொடுத்து, ''வா, நான் நன்றாயிருக்கிறேன்'' என்கின்றது. வண்டு அதிலிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொள்கிறது. பாருங்கள்? அது உண்மையான போதகர், அது தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது. ஆனால் பாருங்கள், அது எங்கிருந்து வந்ததென்று. அப்படி செய்ய அது ஜெயங்கொள்ள வேண்டிய தாயிருந்தது. 65ஒருகாலத்தில் அவன் அல்லது அவள் இளமையாகவும், சிவப்பாகவும், அழகாகவும் இருந்தனர். அவர்கள் அநேக சோதனைகளின் வழியாய் கடந்து செல்ல வேண்டிய தாயிருந்தது. ஆனால் அவையனைத்தையும் அவர்கள் ஜெயங்கொண்டனர். பாருங்கள். அவர்கள் ஜெயங்கொண்டனர். இப்பொழுது அவர்கள் கிறிஸ்துவின் அழகை தங்கள் வாழ்க்கையில் வெளிப்படுத்துகின்றனர். கவனியுங்கள், சேற்றின் வழியாக வெளிப்படுத்துதல். அதை நாம் எப்படி செய்யவேண்டுமென்று இயேசு நமக்கு ஒரு உதாரணத்தை அளித்தார். ஜெயங்கொள்வது எப்படியென்று நாம் அறிய விரும்புகிறோம். அதை எப்படி செய்ய வேண்டுமென்று இயேசு நமக்கு கூறினார். பாருங்கள், தாழ்மை அவர் ஒரு சீலையை எடுத்து, அரையிலே கட்டிக்கொண்டு, சீஷர்களுடைய கால்களைக் கழுவி அவைகளைத் துடைத்தார். பரலோகத்தின் தேவன் தம்மை தாழ்த்தினார். மற்றவர்கள் நம்மைத் தாழ்த்துவதை நாம் விரும்புவதில்லை. ஆகையால் தான் பெண்கள் தலைமயிர் வளர்ப்பதையும், பெண்கள் உடை உடுத்தவது போல் உடுத்துவதையும் விரும்புவதில்லை. அவ்வாறே ஆண்களும் பாருங்கள், அதுதான் காரணம்.... அப்படி செய்தால் மற்றவர்கள் அவர்களை அவமானமாக பேசுவார்கள். ஆனால் இயேசு எப்பொழுதும்... அவர் யாரென்பதைப் பாருங்கள். பெருந்தன்மை (Greatness) (நான் ஒன்றைக் கூறப்போகின்றேன்) பெருந்தன்மை தன்னைத்தான் தாழ்த்திக்கொள்ளும். 66புகழ் வாய்ந்த சிலரைச் சந்திக்கும் சிலாக்கியம் எனக்கு கிடைத்ததுண்டு. மாற்று உடையும் கூட இல்லாமல், ஜோபியில் ஐம்பது சென்டு வைத்திருப்பவன்தான், அவன் ஒன்றுமில்லாதவனாயிருக்கும்போதே தன்னை உயர்ந்தவன் என்று நினைத்துக்கொள்பவன். நான் உயர்ந்த மனிதர்களுடன் நின்றதுண்டு. அவர்கள் கிழிந்த சட்டைகள் அணிந்து, நீங்கள் உயர்ந்தவர்கள் என்று நினைக்கும்படி செய்துவிடுகின்றனர். பாருங்கள், பெருந்தன்மை என்பது தாழ்மை. சபையே, அதை மறந்துவிடாதே! பெருந்தன்மை எப்பொழுதும் தாழ்மையில் வெளிப்படுகின்றது, நீங்கள் எவ்வளவு அழகாக உடுத்தியிருக்கி றீர்கள் என்பதில் அல்ல.... நீங்கள் அழுக்காக இருக்க வேண்டும் என்று நான் கூறவில்லை. ஆவியின் தாழ்மையைக் குறித்து கூறுகிறேன். நீங்கள் சென்று உங்கள் உடைகளை துவைக்கவில்லை என்னும் அர்த்தத்தில் கூறவில்லை. நீங்கள் அதை செய்ய வேண்டும், அது உங்களுக்குத் தெரியும். பாருங்கள்? ஆனால் நான் தாழ்மையை - உண்மையான தாழ்மையைக் குறிப்பிடுகிறேன். தாழ்மையாயுள்ளதைப்போல் பாவனை செய்வதல்ல, உண்மையான தாழ்மையை . 67அதை எப்படி செய்யவேண்டுமென்று இயேசு நமக்கு கூறியிருக்கிறார். அவர் ஜெயங்கொண்டார். ஜெயங் கொள்ளுதல் என்றால் “சோதனையை மேற்கொள்ளுதல்' என்று பொருள் (அது உண்மை !) - பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் செய்தது போல். இயேசு செய்தது போல், இயேசு தமது சத்துருக்களின் மத்தியில் சோதனையை மேற்கொண்டார். வியாதி அவரை சந்தித்தபோது, மேசியாவாகிய அவர் அவர்களை சுகப்படுத்தினார். மரணம் அவரை சந்தித்தபோது அவர் அவர்களை உயிரோடெழுப் பினார். கல்வாரியில் தமது சொந்த மரணம் அவரைச் சந்தித்து போது, அவர் தம்மை ஒப்வித்ததன் மூலம் அதன் மேல் வெற்றி சிறந்தார். எப்படி? வார்த்தையின் மூலம். அவர், ''இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன்'' என்றார். (யோவான் 2:19). வார்த்தை அவ்வாறு உரைத்திருந்தது. பாருங்கள்? மரணம் அவரைச் சந்தித்தபோது, அவர் அதன் மேல் வெற்றி சிறந்தார். அவர் மரணத்தை ஜெயங்கொண்டார். நரகம் அவரை சந்தித்த போது, அவர் அதன் மேல் வெற்றி சிறந்து நரகத்தை ஜெயங் கொண்டார். ஆம்! கல்லறை அவரை சந்தித்தபோது, அவர் கல்லறையை ஜெயங்கொண்டார். எப்படி? வார்த்தையினாலும் தாழ்மையினாலும். ஓ, என்னே! அவர் தான் உண்மையான மனிதன். அவரைத்தான் உங்கள் உதாரணமாக நீங்கள் கொள்ள வேண்டும். பாருங்கள். அவர் எல்லாவற்றின் மேலும் வெற்றி சிறந்து, ஜெயங்கொண்டார். 68பாருங்கள். அவர் சோதிக்கப்பட்டார். அது உங்களுக்குத் தெரியுமா? அவர் எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும் பாவமில்லாதவராயிருக்கிறார் என்று வேதம் கூறுகிறது (எபி. 4:15). அவர் மது அருந்தும் விஷயத் தில் சோதிக்கப்பட்டார். அவர் பெண்களால் சோதிக்கப்பட்டார். அவர் எதைக்கொண்டெல்லாம் சோதிக்கப்பட வேண்டுமோ, அவர் அனைத்தினாலும் சோதிக்கப்பட்டார். நாம் சோதிக்கப்படுவது போல் அவர் சோதிக்கப்பட்டார். அவர் மனிதன். இருப்பினும் யாரும் அவரைக் குறை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆம், ஐயா ஜெயங்கொள்ளுதல் என்றால், 'பிசாசின் தந்திரங்கள் ஒவ்வொன்றையும் கண்டு கொள்ளுதல் என்று அர்த்தம். அநேகர் பிசாசு என்று ஒன்றில்லை என்றும், அது வெறும் கற்பனையே என்றும் கூறுகின்றனர். அதை நம்பாதீர்கள். பிசாசு உண்மையாகவே இருக்கிறான். நீங்கள் இருப்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மையாக பிசாசு இருக்கிறான். அவனை நீங்கள் கண்டுகொள்ள வேண்டும். அவன் பிசாசு என்பதை அறிந்து கொள்ளவேண்டும். அவன் பிசாசு மற்றும், அவன் உங்களுக்கு விரோதமாயிருக்கிறான் என்றும் அறிந்துகொண்ட பின்பு, அவனை ஜெயங்கொள்ள வேண்டுமானால், உங்களிலிருக்கி தேவன் அவனை விட பெரியவரும் வல்லமையுள்ளவரென்றும், உங்களிலிருக்கிற அவர் அவனை ஏற்கனவே ஜெயங்கொண்டு விட்டாரென்றும், அவருடைய கிருபையினால் போராட்டத்தில் அவனை நீங்கள் மிஞ்சிவிடமுடியும் என்பதை அறிந்திருக்கவேண்டும். ஆமென் அது தான் உண்மையான ஜெயங்கொள்ளுதல். நீங்கள் கண்டுகொள்ளும்போது .... 69நீங்கள் திரும்பிப்பார்த்து, நான் இதை செய்கிறேன், அதை செய்கிறேன்'' என்று கூறுவீர்களானால், ஓ, ஓ, நீங்கள் தோல்வியடைந்துவிட்டீர்கள். ஆனால் கிறிஸ்து இயேசு வுக்குட்பட்டவர்களாயிருந்து மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை (ரோமர் 8:1). அப்பொழுது நீங்கள் ஜெயங்கொண்டவர்கள் என்றும், அவன் பிசாசு என்றும் அறிந்துகொள்கிறீர்கள். நீங்கள், “எனக்கு வியாதி உண்டு, அது வியாதி என்று நான் நம்ப வில்லை'' என்று சொல்லமுடியாது. ஓ, ஆமாம். அது வியாதிதான். உங்களுக்கு புற்றுநோய் உள்ளதென்று வைத்துக்கொள்வோம். அது புற்றுநோய் என்று நீங்கள் நம்பவில்லை, ஆனால் அது புற்றுநோய். ஆனால் ஞாபகம் கொள்ளுங்கள். உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக் கிறவர் பெரியவர் (1 யோவான் 4:4). உங்களிலிருக்கிற பரிசுத்த ஆவி இதை ஏற்கனவே ஜெயங்கொண்டுவிட்டார் என்பதை நீங்கள் உணர வேண்டும். அவர் உங்களிலிருக்கிறபடியால், அவர் மூலமாய் நீங்கள் ஜெயங்கொள்ளலாம். அது முற்றிலும் நியாயமானது. அப்படித்தான் வேதத்தில் எழுதப்பட்டுள்ளது. ஜெயங்கொள்ளுதல். நான் வேகமாக முடிக்கவேண்டும். நான் ஏற்கனவே நாற் பத்தைந்து நிமிடங்கள் பேசிவிட்டேன். இப்பொழுதே அளிக்கப் பட்ட நேரத்தைக் காட்டிலும் அதிக நேரம் பேசியிருக்கிறேன். 70கவனியுங்கள், ஜெயங்கொள்ளுதல். உங்களிலிருக்கிற தேவன் அவனை விட பெரியவர். இப்பிரபஞ்சத்தின் தேவன் உங்களிலிருக்கிற பரலோகத்தின் தேவனைப் பார்க்கிலும் பெரியவன் அல்ல. வெளிச்சத்துக்கு முன்னால் இருள் எப்படி நிற்க முடியாதோ அப்படியே... வெளிச்சத்துக்கு முன்னால் இருள் நிற்க முடியாது ... அது எவ்வளவு இருளாக இருந்தாலும் எனக்குக் கவலையில்லை, வெளிச்சம் அதை அகற்றிவிடும். இருள் அதற்கு முன்னால் நிற்க முடியாது. மகிமை! நீங்கள் எவ்வளவு இருளை வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு அதை எப்பொழுதாகிலும் வெளிச்சத்துக்கு முன்பாக நிறுத்தி, என்ன நடக்கிறதென்று பாருங்கள். உங்களில்லிருக்கிறவர் தான் அந்த வெளிச்சம். உலகத்திலிருப்பவன் தான் அந்த இருள். வெளிச்சம் இருளின் மேல் ஜெயங்கொள்ளும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அவ்வாறே கிறிஸ்துவுக்குள் இருக்கும் மனிதனும், அவன் உலகத்தின் காரியங்களின் மேல் ஜெயங்கொண்டிருக்கிறான் என்பதை அறிந்திருக்கிறான். (ஆமென். அது உங்களை கட்டி வைக்க முடியாது. நீங்கள் சுயாதீனர். அவர் ஓளியிலிருக்கிறது போல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம். அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்'' (1 யோவான் 1:7). பார்த்தீர்களா? 71உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர். நீங்கள் பின்னோக்கிப் பார்த்து, ஆக்கினைத் தீர்ப்புக்குட்படுவீர்கள் என்று காணப்பட்டால், நீங்கள் இன்னும் உலகத்தில் இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் அதைக் காட்டிலும் உயர வாழ்வீர்களானால், உங்களிலிருக்கிறவர் இருளுக்கு உயர உங்களை நடத்தியிருக்கிறார். லீலிப்புஷ்பத்தைப் போன்று, அது சேற்றின் இருளுக்கு உயர உள்ளது. அது சேற்றுத் தண்ணீரின் இருளுக்கு உயர உள்ளது. அது ஒளியிலிருந்து கொண்டு, அது சேற்றை விட்டு வெளிவருவதற்கு முன்பு அதற்குள் இருந்த அழகை பிரதி பலிக்கிறது. ஆமென்! நாம் இப்பொழுது கூச்சலிடும் கிறிஸ்தவனாக இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. துவக்கத்தில் தேவன் அதற்குள் வைத்திருந்ததை தள்ளிக்கொண்டு மேலே வந்து, ஜெயங்கொண்டது. அது விதையை மூடியிருக்கும் ஓட்டை ஜெயங் கொண்டது; அது சேற்றை ஜெயங்கொண்டது; அது தண்ணீரை ஜெயங்கொண்டது. அது எல்லாவற்றையும் ஜெயங்கொண்டு, தேவனுடைய அழகையும் மகிமையையும் பிரதிபலித்தது. 72அப்படித்தான் ஒவ்வொரு விசுவாசியும் செய்கிறான். அப்படித்தான் நோவா செய்தான். அப்படித்தான் லோத்து செய்தான்... அவன் எப்படிப்பட்ட குழப்பத்தில் இருந்தானென்று பாருங்கள். அப்படித்தான் மோசே செய்தான். அப்படித்தான் யோசுவா செய்தான். அப்படித்தான் தானியேல் செய்தான். அப்படித்தான் சாத்ராக், மேஷாக் செய்தனர். அப்படித்தான் யோவான் ஸ்நானன், சகரியா, எலிசபெத் செய்தனர். அப்படித் தான் சிமியோன், அன்னாள், மற்றும் ஒவ்வொரு வரும் செய்தனர். அவர்கள் அவர்களைச் சுற்றிலுமிருந்த சேற்றை - அவர்கள் புதைந்து கிடந்திருந்த சேற்றை - ஜெயங்கொண்டு, அதற்குமேல் தங்கள் தலைகளை நீட்டி, தேவனுடைய மகிமையை பிரகாசிப்பித்தனர். அதைத்தான் உண்மையான கிறிஸ்தவன் எவனும் செய்கிறான். 73ஞாபகம்கொள்ளுங்கள், அதை எப்படி செய்வதென்று இயேசு காண்பித்தார். அவர் நாற்பது நாட்கள் சோதிக்கப்பட்டார். எந்த மனிதனும் சோதிக்கப்படாத அளவுக்கு இயேசு கிறிஸ்து சோதிக்கப்பட்டார். அதை ஜெயங்கொள்வது எப்படியென்று அவர் காண்பித்தார். (இன்னும் சில நிமிடங்களில் முடித்து விடுகிறேன். பாருங்கள்). பாருங்கள், அதை எப்படி செய்வதென்று அவர் காண்பித் தார். அவர் எப்படி ஜெயங்கொண்டார்? வார்த்தையினால். அதைக் கொண்டுதான் அவர் ஜெயங்கொண்டார். ஏனெனில் அவரே வார்த்தை ... இயேசு, “நீங்கள் என்னிலும் என் வார்த்தை உங்களிலும் நிலைத்திருந்தால்...'' என்றார். அப்பொழுது நீங்கள் வார்த்தைக்கு, வாக்குத்தத்தமான வார்த்தைக்குத் திரும்புகிறீர்கள். ஒவ்வொரு கிறிஸ்த வனுக்கும் வாக்குத்தத்தமாக அளிக்கப்பட்டுள்ள வார்த்தை என்ன? ''உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.' நான் எப்படி ஜெயங்கொள்வது? நான் அல்ல, எனக்குள் இருக்கும் வார்த்தை, வார்த்தையே தேவன். அப்படியானால் எனக்குள் இருக்கும் வார்த்தையின் காரணமாக நான் உலகத்தின் காரியங்களின் மேல் ஜெயங்கொள்கிறேன். 'நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்'' (யோவான் 15:7). நீங்கள் உங்களை மேலே தள்ளிக்கொண்டே யிருங்கள். நீங்கள் நிச்சயமாக மேலே வந்து விடுவீர்கள். பாருங்கள். நீங்கள் மேலே வந்துதான் ஆக வேண்டும். 74இயேசுவுக்கு நேர்ந்த நாற்பது நாட்கள் சோதனையில் அவர் தேவனுடைய வார்த்தையினால் ஜெயங்கொண்டார். இங்கு சில நிமிடங்களுக்கு ஒன்றை வலியுறுத்த விரும்புகிறேன். அந்த சோதனையின்போது சாத்தான் மூன்று பெரிய தாக்குதல்களை நடத்தினான். கவனியுங்கள், அது எப்பொழுதுமே 'மூன்றுகளாக உள்ளது. அதை மறந்து விடாதீர்கள். அவன் மேலிருந்து கீழ்வரைக்கும் மூன்று தாக்குதல்களைச் செய்தான். அவனால் முடிந்த வரை அவரை மேற்கொள்ளப்பார்த்தான். ஆனால் அவரோ வார்த்தை. ஆமென்! அவர் எதை உபயோகித்தார்? வார்த்தையாகிய தம்மையே. சாத்தான் மூன்று பெரிய தாக்குதல்களை அவர்மேல் நடத்தினான். ஆனால் அவர் அவைகளை வார்த்தையினால் சந்தித்தார். மேலிருந்து கீழ்வரைக்கும் அவன் நிகழ்த்தின ஒவ்வொரு தாக்குதலையும் (இதைக் கவனியுங்கள் அவன் வார்த்தையை உபயோகித்தே செய்தான். 75அவன் நடத்தின முதல் தாக்குதல், அவர் தம்முடைய வல்லமையை உபயோகிக்க வேண்டும் என்பதற்காகவே. அவர் வார்த்தை என்று அவர் அறிந்திருந்தார்; அவருடைய ஸ்தானத்தை அவர் அறிந்திருந்தார். அவர் அறிந்திருந்தார். அவர் அறிந்திருந்தார் என்று நம்புகிறீர்களா? ''நான் மனுஷகுமாரன் என்று அவர் அறிந்திருந்தாரா? அவர் தம்முடைய ஸ்தானத்தை அறிந்திருந்தார். அவர் தம்மை போஷிப்பதற்கென தமக்கிருந்த வல்லமையை தம் மீதே உபயோகிக்க வேண்டுமென்று சாத்தான் எண்ணினான். அவர் பசியாயிருந்தார். ஒரு மனிதன் பசியாயுள்ளபோது, அவன் எதை வேண்டுமானாலும் செய்வான். அவன் திருடுவான், கொள்ளையடிப்பான், பிச்சையெடுப்பான் , கடன் வாங்குவான், எதையும் செய்வான். பாருங்கள், அவருக்குப் பசி அதிகமா யிருந்தது. ஜெயங்கொள்வதற்கென அவருக்கு அளிக்கப்பட் டிருந்த வல்லமையை அவர் தம்மீதே உபயோகிக்க வேண்டுமெனக் கருதி, சாத்தான் தன் முதலாம் பெரிய தாக்குதலை நிகழ்த்தினான். அவரோ அதை தமக்கென உபயோகிக்கவில்லை. இல்லை, அவர் பிறருக்காகவே அதை உபயோகித்தார். அது உண்மை . அவர் பிறருக்காக அதை உபயோகித்தார். தமக்காக அல்ல. அது அவருக்காக அளிக்கப்படவில்லை. வேண்டுமானால் அவர் அதை தமக்காக உபயோகித்திருக்கலாம், நிச்சயமாக அவ்வாறே செய்திருக்கலாம். 76பாருங்கள், பிசாசு உங்களை எப்படி பிடிக்கிறான் என்று. நீங்கள் அவனுக்கு செவிகொடுக்க வேண்டுமென்று அவன் விரும்புகிறான். இயேசு பிதா செய்யக் கூறினவைகளுக்கு மாத்திரம் செவிகொடுத்தார். அது உண்மை . அவர் சொன்னார்... ஆனால் பிசாசு, 'அவர் தூதர்களுக்கு கட்டளையிட்டிருக்கிறார் என்று எழுதியிருக்கிறதே“ என்றான். அவர், ''உண்மைதான். ஆனால் இப்படியும் எழுதியிருக் கிறதே'' என்றார். பார்த்தீர்களா? அவர் யாரென்பதை அறிந்திருந்தார். சாத்தான்... எழுதப்பட்டதைக் காட்டிலும் ஆழமான கருத்து அதில் உள்ளது பாருங்கள், அது பரிசுத்த ஆவியின் வெளிப்பாடு. பருப்பு, கொட்டையின் உள்ளேதான் இருக்கும் (பாருங்கள்?), அதுதான் அதன் முக்கியமான பாகம். அவர் அதை செய்திருக்கலாம் என்றாலும், அவர் செய்ய வில்லை. சாத்தானின் ஆலோசனைகளுக்கு அவர் கவனம் செலுத்தவில்லை. அது மிகவும் நல்ல செயல். சில சமயங்களில் சாத்தான் உங்களை ஆட்கொண்டு உங்களிடம் ஆலோசனை சொல்லக்கூடும். நீங்களும் தேவனுடைய சித்தத்தைச் செய்வதாக எண்ணி, அதில் விழுந்து போகவகை யுண்டு. 77நம்முடைய சகோதரிகளை நாம் உதாரணமாக எடுத்துக் கொள்வோம். அவர்கள் அழகாயுள்ளனர். நீங்கள் தலைமயிரை வளரவிட்டு, அது உங்களை மிகவும் அழகுள்ளவர்களாகச் செய்துவிட்டது என்பதை உணராமலிருக்கலாம். பிறகு முதலாவதாக என்ன நடக்கிறது தெரியுமா? நீங்கள் மற்றவர்களைக் காட்டிலும் அழகானவர்கள் என்னும் சிறிது கர்வம் உங்களுக்கு வந்து விடுகிறது. ஆண்களாகிய உங்களில் சிலரும் கூட. நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? பாருங்கள், தேவனுக்குக் கீழ்ப்படிந்து நீங்கள் புரியும் செயல்களையே அவன் தெரிந்துகொண்டு, தவறான எண்ணங்களை உங்களுக்குள் நுழைக்கப் பார்ப்பான். அது உண்மை. பாருங்கள்? அதை நீங்கள் ஜெயங்கொள்ள வேண்டும். நீங்கள் தேவனுக்காக வாழ்கின்றீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களுக்கு ஒரே குறிக்கோள் உண்டு, அது தான் இயேசு கிறிஸ்து. அதற்கு புறம்பாயுள்ள வேறெதுவும் முக்கியம் அல்ல - அவரைத் தவிர. இரண்டாவதாக, உங்கள் குறிக்கோள் உங்கள் குடும்பத்தைக் குறித்ததாயிருக்க வேண்டும். மூன்றாவதாக, அது உங்களைக் குறித்து. நீங்கள் தான் பாதையின் முடிவில் மூன்றாவதாக இருக்கவேண்டும். உங்களை கடைசியில் நிறுத்திக்கொள்ள வேண்டும். அவர் அப்படித்தான் செய்தார். 78அவர் தமக்காக என்ன செய்து கொண்டிருக்க முடியுமென்று பாருங்கள். அவர், ''நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக் கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்புவார். இந்த உலகத்தை அழிக்க அவர்களில் ஒருவர் போதும்'' என்றார் (மத். 26:53).மேலும் அவர், 'என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் என் ஊழியக்காரர் போராடியிருப் பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்வுலகத்திற் குரியதல்ல, அது பரலோகத்திற் குரியது என்றார் (யோவான் 18:36). பார்த்தீர்களா? அவர் அப்படி செய்திருக்க முடியும், ஆனால் அவர் செய்யவில்லை. பாருங்கள்? அவர் செய்ய முடிந்திருக்கு மென்றாலும், அவர் சாத்தானின் ஆலோசனைகளுக்கு செவி கொடுக்கவில்லை. இப்பொழுது, நீங்கள் ஜனங்கள் இவ்வாறு கூறக் கேட்டிருக்கிறீர்கள்: “தெய்வீக சுகமளிப்பவர் ஒருவர் இருப்பதாக நீங்கள் நம்பினால் நீங்கள் தெய்வீக சுகமளிப்பவர் என்றால்... நீங்கள் போய் தெய்வீக சுகமளிப்பவரைக் கொண்டு வாருங்கள். என்னிடம் வியாதியாயுள்ள ஒருவர் இருக்கிறார். அவர் சுகமளிக்கிறாரா என்று நான் காண விரும்புகிறேன். அதே பிசாசைப் பார்த்தீர்களா? அவன் உங்களுக்கு ஆலோசனை கூறுகிறான். நீங்கள் தேவனுக்குச் செவிகொடுப்பதற்கு பதிலாக அவனுக்கு செவிகொடுக்கும்படி முயற்சி செய்கிறான். ஆனால் உண்மையான தேவனுடைய ஊழியக்காரன் எவனும் பிதா என்ன சொல்கிறார் என்பதற்கு முதலாவதாக செவிகொடுப்பான். 79அந்த ஸ்டாட்ஸ்கிலெவ் குழந்தை போல், அவர்கள் இங்கு அனுப்பினபோது... திருமதி.ஸ்டாட்ஸ் கிலெவ், ''சகோ. பிரன்ஹமே , நான் ஜெர்மனியிலிருந்து பேசுகிறேன்'' என்றார். அங்கு ஒரு அமெரிக்க சேனை இருந்தது. ஒரே நாளில் என்னை ஜெர்மனிக்குக் கொண்டு சென்று திரும்பக்கொண்டு வர அவர்களுடைய ஜெட் விமானம் ஒன்று காத்திருந்தது. கணவர் இராணுவ போதகர். அவர்களுடைய குழந்தை மரித்துவிட்டது. தாய் கதறி அழுது , ''இதைக் கேளுங்கள். ஒரு ஸ்திரீ அன்று காலை இறந்துபோன அவளுடைய குழந்தையை தன் கரங்களில் ஏந்திக்கொண்டு வந்திருந்தாள். சகோ. பிரன்ஹாம் அவளிடம் நடந்து சென்று, இறந்த குழந்தையின் மேல் தன் கரங்களை வைத்தபோது அது உயிர் பெற்றதை என் கண்ணால் கண்டேன்'' என்றாள். அவள், சகோ. பிரன்ஹாமே, இது என் குழந்தை“ என்றாள். அவளுடைய குடும்பத்தில் அதுவரை மரணமே நேர்ந்ததில்லை. பாருங்கள். இந்த குழந்தை ஒரு காலை வியாதிப்பட்டு அன்று பிற்பகல் இறந்துவிட்டது. அங்கு எல்லோரும் சுற்றி நின்றுகொண்டு, குழந்தை உயிரோடெழப்போகின்றது'' என்று தீர்க்கதரிசனம் உரைத்துக் கொண்டிருந்தனர். நான், 'சகோதரி ஸ்டாட்ஸ்கிலெவ், அது மிகவும் நல்லது. பிதா என்ன சொல்லுகிறார் என்று நான் பார்க்கட்டும்'' என்று கூறிவிட்டு, காட்டுக்குச் சென்று ஜெபம் செய்தேன். நான் அடுத்த நாள் காலை திரும்பி வருவதற்குள் அவள் இரண்டு மூன்று முறை தொலைபேசியில் கூப்பிட்டு விட்டாள். மருத்துவர் அவளிடம், ''சரி அம்மணி, அப்படிப்பட்ட விசுவாசம் உங்களுக்கு இருக்குமானால், குழந்தையின் சடலத்தை மருத்துவமனையிலிருந்து எடுத்துச் செல்லவிடமாட்டோம். அது இங்கேயே இருக்கட்டும். நீங்களும் இங்கே இருக்கலாம். அதனால் பரவாயில்லை'' என்றார். சகோ. ஸ்டாட்ஸ்கிலெவ் சென்று இராணுவ அதிகாரியைக் கண்டார். அவர்கள், 'நாங்கள் நிச்சயமாக அவரை விமானத்தில் கொண்டு சென்று திரும்பக் கொண்டு வருவோம்'' என்றார்கள். 80இந்த குழந்தை உயிர் பெறுவதற்காக அன்று காலை என்னை ஜெர்மனியிலுள்ள ஹெய்டெல்பெர்குக்கு கொண்டுசென்று அன்றிரவு என்னைத் திரும்பக் கொண்டு வர விமானம் ஆயத்தமாயிருந்தது. நான், ''தேவன் நிச்சயமாக அதை செய்ய முடியும். ஆனால் அவருடைய சித்தம் என்னவென்று நாம் அறிந்து கொள்வோம்' என்றேன். நான் வெளியே சென்று முழு இரவும் ஜெபித்தேன்; ஒன்றும் நடக்கவில்லை. அடுத்த நாள் காலை திரும்பி வந்தேன்; ஒன்றும் நடக்கவில்லை. நான் அறைக்குள் நுழையப்போனேன். அங்கு நான் பார்த்தபோது, அந்த ஒளி கதவினருகில் தொங்கிக்கொண்டிருந்தது. அவர், ''உன் கரத்தை அதன் மேல் வைக்காதே. அதை கடிந்து கொள்ளாதே. அது தேவனுடைய கரம்'' என்றார். நான் அவளை தொலைபேசியில் கூப்பிட்டு, 'சகோதரி ஸ்டாட்ஸ்கிலெவ், உன் குழந்தையை அடக்கம் செய்துவிடும். அது கர்த்தருடைய கரம். அது தேவனுடைய சித்தம். அது உயிரோடிருந்தால், அதற்கு வேறெதாவது சம்பவிக்கும். அது எங்கு செல்லுகிறதென்று தேவன் அறிந்துள்ள அந்த இடத்திற்கு அதைப் போகவிடு. இப்பொழுது நீ அதனிடம் செல்ல முடியாது. அது பிழைத்தால், நீ பிழைக்க மாட்டாய். அதை அப்படியே விட்டு விடு'' என்றேன். ஜெர்மனியிலுள்ள அந்த பெரிய போதகர் எனக்குக் கடிதம் எழுதி, 'சகோ. பிரன்ஹாமே, நீங்கள் ஒன்றைக் கூறுவதற்கு முன்பு தேவனுடைய திட்டவட்டமான தீர்மானத்துக்காக காத்திருப்பதைக் குறித்து உங்களைப் பாராட்டுகிறேன்'' என்றார். அதுதான் தேவனுடைய தீர்மானத்தைப்பற்றிக் கொள்ளுங்கள். மற்றவர்கள் என்ன கூறினபோதிலும், அது என்னவாயிருந்தாலும், சாத்தானின் ஆலோசனைக்கு உடன்படாதீர்கள். 81சாத்தான், பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் கொடுக்கப்படும் தண்ணீர் ஞானஸ்நானம் சரியே'' என்பானானால், அவன் ஆலோசனையை உதறித்தள்ளுங்கள். தேவன் வேறுவிதமாக கூறியிருக்கிறார். அவன், நீ நல்லவன், நீ இப்படியிருக்க வேண்டிய அவசியமில்லை .... நீ நல்ல பெண்மணி, இதையெல்லாம் நீ செய்யவேண்டிய அவசியமில்லை...' என்றால் அவனுடைய ஆலோசனைக்கு செவிகொடுக்க வேண்டாம். வார்த்தை வேறுவிதமாக கூறினால், அது என்னவாயிருந்தாலும், வார்த்தையில் நிலைத்திரு. பிசாசு அவர் மேல் அந்த பெரிய தாக்குதலை நடத்தியபோது, (பாருங்கள்?) அந்த உதாரணத் தைத்தான் உங்களுக்கு அருளினார். 82அதன் பிறகு இரண்டாம் தாக்குதல், நான் வேகமாக முடிக்க வேண்டும் (நேரம் வேகமாக கடந்து செல்வது போல் தோன்று கிறது. அவர் மேல் நடத்தப்பட்ட அடுத்த பெரிய தாக்குதல், அவர் பிரபலமானவராக தம்மை காண்பித்துக் கொள்ளவேண்டும் என்பதே. தங்களைப் பிரபலமாகக் காண்பித்துக் கொள்வதென்பது - தாங்கள் என்ன செய்ய முடியும் என்பதைக் காண்பிப்பது - தேவனுடைய ஊழியக்காரரை எவ்வளவாக பாதிக்கிறது! ''தேவனுக்கு மகிமை! அல்லேலூயா! நான் மீட்கிறவன். நான் உயர்ந்தவன்.'' பாருங்கள்? “நீர் தேவாலயத்து உப்பரிகையின் மேல் வந்து உட்கார்ந்து கொள்ளும் அப்படிச் செய்யும்படி அவன் அவரைச் சோதித் தான். இதை நினைவில் கொள்ளுங்கள். அப்படிச் செய்யும்படி அவர் சோதிக்கப்பட்டார். ''நீர் ஜனங்களுக்கு முன்பாக உயர்ந்த வராக இருக்கவேண்டுமென்றால், இந்த தேவாலயத்து உப்பரி கையின் மேல் நின்று, அங்கிருந்து தாழக்குதியும்.'' பாருங்கள்? ''அதற்கான வேதவாக்கியத்தை தருகிறேன். 'தம்முடைய தூதர் களுக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக் கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறதே.'' அவரைப் பெரியவராக காண்பித்துக்கொள்ள, அவருடைய அதிகாரத்தைக் காண்பிக்க, உண்மையான தேவனுடைய ஊழியன் எவனும் அவ்வாறு செய்யமாட்டான். யாராகிலும் ஒருவன் தன் மார்பை உந்தித் தள்ளி தன்னைப் பெரியவனாகக் காண்பித்தால், அவனிடம் ஏதோ தவறுள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள். இல்லை, தேவன் அதை விரும்புவதில்லை. இயேசு நமக்கு உதாரணம்காட்டியிருக்கிறார். வேண்டுமென்றால் அவர் அப்படி செய்திருக்கலாம், அவர் நிச்சயமாக அப்படி செய்திருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. தேவனுடைய ஊழியக்காரன் எவனும் தன்னை உயர்ந்தவனாக காட்டிக்கொள்ளமாட்டான். அவன் தேவனுடைய வல்லமையை எடுத்துக்கொண்டு, மற்றவரிலும் உயர்ந்தவனாக தன்னை காட்டிக்கொள்ளமாட்டான். 83மோசே எப்பொழுது அப்படி செய்தான் என்று உங்களுக்கு ஞாபகமுள்ளதா? அவனுக்கு விருப்பமான எல்லாவற்றையும் செய்ய தேவன் அவனுக்கு அதிகாரம் கொடுத்திருந்தார். அவனை அவர் தீர்க்கதரிசியாக நியமித்திருந்தார். அவன் கன்மலையின் அருகில் சென்று அதை இரண்டாம்தரம் அடித்தான். அது தேவனுடைய சித்தத்துக்கு விரோதமான செயலாக இருந்தது. தேவன் அவனிடம், ''கன்மலையிடம் பேசு! அதை மறுபடியும் அடிக்காதே! அப்படி செய்தால் முன்னடையாளம் அனைத்தையும் கெடுத்து விடுவாய். கன்மலை ஒரு தரம் தான் அடிக்கப்பட வேண்டும்'' என்றார். அவன் அதை அடித்தபோது, வார்த்தை பலவீனமானது, அது குறைவுள்ளது என்பதுபோல் அவன் காண்பித்தான். ஆம், வார்த்தைதான் அவர்களோடு கூட சென்று கொண்டிருந்தது; அந்த கன்மலை வார்த்தையே பாருங்கள்? அவன் முதலாந்தரம் கன்மலையை அடித்தபோது, தண்ணீர் பெருக்கெடுத்து ஓடினது. அவர்கள் மறுபடியும் தாகமடைந்த போது, அவர், 'நீ கன்மலையிடம் திரும்பிச் சென்று அதனிடம் பேசு'' என்றார். அது ஒரு தரம் தான் அடிக்கப்பட்டது. பாருங்கள், வார்த்தை குறைவுள்ளது என்றும் அது சரியல்ல என்றும், அது மறுபடியும் அடிக்கப்படவேண்டும் என்றும் மோசே அவன் செயலின் மூலம் சாட்சி பகர்ந்தான். எனவே மோசே அங்கு சென்று கன்மலையை இப்படி அடித்து, ''தண்ணீரே, புறப்பட்டு வா'' என்றான். தண்ணீர் வர வில்லை. அவன் மறுபடியும் அதை அடித்து, ''தண்ணீரே, நீ புறப்பட்டு வரும்படி கட்டளையிடுகிறேன்'' என்றான். தண்ணீர் புறப்பட்டு வந்தது. தேவன் மோசேயிடம், “இங்கே வா. உன்னை மகிமைப்படுத்திக்கொண்டாய். என் வல்லமையை நீ எடுத்துக் கொண்டாய். என்னைப் பரிசுத்தப்படுத்துவதற்கு பதிலாக உன்னை பரிசுத்தப்படுத்திக் கொண்டாய். நீ வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் போகமாட்டாய். நீ மலையின் மேல் நின்று கொண்டு அது எப்படிப்பட்ட தேசம் என்று பார். இங்கு நீ மரிக்க வேண்டும்'' என்றார். ஓ, என்னே! மோசேயைப் போல் ஒருவனும் இருந்ததில்லை என்று உங்களுக்குத் தெரியும். 84இயேசு தம்மை உயர்ந்தவராகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்னும் கட்டத்துக்கு சாத்தான் வந்தபோது, ''தேவாலயத்து உப்பரிகையின் மேலேறி, அங்கிருந்து தாழக்குதியும்'' என்றான். அவர், ''உன் தேவனாகிய கர்த்தரை பரீட்சை பாராதிருப் பாயாக என்று எழுதியிருக்கிறதே'' (ஆமென்!) என்றார். பாருங்கள்? அந்த ஒவ்வொரு பெரிய தாக்குதலையும் அவர் வார்த்தையினால் சந்தித்தார். எந்த உண்மையான ஊழிக்காரனும், தான் பெற்றுள்ள தேவனுடைய வல்லமையைக் கொண்டு தன்னை பெரியவனாகக் காட்டிக்கொள்ளமாட்டான். அப்படிச் செய்தால், அவன் அப்பொழுதே அந்த வல்லமையை இழந்து விடுவான். 85மூன்றாம் பெரிய தாக்குதல். சாத்தான் தன் ராஜ்யத்தை அவருக்கு அளிக்க முற்பட்டான். அவன் அப்படி செய்தான். சாத்தான், ''இந்த உலகத்தின் ராஜ்யங்களைப்பாரும். அவை என்னுடையவை. என் விருப்பப்படி என்னவேண்டுமானாலும் அவைகளுக்கு செய்கிறேன். இவைகளை உமக்குத்தருகிறேன்'' என்றான். ஆனால் சிலுவைக்கு செல்லாமல் இவைகளை அவர் பெற்றுக்கொள்ளும்படி சாத்தான் முனைந்தான். அவர் அப்படி செய்திருந்தால், நாம் இழந்துபோயிருப்போம். அவர் ராஜ்யத்தைப் பெற்றிருக்கக் கூடும். ஆனால் அவர், தாம் செல்ல வேண்டிய பாதையில் சென்று, பின்னால் பெற்றுக் கொள்ள வேண்டும். இப்பொழுதுதே அதை பெற்றுக் கொள்ளலாமே என்னும் சோதனை அவருக்குண்டானது. அது மிகவும் கடினமானது. அவர் சுயாதீனமாக, சிலுவைக்கு செல்லாமலேயே இவ்வுலகின் ராஜாவாகி விடலாம் என்னும் சோதனை உண்டானது. அவர் அப்படி செய்திருந்தால், அவருடைய பிரஜைகள் மரித்திருப்பார்கள். சாத்தான் சந்தோஷமாக தன் ஆலோசனையை நிறைவேற்றியிருப் பான். ஆனால் அவரோ, 'அப்பாலே போ சாத்தானே'' என்றார். அவர் சாத்தானின் ஆலோசனையின்படி செய்யவில்லை. 86அவர் வந்து, பாடுபட்டு, கரடுமுரடான பாதையை தெரிந்து கொண்டார். அவர் துன்பத்தின் பாதையை தெரிந்து கொண்டார். அவர் மரணத்தின் பாதையில் சென்றார். இன்று காலை நாமும் அவர் சென்ற பாதையில் செல்ல ஆயத்தமா? நாம் மரிக்க சித்தமாயிக்கிறோமா? நம்மை பரிபூரணமாக தேவனிடத்தில் ஒப்புவித்து, உலகத்தையும் மற்றவைகளையும் புறக்கணித்து, அவரைச் சேவிக்க சித்தமாயிருக்கிறோமா? பாருங்கள்? அவர் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தார். சாத்தான் அதை அவருக்கு மனப்பூர்வமாக அளிக்க ஆயத்தமாயிருந்தான். ஆனால் அவரோ அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இயேசு சோதிக்கப்பட்ட போதிலும், அவர் நமக்காக ஜெயங்கொண்டார். எனக்காகவும் உங்களுக்காகவும் அவர் சகல சோதனைகளையும் சகித்தார். பாருங்கள், அவர் அப்பொழுதே ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டிருக் கலாம். ஆனால் அவர் ஏன் மற்ற பாதையில் சென்றார்? நாம் அவருடன் இருக்க வேண்டும் என்பதற்காக. அவர் அவ்வளவு பெரிய கிரயத்தை அதற்காக செலுத்தியிருக்கும்போது, அதை நாம் ஏற்றுக் கொள்ளாமலிருப்பது எவ்வளவு நீசமான செயல்? எப்படியும், இங்கு ஒன்றுமில்லை. 87நீங்கள் நூறு ஆண்டுகள் உயிர் வாழ்ந்தாலும், முடிவில் எங்கு அடைகிறீர்கள்? உங்களுக்கு மனநிலை கோளாறு ஏற்படும்கிறது. உங்களுக்கு வயதாகி, நடுக்கம் உண்டாகி, ஊனமடைகிறீர்கள். அங்குதான் நீங்கள் அடைகிறீர்கள். அதுதான் அதன் முடிவு. இப்பொழுதே வாருங்கள். அதை ஜெயங்கொள்ளுங்கள். அதை எப்படி செய்வீர்கள்? வார்த்தையினால் . வார்த்தை எதை உரைக்கிறதோ, அதை செய்யுங்கள். தாழ்மையாக நடந்து, இயேசுவின் முன்னிலையில் வாழுங்கள். அவர் உங்களுக்காகவும் எனக்காகவும் சகலத்தையும் சகித்தார். நமது பொல்லாத சந்ததியை எவ்வாறு ஜெயங்கொள்ள வேண்டுமென்பதற்கு உதாரணமாக அவர் தமது பொல்லாத சந்ததியை ஜெயங்கொண்டார். அவர் இவ்வுலகிற்கு வந்தபோது, எந்த காலத்திலும் இல்லாத அளவுக்கு அவிசுவாசம் நிலைத்திருந்தது என்பதை நிலைவில் கொள்ளுங்கள். ஆனால் அது அவரை சிறிதேனும் தொல்லைப்படுத்தவில்லை. அவர்கள் அவரை தேவன் என்று அழைப்பதற்கு பதிலாக, பிசாசு என்றும், மற்றும் பல்வேறு பெயர்களால் அழைத்த போதிலும், அது அவரை சிறிதேனும் தொல்லைப்படுத்தவில்லை. அவருக்கு ஒரே ஒரு குறிக்கோள் மாத்திரமே இருந்தது பிதாவை கனம்பண்ணுதல்; வார்த்தையின்படி நடத்தல். வார்த்தை தேவன். அவருக்கு ஒரே சிந்தை இருந்தது. 88சில சமயங்களில் நமக்கு திரும்பி போகவேண்டும் என்னும் சோதனை உண்டாகின்றது. உங்களில் அநேகருக்கு ஸ்தாபனங்களுக்கு திரும்பிச் சென்று அங்கு சேர்ந்துகொள்ள வேண்டும் என்னும் சோதனை உண்டாகின்றது. ஏனெனில் உலகம் உங்களைப் பார்த்து, ''நீங்கள் எந்த ஸ்தாபனத்தை சேர்ந்தவர்கள்? நீங்கள் எந்த சபையுடன் தொடர்பு கொண்டிருக் கிறீர்கள்?'' என்று கேட்கிறது. ஆகவே நமக்கு அப்படி தோன்றுகிறது; எல்லோருக்குமே அப்படித்தான். நமது சகோதரிகள் திரும்பிச் சென்று, அசெம்பிளீஸ் , தேவசபை போன்ற ஏதாகிலும்ஒரு சபையைச் சேர்ந்து கொண்டு, பெந்தேகொஸ்தேயினராக இருந்து, அதே சமயத்தில் தலைமயிரைக் கத்தரித்துக்கொண்டு, தங்கள் விருப்பத்திற்கேற்ப உடை உடுத்திக்கொள்ள வேண்டும் என்னும் சோதனை ஏற்படுகிறது. பாருங்கள், நீங்கள் திரும்பிச் சென்று, நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பொல்லாத சந்ததியாரிடையே பிரபலமாக இருக்க வேண்டும் என்னும் சோதனை தோன்றுகிறது. நமது காலத்தில் ஜனங்களிடையே காணப்படும் பெரிய பாவம் உலகப்பற்று. லவோதிக்கேயா சபை உலகப்பற்று கொண்டதாய், அது ஐசுவரியவான் என்றும், திரவிய சம்பன்னன் என்றும், தனக்கு ஒரு குறைவுமில்லை என்றும் சொல்லிக்கொண்டு, அது நிர்வாணமாயும், நிர்ப்பாக்கியமுள்ளதாயும் பரிதபிக்கப்படத்தக்கதாயும், குருடாகவும் இருப்பதை அறியாமலிருக்கிறது என்று வேதம் உரைக்கிறது. அதுதான் நமது நாளின் பெரிய பாவம். தேவனுடைய வார்த்தை அதற்கு விரோதமாக அறைகூவி, நீ உலகம் செல்லும் பாதையில் செல்லாமல், வேறொரு பாதையில் செல்லும்போது, நீ உலகத்துக்கு பிரபலமற்றவனாய் காணப்படுகிறாய். நீ திரும்பிச் செல்ல வேண்டும் என்னும் சோதனை உனக்கு உண்டாகிறது. 89நீங்கள் திரும்பத் திரும்ப அதை என்னிடம் கூறி வந்திருக்கிறீர்கள். நீங்கள் எப்பொழுதுமே அதை கூறுகிறீர்கள் என்று நானறிவேன்... இவைகளைக் குறித்து நான் திரும்பத் திரும்பத் கூறுவதானால் உங்களுக்கு என் மேல் சலிப்பு தோன்றுகிறது என்று அறிவேன். ஆனால் நீங்கள் அதை செய்வதைக் காணும்போது எனக்கும் சலிப்பு தோன்றுகிறது. உங்களிடம் நான் கூற முயலும் இந்த பாவம்... ''நீங்கள் ஏன் அதை திரும்பத் திரும்பக் கூறுகிறீர்கள்?'' என்று கேட்கலாம். அப்படியானால் அதை செய்வதை நிறுத்தி விடுங்கள் வார்த்தையினால் உங்கள் ஜீவனைக் காக்க நான் எடுத்துக்கொள்ளும் முயற்சியின் பயனாக எனக்கும் களைப்பு தோன்றுகிறது. எனவே உங்களை சீர்படுத்திக்கொளுங்கள். அது பாவம், அவ்வாறு செய்யக்கூடாது. ஆம், ஐயா! இந்த உலகத்தின் காரியங்களினால் நாம் சோதிக்கப்படுவோம். ஆனால் அவைகளை நாம் ஜெயங்கொள்ளவேண்டும். ''நீங்கள் உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூர்ந்தால் உங்களிடத்தில் தேவனின் அன்பில்லை'' என்று வேதம் உரைக்கிறது (1 யோவான் 2:15). 90இப்பொழுது இதைக் கூறி நாம் முடிப்போம். ஜெயங் கொள்ளுகிறவனுக்கு பலன் உண்டு. வேதத்திலிருந்து சில வசனங்களை உங்களுக்கு வாசித்துக் காண்பிக்க விரும்புகிறேன். உங்கள் வேதாகமத்தை வெளிப்படுத்தல் 3ம் - 2ம் அதிகாரத்துக்கு திருப்புங்கள். இங்கு கவனியுங்கள். ஜெயங்கொள்ளுதலைக்குறித்து நான் பேசிக் கொண்டிருந்த அனைத்தும்... உங்களை நிலைக்கண்ணாடியில் காணுங்கள். ஆவிக்குரிய நிலைக்கண்ணாடியில் உங்களைப் பரிசோதித்துப் பார்த்து, நீங்கள் ஜெயங்கொண்டீர்களா என்பதை அறிந்து கொள்ளுங்கள். 91இப்பொழுது, எபேசு சபையின் தூதனுக்கு கொடுக்கப்பட்ட முதல் செய்தி. அவர் வெளிப்படுத்தல் 2ம் அதிகாரம் 7ம் வசனத்தில் என்ன கூறினார் என்று நீங்கள் கவனிக்க விரும்புகிறேன். அது அந்த சபையின் காலத்துக்கு. அவர்கள் என்ன செய்தார்கள் என்று அவரிகளிடம் கூறி, அவர்கள் ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டு விட்டார்கள் என்றார். 7ம் வசனம். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளு கிறவனெவனோ... (தனிப்பட்டநபர், சபை அல்ல). ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்குத் தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவ விருட்சத் தின் கனியைப் புசிக்கக் கொடுப்பேன். (பாருங்கள், எபேசுவிலுள்ள ஜெயங்கொண்டவர்கள்) அடுத்தது சிமிர்னா. அதிலிருந்த ஜெயங்கொண்டவர்கள். இதை நாம் கேட்போம். 11வது வசனம்: ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை. (பாருங்கள், ஜெயங்கொண்டவர்கள்) பெர்கமுவிலுள்ள ஜெயங்கொண்டவனுக்கு என்ன அளிக்கப்பட்டது என்று நாம் காண்போம். 17ம் வசனத்தைப் படிப்போம் - பெர்கமு சபைக்கு. ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன்... (அது தனிப்பட்ட நபர், முழு சபைக்கும் அல்ல, தனிப்பட்ட நபர். அதுதான் சபையிலிருந்து வெளிவரும் மணவாட்டி).... கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக் கொடுத்து அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின் மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக் கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன். (அது அந்த சபையின் காலத்திலிருந்த ஜெயங்கொண்டவனுக்கு). 92அடுத்தது தியத்தீரா. அந்த காலத்திலிருந்த ஜெயங் கொண்டவனுக்கு என்ன அளிக்கப்பட்டதென்று காண்போம். நாம் 26ம் வசனத்தைப் பார்ப்போம். ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள் மேல் அதிகாரம் கொடுப்பேன். (அது உண்மை). ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு, நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன். (பாருங்கள், அவருடன் அவருடைய சிங்காசனத்தில் . கிறிஸ்து இருப்புக்கோலால் அவர்களை ஆளுவார். இதோ ஜெயங்கொண்டவர்கள் கொண்ட சபை அவருடன் கூட சிங்காசனத்தில் உட்கார்ந்து இருப்புக்கோலால் ஜாதிகளை நொறுக்கிப்போடுகிறது) இப்பொழுது சர்தை சபையை எடுத்துகொள்வோம். 3ம் அதிகாரம், 5ம் வசனம். ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண் வஸ்திரம் தரிப்பிக்கப்படும்: ஜீவ புஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன். (அது சர்தையிலுள்ள ஜெயங் கொண்டவனுக்கு). 93இப்பொழுது 12ம் வசனத்தைப் பார்ப்போம். இது பிலதெல்பியா சபைக்கு, 12ம் வசனம். ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும், என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கி வருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன் மேல் எழுதுவேன். ஜெயங்கொள்ளுகிறவனுக்கு என்ன வாக்களிக்கப் பட்டுள்ளது என்பதைக் கவனியுங்கள். பாருங்கள்? இப்பொழுது லவோதிக் கேயா, அது கடைசி சபை காலம்; அதில் சில ஜெயங்கொள்ளு கிறவர்கள் இருப்பார்கள். அங்கு கவனியுங்கள். அவர்கள்.... ஒவ்வொரு சபையின் காலமும், அதற்கு முன்னிருந்த சபைகளுக்கு அளிக்கப்பட்ட ஆசீர்வாதங்கள் அனைத்தையும் பெற்றுக் கொள்கின்றது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இங்கு கவனியுங்கள். அவர்கள் இந்த அதிகாரம் அனைத்தையும், புதிய நாமத்தையும், எழுதப்பட்டுள்ள வாக்குத்தத்தங்கள் அனைத்தையும்; மறைவான மன்னாவைப் புசிப்பார்கள் என்னும் வாக்குத்தத்தம் அனைத்துக்கும் பிறகு, இந்த கடைசி சபையின் காலத்துக்கு என்ன கொடுக்கப்படுகிறது என்பதை கவனியுங்கள். வெளி. 3:21. நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்தது போல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னோடே கூட உட்காரும்படிக்கு அருள் செய்வேன். (ஆமென்!) ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன். ஜெயங்கொள்ளுகிறவனுக்கு பலன் உண்டு. லீலிப்புஷ்பமே, செருக்கிக்கொண்டு மேலே வா அது உனக்குள் இருக்குமானால், சேறு மற்றெல்லாவற்றையும் தள்ளிவிட்டு, மேலே எழும்பிவா. ஆம் ஐயா என் சிங்காசனத்திலே என்னோடே கூட உட்காரும்படிக்கு அருள் செய்வேன்'' 94உங்களுக்குத் தெரியுமா, ஒரு சமயம் யாக்கோபு, யோவான் இவர்களின் தாய் - அதைப் படிக்க நமக்கு நேரமிருக்காது - இயேசுவினிடம் வந்து அவர்களுக்கு இந்த ஸ்தானத்தைக் கேட்டாள். அது உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? ''ஆண்டவரே, ஒருவன் வலது பாரிசத்திலும் மற்றவன் இடது பாரிசத்திலும்''. அது மகன்களுக்காக தாய்க்கிருந்த வாஞ்சை. ஆனால் என்ன? அந்த இடம் முன் குறிக்கப்பட்டு விட்டதாக இயேசு கூறினார். அந்த சமயத்தில் அந்த இடம் அங்கிருக்கவில்லை. ஏன்? கவனியுங்கள், அது யாருக்காக வைக்கப்பட்டுள்ளதோ, அவர்களுக்கு அருளப்படும். என்ன? ஒருவன் அவருடைய வலது பாரிசத்திலும் மற்றவன் அவருக்கு மிக அருகாமையிலும் உட்காரப்போவது இனிமேல் ஜெயங்கொள்பவனே . பாருங்கள், அது இன்னும்... அவர், ''நான் இப்பொழுது அருளமாட்டேன். சோதனை நேர்ந்த பிறகு அது அளிக்கப்படும்'' என்றார். ஆமென்! பாருங்கள்? ''என்னால் இப்பொழுது அருள முடியாது. ஆனால் சோதனை நேர்ந்த பிறகு அவர்கள் வலது பாரிசத்திலும் இடதுபாரிசத்திலும் உட்காருவார்கள்.'' அதற்காக முன்குறிக்கப்பட்ட வித்து காத்துக்கொண்டிருக்கிறது. அது வாக்களிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும். அது அங்கு கொடுக்கப்படும். ஆனால் சோதனை இன்னும் வரவில்லை, அவன் இன்னும் ஜெயங் கொள்ளவில்லை. பாருங்கள், 95அந்த ராஜ்யத்தில், வலது பாரிசத்தில் ஒருவனும், இடது பாரிசத்தில் ஒருவனும் உட்காரவேண்டும். அது இன்னும் யாருக்கும் அருளப்படவில்லை. பாருங்கள். அங்கு உட்கார வேண்டியவர் இன்னும் ஜெயங்கொள்ளவில்லை. சோதனை இன்னும் விழவில்லை. அது வருங்காலத்தில் விழும். நாம் கிறிஸ்துவுக்காகவும் அவருடைய வார்த்தைக்காவும் பாடுபட்டால், அவரோடு கூட ஆளுகை செய்வோம்; ஏனெனில் அவர் வார்த்தையாயிருக்கிறார். ஞாபகம்கொள்ளுங்கள், அவருக்காகவும் அவருடைய வார்த்தைக்காகவும் நாம் பாடுபட்டால், அவரோடு கூட அவருடைய வார்த்தையில் ஆளுகை செய்வோம். கவனியுங்கள், நமக்கு திருஷ்டாந்தமாயுள்ள அவர் ஜெயங் கொண்டு உன்னதத்துக்கு ஏறிச்சென்றார். அவர் மரணம், நரகம், வியாதி, பாதாளம் இவையனைத்தின் மேலும் வெற்றி சிறந்த பிறகு உன்னதத்துக்கு ஏறி, சிறைப்பட்டவர்களை சிறையாக்கி, மனுஷருக்கு வரங்களையளித்தார். அது ஜெயங்கொண்ட பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள். அவர்கள் அப்படிப்பட்ட ஒரு நபரை எதிர் நோக்கியிருந்தனர். அவர் உலகில் தோன்றுவதற்கு முன்பு மரித்து விட்டனர். ஆனால் அந்த நபர் வந்தபோது அது நித்திரையடைந்தவர்களை தடைசெய்யவில்லை. ஆமென் அவர்கள் எப்படியும் இழந்து போவதில்லை. உயிரோடிருந்தாலும் மரித்தாலும், அதனால் என்ன வித்தியாசம்? அது தடை செய்யாது. பாருங்கள் அவர்கள் அதை எதிர்நோக்கியிருந்தனர்... 96பழைய ஏற்பாட்டு யோபுவும் கூட அதை எதிர்நோக்கி யிருந்தான். அவன், 'என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின் மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்“ என்றான் (யோபு 19:25). அவன் நீதிமான். பரிபூரணமானவன். அவன் பலி செலுத்தினான். தேவன் அவனிடம் செய்யக்கூறின் அனைத்தும் அவன் செய்தான். அவன் தீர்க்கதரிசிகளுக்கு மரியாதை செலுத்தினான். ஆனால் அவனைச் சோதிக்க சாத்தான் வந்தான் - உங்களை அவன் சோதிக்க வருவது போல். அவன் என்ன செய்தான்? அவன் உறுதியாய் நின்றான். அவனுடைய மனைவி, “தேவனை தூஷித்து ஜீவனை விடும். நீர் அங்கு உட்கார்ந்து கொண்டிருப்பதைப் பார்க்க பரிதாபமாய் உள்ளது'' என்றாள். அவன், ''நீ பைத்தியக்காரி பேசுகிறது போல பேசுகிறாய்'' என்றான். வேதம் அவளை பைத்தியக்காரி என்று அழைக்கவில்லை, அவள் பைத்தியக்காரிபோல் பேசுகிறாள் என்று தான் கூறினது. பாருங்கள்? அவன், ''நீ பைத்தியக்காரி பேசுகிறது போல் பேசுகிறாய். கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்'' என்றான். அவன் ஜெயங்கொண்டான். 97அவனுடைய அண்டை வீட்டார் கூறினதை அவன் ஜெயங் கொண்டான். சபை அங்கத்தினர்கள் - பில்தாத்தும் மற்றவர்களும் - கூறினதை அவன் ஜெயங்கொண்டான். பேராயர் கூறினதை அவன் ஜெயங்கொண்டான். காரிடினல் கூறினதை அவன் ஜெயங்கொண்டான். ஸ்தாபனம் கூறினதை அவன் ஜெயங்கொண்டான். அவன் வார்த்தை கூறினதில் நிலை நின்றான். ஆமென். இருப்பினும் அவனுக்கிருந்த எல்லாவற்றையும் - அவனுடைய பிள்ளைகள் உட்பட - அவன் இழக்க வேண்டியதாயிற்று. அவன் சாம்பலில் உட்கார்ந்து கொண்டு ஒரு ஓட்டை எடுத்து தன்பருக்களை சுறண்டிக் கொண்டிருந்தான். இருப்பினும் அவன் ஜெயங்கொண்டான். அவன் அந்த சோதனை நேரத்தில் முடிவில் வெற்றியடைந்த போது, மேகங்கள் திரண்டு வந்தன. 98அவன் நியாயமான ஒவ்வொன்றையும் நோக்கினான் அவன், “ஒரு மரத்தைக் குறித்தாவது நம்பிக்கையுண்டு; அது வெட்டிக் போடப்பட்டாலும் திரும்பத் தழைக்கும். விதை நிலத்தில் விழுந்து அழுகிப்போனாலும், அது திரும்ப வளர்கிறது. மனுஷனோ செத்த பின் ஒழிந்து போகிறான். அவன் பிள்ளைகள் வந்து அவனுக்காக துக்கிக்கிறார்கள். அவன் அதை அறியாதிருக்கிறான். அவன் எழுந்திருக்கிறதும் இல்லை. என்ன விஷயம்? நானும் ஒரு விதை. நான் பூமிக்கடியில் செல்கிறேன். நான் எழுந்திருப்பதில்லை. நான் அங்கேயே படுத்துகிடப்பேன். ஓ, நீர் என்னைக் பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தீருமட்டும் என்னை மறைத்துக் கொள்ளும். நான் நியாயத்தீர்ப்பில் இருந்தால் எப்படி யிருக்கும்? மலை முதலாய் விழுந்து கரைந்துபோம். தண்ணீர் கற்களைக் குடையும்...'' என்று இப்படி சொல்லிக்கொண்டே போகிறான். அவன் எல்லா திருஷ்டாந்தங்களையும் கண்ட போதிலும், அவனால் அதை புரிந்துகொள்ள இயலவில்லை. 99சகோதரி ராட்ஜர்ஸ், இதை பஸ்டியின் அடக்கத்தின் போது நான் பிரசங்கித்தது ஞாபகமிருக்கிறதா? பாருங்கள், எவ்வாறு தண்ணீர் கற்களைக் குடைகின்றதென்றும் இவையெல்லாம் எப்படி நடக்கிறதென்றும். 'என்னைப் பாதாளத்தில் ஒளித்து, என்னை இரகசிய இடத்தில் மறைத்துக்கொள்ளும்''. அவன் நெருங்கிக் கொண்டே யிருந்தான். அவன், “எனக்குத் தெரிந்தால் நலமாயிருக்கும். பாவமுள்ள மனுஷனாகிய என் மேலும் பரிசுத்த தேவனாகிய அவர் மேலும் தன் கையை வைத்து எனக்காக பேசக்கூடிய மத்தியஸ் தன் ஒருவனை அறிந்திருந்தால் நலமாயிருக்கும்'' என்றான். ஓ, என்னே! ''அவர் அங்கே இருக்கிறார். அவர் அங்கே இருக்கிறார் என்று நான் அறிந்திருக்கிறேன். அதை செய்யக்கூடிய ஒருவர் அங்கே இருக்கிறார். அந்த ஒருவர் எங்கோ இருக்கிறார். அவரை நான் எங்கு காணமுடியும்? அவருடைய கதவைத் தட்டி (சகோ. பிரன்ஹாம் பிரசங்க பீடத்தை தட்டுகிறார் - ஆசி ) அவரோடு பேசுவேன். எங்கள் இருவர் மேலும் தன் கையை வைக்கத்தக்க மத்தியஸ்தன் எங்களுக்குள் இருந்தால் நலமாயிருக்கும்'' என்றான். ''அவரை மாத்திரம் நான் காண முடிந்தால் அவர் எங்கே இருக்கிறார்?'' 100அவன் தன் சபையெல்லாம் தேடினான்; அவன் தன் ஸ்தாபனம் முழுவதும் தேடினான். அவரை அவன் காணமுடியவில்லை. அப்பொழுது திடீரென்று மேகங்கள் திரண்டுவந்தன. அப்பொழுது அவர் வருகிறதை அவன் கண்டான். அவன் இருதயம் மகிழ்ச்சியால் துள்ளினது. அப்பொழுது ஏதோ ஒன்று நடந்தது. ''என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்று அறிந்திருக்கிறேன்.'' அப்படி ஒருவர் இருக்கிறார் அப்படி ஒருவர் இன்னமும் இருக்கிறார் என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின் மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். இந்த என் தோல் முதலானவை அழுகிப் போன பின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன். அவரை நானே பார்ப்பேன்.'' 101அந்த ஈஸ்டர்காலை அவர் உயிரோடெழுந்தபோது, யோபின் சரீரம் ஒரு கரண்டி அளவு சாம்பலாக இருந்து, உயிர்த்தெழுதலுக்காக காத்துக்கொண்டிருந்தது. அவன் தெரிந்துகொள்ளப்பட்ட கூட்டத்தில் ஒருவன். அவன் கல்லறையிலிருந்து உயிரோடெழுந்து, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுடன் நகரத்துக்குள் பிரவேசித்தான். ஓ, என்னே ! மகிமை! ஆமென் அவர்கள் அப்படிப்பட்ட ஒருவரை எதிர்நோக்கியிருந்தனர். அவருடைய கிருபையினால் உலகத்தின் காரியங்களின்மேல் ஜெயங்கொண்டு, அவருக்குள் வந்து, அவரையும் அவருடைய வார்த்தையையும் தவிர மற்றெல்லாவற்றிற்கும் தங்கள் கண்களை மூடி, கிறிஸ்துவுக்காக காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு, அவர் இரண்டாந்தரம் மகிமையில் தரிசனமாவார். “தேவ எக்காளம் தொனிக்கும்போது, கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் ஒரு நிமிஷத்தில் ஒரு இமைப்பொழுதில் மறுரூபமாகி அவர்களோடு கூட ஆகாயத்தில் எடுக்கப்பட்டு அவரைச் சந்திப்போம்.'' 102அவர் வரும்போது நான் ஒரு கரண்டியளவு சாம்பலாகவோ அல்லது உயிருடனோ இருந்தால், அதனால் ஒரு வித்தியாசமும்மில்லை. ஆமென்! அதனால் பாதகமில்லை, ஏனெனில் நான் தரிசனத்தை கிரகித்துக்கொண்டேன். திரை நீக்கப்படும்போது அவரை நான் காண்பேன். அவரே பாவமுள்ள மனிதனாகிய என் மேலும் பரிசுத்த தேவனின் மேலும் தன் கையை வைக்கக் கூடியவர். அவரே என் பாவ பரிகாரி. அவரே நான் உறுதியாக நின்று கொண்டிருக்கும் வார்த்தை. ஆதியிலே வார்த்தை இருந்தது; அவரே அந்த வார்த்தை . அவர் எனக்குப் பதிலாக அங்கிருக்கிறார். ஆமென்! எனக்கு மூச்சுள்ள வரைக்கும் நான் கூச்சலிடுவேன். அவரே என் உயிர்த்தெழுதலும் என் ஜீவனுமாயிருக்கிறார். மற்றெல்லா நிலமும் அமிழ்ந்து போகும் மணலே, மற்லெல்லாநிலமும் அமிழ்ந்து போகும் மணலே. 103அதற்காக காத்துக்கொண்டிருந்தவர்களை அவர் எடுத்துக் கொண்டதுபோல், ஸ்தாபனத்திலுள்ள குற்றம் கண்டு பிடிப்பவர்களை ஜெயங்கொண்டு, நாம் வாழும் இக்காலத் திலும் மற்றெல்லா சபை காலங்களிலும் பிரபலமாயிருந்த எல்லா பாவங்களையும் ஜெயங்கொண்ட ஒவ்வொரு புதிய ஏற்பாட்டு பரிசுத்தவானிடமும் அவர் வருவார். அந்தந்த சபை காலத்தில் ஜெயங்கொண்டவர்கள்; அவர்கள் எதை ஜெயங் கொண்டார்கள்? “நான் ஐசுவரியவான். எனக்கு ஒரு குறைவுமில்லை.... ஓ, நான் இதுவாயிருக்கிறேன், நான் அதுவாயிருக்கிறேன். நான் மணவாட்டி. நான் இதுவாயிருக் கிறேன். எனக்கு ஒரு குறைவுமில்லை' என்று சொல்லிக் கொண்டு நீ நிர்வாணியும் குருடனாயும் இருப்பதை அறியாமலிருக்கிறாய். நான் குறிப்பிடும் இந்த வஞ்சகமான காலத்தைப் பார்த்தீர்களா? தலை வெட்டப்பட்டு வெண் குறிக்கல்லைப் பெற்றவர்கள் இருந்த காலம்போல் அல்ல இது. இரத்த சாட்சிகளாக மரித்து, தொழுமரத்தில் கட்டப்பட்டு எரிக்கப்பட்டு, கிரீடத்தைப் பெற்றவர் இருந்த காலம் போல் அல்ல இது. அது வஞ்சகமான காலம், தாங்கள் எல்லாமே என்று நினைத்துக்கொள்ளும் காலம். ''நான் சபை அங்கத்தினன், நான் நல்ல மனிதன், நான் நல்ல ஸ்திரீ . நான் இதை செய்கிறேன்; நான் அதை செய்ய வேண்டிய அவசியமில்லை. 104''ஆனால் ஜெயங்கொள்கிறவனெவனோ! இக்காலத்திலுள்ள உலகப்பிரகாரமான காரியங்களை ஜெயங் கொள்ளுகிறவர்கள் என்ன செய்வார்கள்? அவரோடே கூட அவருடைய சிங்காசனத்தில் உட்காருவார்கள், அவர் வரும் போது எடுத்துக்கொள்ளப்படுதலில் செல்வார்கள். ஓ, என்னே! அப்படியானால் நான் ஏன் கவலைப்பட வேண்டும், உலகம் என்ன கூறுகிறதென்று நாம் ஏன் கவலைகொள்ள வேண்டும்? யார் என்ன கூறினாலும் நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? மகத்தான பரிசுத்த ஆவியானவர் நமது மத்தியில் இருக்கிறார். அவருடைய அக்கினி ஸ்தம்பம் நம்மை வழிநடத்தி, நமக்கு வழிகாட்டியாய் உள்ளது. அவருடைய அன்பு நமது இருதயங்களில் உள்ளது. உலகம் பின்னால் உள்ளது. நாம் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குள் பிரவேசித்து விட்டோம். உலகம் உங்களைப் பைத்தியக்காரராகக் கருதுகிறது. ஆனால், இயேசு சிலுவையைத் தனியே சுமந்து முழு உலகமும் சும்மா இருக்க வேண்டுமா? ஒவ்வொரருவருக்கும் ஒரு சிலுவை உண்டு எனக்கும் ஒரு சிலுவை உண்டு. ஊழியத்தில் முப்பத்து மூன்று ஆண்டுகள், மரணம் என்னை விடுவிக்குமளவும்) பிரதிஷ்டையுள்ள இச்சிலுவை சுமப்பேன் என் சகோதரர் என்னை நிந்தித்து என்ன வேண்டுமானாலும் கூறட்டும். ஆனால் இந்த வார்த்தையில் - இந்த வார்த்தையில் மாத்திரம்? நான் நிலைத்திருப்பேன். மரணம் என்னை விடுவிக்குமளவும் பிரதிஷ்டையுள்ள இச்சிலுவை சுமப்பேன் பிறகு எடுத்துக்கொள்ளப்படுதலில் வீடு சென்று கிரீடம் தரிப்பேன்.... அதைத்தான் நாம் எல்லலோரும் விரும்புகிறோம் அல்லவா? அதுதான் நமக்கு வேண்டும். அதுவே நமது நம்பிக்கையும் வேண்டுதலும். கிறிஸ்துவின் மேல் நமக்குள்ள எண்ணத்தைத் தவிர வேறு எண்ணங்கள் நமக்கில்லை. அவருடைய நீதியின் மேல் நாம் தனித்து நிற்கிறோம். அவருடைய வார்த்தையிலுள்ள நீதியின் மேல். 'வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம்பண்ணினார்,'' வார்த்தை இன்றும் தன்னை உறுதிப்படுத்திக் கொண்டு வருகிறது. 105ஜெயங்கொள்வது எப்படி? வார்த்தையை, வாக்குத்தத் தத்தை, தாழ்மையுடன் ஏற்றுக்கொண்டு தாழ்மையாக நடப்பதன் மூலம். மரணம் என்னை விடுவிக்குமளவும் பிரதிஷ்டையுள்ள இச்சிலுவை சுமப்பேன் பிறகு வீடு சென்று கிரீடம் தரிப்பேன். ஓ, நீங்கள் என்னை கடலில் போட்டு விடலாம். ஆனால் எக்களாம் தொனிக்கும்போது, அது என்னை எழுப்பி விடும். ஒரு நாள் நான் வீடு செல்வேன். ஆமென். அதுவரைக்கும் நான் கஷ்டப்பட்டு (ஆமென், இந்த சிலுவையைச் சுமந்து, என் கண்களை ஜனங்களின்மேல் அல்ல, கல்வாரியில் வைப்பேன். ஏனெனில் அவரே நமக்கு உதாரணம். நாம் எப்படி அதை செய்ய வேண்டுமென்று காண்பித்தார். அவருடைய உதாரணத்தை நாம் அனுதினமும் மகிழ்ச்சியோடு பின்பற்றுவோம். நான் இயேசுவை வழியின் ஒவ்வொரு அடியிலும் பின்பற்றுகிறேன். நான் இயேசுவை வழியின் ஒவ்வொரு அடியிலும் பின்பற்றுகிறேன். 106அது உங்களுக்குப் பிரியம் அல்லவா? ஓ, அனுதினமும் வழியின் ஒவ்வொரு அடியிலும் அவரைப் பின்பற்றவேண்டும் மென்று நான் எவ்வளவாக நினைக்கிறேன்! நாம் ஜெபம் செய்வோம். கர்த்தராகிய இயேசுவே, ஒரு மணி பதினைந்து நிமிடங்களாக இங்கு நின்று கொண்டு, உமது வார்த்தையை எடுத்து, எப்படி ஜெயங்கொள்வது என்பதைக் குறித்து மக்களுக்கு விவரித்துக் கொண்டிருந்தேன். அது எவ்வாறு செய்யப்பட்டது என்று எங்களுக்கு நீர் காண்பித்தீர். நீர் எங்களுக்கு கூறினது மாத்திரமல்ல, அது எப்படி செய்யப்பட்டது என்று எங்களுக்கு நீர் காண்பித்தீர். எங்களுக்கு வழி காட்டியாக நீர் இருந்து, வார்த்தையை எங்களுக்குள் எப்படி ஏற்றுக்கொள்வதென்றும், ஒவ்வொரு சோதனையின் போதும், ''எழுதியிருக்கிறதே'' என்று கூறி வார்த்தையை எவ்வாறு உறுதியாக பற்றிக் கொள்ளவேண்டும்மென்றும், எவ்வாறு தாழ்மையாக நடக்க வேண்டுமென்றும் எங்களுக்குக் காண்பித்து கொடுத்தீர். அப்படி செய்யும்போது, உமது மூலமாய், ஏற்கனவே சத்துருவை மேற்கொண்டு உமது வல்லமையின் மூலமாய். நாங்களும் ஜெயங்கொள்கிறோம். நாங்கள் செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று, அதை விசுவாசித்து, எங்களை அடையாளம் காண்பிக்கும் பரிசுத்தஆவியைக் கொண்டவர்களாய் தாழ்மையுடன் நடப்பதே. அப்பொழுது சாத்தான் விலகிச் செல்லவேண்டும். இங்கு உறுமால்கள் வியாதிஸ்தருடைய சார்பில் வைக்கப் பட்டுள்ளன. கர்த்தாவே, அவர்களுக்குத் தேவை உள்ளது. பரி.பவுலின் சரீரத்திலிருந்து அவர்கள் உறுமால்களையும் கச்சைகளையும் எடுத்து வியாதியஸ்தர்கள் மேல் போட்ட போது, பொல்லாத ஆவிகள் அவர்களை விட்டுச்சென்று, பெரிய அற்புதங்கள் நிகழ்ந்தன என்று அவர்கள் இந்த பிழையற்ற வேதாகமத்தில் படித்திருக்கிறார்கள். நீர் இன்றைக்கும் மாறாத அதே கர்த்தராகிய இயேசுவாய் இருக்கிறீர். 107பவுல் வார்த்தையைப் பிரசங்கித்து அதை எழுதிவைத்திருக் கிறான். அதே வார்த்தையை நாங்கள் பின்பற்ற முயல்கிறோம். ஏனெனில் அவன் பழைய ஏற்பாட்டை எடுத்து அதை மாதிரியாகக் காண்பித்து, அது முன்னடையாளமாயுள்ளது என்றும், பழைய ஏற்பாடு புதிய ஏற்பாட்டுக்கு பரிபூரண முன்னடையாளமாயுள்ளது என்று காண்பித்தான். ஓ கர்த்தாவே, அந்த உதாரணத்தை நாங்கள் பின்பற்றுவோமாக. எங்கள் கர்த்தர் என்ன செய்தாரென்று நாங்கள் காண்கிறோம். பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் சென்றார்கள் என்று இன்று காலை நாங்கள் உணருகிறோம். இயேசு உயிரோடெழுந்த போது, அவர்கள் அவரோடே கூட சென்றார்கள். கர்த்தாவே, அவர் எக்காளத்தை தொனிக்கும்போது, நாங்களும் செல்வோம் மென்று விசுவாசிக்கிறோம். அந்த நாளில் மணவாட்டி சென்று, அந்த எபிரேய கூட்டத்தாருடன் ஒன்று சேர்ந்து, மகிமையில் கலியாண விருந்து நடைபெறும் என்று நாங்கள் விசுவாசிக் கிறோம். அவர்கள் காத்திருக்கின்றனர். எங்கள் மேல் உமது இரக்கத்தையும் கிருபையையும் அனுப்ப இப்பொழுது வேண்டிக்கொள்கிறோம். ஜெயங்கொண்டவர்கள், கர்த்தாவே, நாங்கள் ஜெயங்கொண்டவர்களாக இருக்க விரும்புகிறோம். கர்த்தராகிய இயேசுவே, நீர் உலகத்தை ஜெயங்கொண்டீர். இன்று காலை இங்குள்ள ஒவ்வொருவரும் தங்களை சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும், பாரமான யாவற்றையும் தள்ளிவிட்டு, எங்களுக்கு நியமித்திருக்கிற ஓட்டத்திலே நாங்கள் பொறுமையுடன் ஓடக்கடவோம். எங்கள் பரலோகப் பிதாவே, பாரமான யாவற்றையும் நாங்கள் தள்ளிவிட வேண்டுமென்று பவுல் எபிரேயர் புத்தகம் 12ம் அதிகாரத்தில் கூறியிருக்கிறான். யார் சென்றார்கள் என்றும், யார் செல்லவில்லை என்றும், யார் வெதுவெதுப்பாக பின் பற்றினார்கள் என்றும், யார் போர்களத்துக்கு சென்றார்கள் . என்றும், யார் பின்னால் தங்கினார்கள் என்றும் அநேக உதாரணங்களைக் கூறினபின்பு அவன், ''பாரமான யாவற்றையும், நம்மை சுற்றி நெருங்கிநிற்கிற சிறு காரியத் தையும் கூட தள்ளிவிட்டு, விசுவாசத்தைத்துவக்குகிறவரும் முடிக்கிறவரும் நமக்கு உதாரணமுமாயிருக்கிறவரை நோக்கி நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்திலே நாம் பொறுமையோடே ஓடக்கடவோம்'' என்று கூறினான். பிதாவே, அதை இன்று காலை நாங்கள் செய்கிறோம். 108நமது தலைகள் வணங்கியிருக்கும் நேரத்தில், உங்களை நன்றாக சீர்தூக்கிப் பார்த்து, அவருக்கு அருகாமையில் இருப்பதை உணருங்கள். அதன் பிறகு ஆழ்ந்த உத்தமத்துடன் இருங்கள். அது மாத்திரமே அவசியம்... உங்களைச் சீர்தூக்கிப் பார்த்தாலும் உங்கள் உத்தமும் மாத்திரமே அவசியம். இப்பொழுது உங்களைச் சீர்தூக்கிப் பார்க்கும்போது, உண்மையில் ஜெபசிந்தையில் இருங்கள். ''கர்த்தாவே என்னை ஆராய்ந்து பாரும், என்னை சோதித்து பாரும். என்னில் பொல்லாங்கு ஏதாகிலும் உண்டா? இருக்குமானால், கர்த்தாவே, அதை நான் இப்பொழுதே இங்கு கீழே வைத்து விடட்டும். நான் தலை வணங்கியுள்ள இந்த இடம் உமது பலிபீடம். அதை இங்கு இப்பொழுதே வைத்து விடுகிறேன். நான் இங்கிருந்து நடந்து செல்லும்போது அதை மிதித்துக்கொண்டு செல்லட்டும். அது இங்கேயே இருக்கப் போகிறது. உம்முடைய இரத்தத்தின் வல்லமை அதை பட்சித்துப்போடும். நான் ஜெயங்கொண்டவனாக இருக்க விரும்புகிறேன். கர்த்தாவே, ஏதோ ஒன்று என்னைத் தொல்லைப்படுத்திக் கொண் டிருக்கிறது. இன்று காலை நான் ஜெயங்கொள்ள விரும்புகிறேன். உமது ஒத்தாசையைக் கொண்டு என்னால் முடியும். அப்படி முடியுமென்று உம்முடைய வார்த்தை எனக்குக் கூறுகிறது. கர்த்தாவே, இப்பொழுதே அதை கீழே வைக்கிறேன். இன்று காலை இந்த கட்டிடத்தை விட்டு நான் செல்லும்போது, அதை மிதித்துக்கொண்டு செல்கிறேன். அது தேவனுடைய வெண்மையாக்கும் திரவத்தைக் கொண்ட தொட்டியில் போடப்பட்டு விட்டது என்று அறிந்து இவ்விடம் விட்டுச் செல்கிறேன். அது இனி ஒருபோதும் நினைக்கப்படுவதில்லை. அதை இப்பொழுது நான் அறிக்கையிட்டு, உமது இரக்கத்துக்காக கெஞ்சுகிறேன். நமது தலைகள் வணங்கி, நமது கண்கள் மூடி, நமது இருதயங்கள் யோசித்துக் கொண்டிருக்கும் இந்நேரத்தில்; இருதயம் தான் ஆத்துமாவின் வாசல்; இன்று காலை எதையாகிலும் தள்ளிவிட விரும்புகிறீர்களா? எதையாகிலும் ஜெயங்கொள்ள விரும்புகிறீர்களா? அதை விட்டுவிட நீங்கள் கடினமாக பிரயாசப்பட்டு, இன்று காலை நீங்கள் பிரயாசப் படுவதை விட்டோய்ந்து, அவர் செய்ததை ஏற்றுக்கொள் வீர்களா? ''கர்த்தாவே, நான் ஜெயங்கொள்ள விரும்புகிறேன். குறிப்பிட்ட ஒன்று என்னைத் தொல்லைப்படுத்துகிறது'' என்று சொல்லுங்கள். 109கர்த்தராகிய இயேசுவே, அந்த கரங்களை நீர் காண்கிறீர். இப்பொழுது உமது ஊழியக்காரனாக மரித்தோருக்கும் ஜீவனுள்ளோருக்கும் நடுவில் நின்று கொண்டிருக்கும் நிலையில், இந்த ஜனங்களையும் என்னையும் தொல்லைப்படுத்தும் எல்லாவற்றையும் நான் கடிந்து கொள்கிறேன். இதை நாங்கள் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் தேவனுடைய பலிபீடத்தின் மேல் வைத்துவிட்டு, ஜெயங்கொண்டவர்களாக இன்று காலை நாங்கள் இவ்விடம் விட்டு நடந்து செல்ல வேண்டுமென்று வேண்டிக்கொள்கி றேன். எங்கள் சகோதரிகள் இதற்கு முன்பு கிருபை பெறாமலிருந்தால், கர்த்தாவே, அது இப்பொழுதே அருளப்ப டுவதாக. எங்கள் சகோதரருக்கு கிருபை இல்லாமலிருந்தால், அது இப்பொழுதே அருளப்படுவதாக. தாழ்மை தாமே... பிள்ளைகளுடைய தாய் கர்வம் கொள்ளாமல்; அவளுக்குத் தெரியும்... அவள் தன் சிறு பிள்ளைகளுக்கு போதகராக இருக்கிறாள். அவளுடைய வாழ்க்கை அவர்களுக்கு ஒரு உதாரணம். தகப்பன் தாய்க்கு உதாரணம். ஏனெனில் அவனேகுடும்பத்தின் தலைவன். தாய் அவனை அதிகாரப் படுத்தி வருகிறாள். அவள் இனி ஒருபோதும் அதை செய்யாதிருப்பாளாக. அவனும் அவளை மிதியடியாக உபயோகித்து வந்திருந்தால், இனி ஒருபோதும் அதை செய்யாதிருப்பானாக. அவள் அவனுக்குத் துணை . கர்த்தாவே, இதை அருளும். கர்த்தாவே, தடையாயிருக்கும் இப்படிப்பட்ட காரியங்கள் அகற்றப்படுவதாக. 110பிதாவே, எங்கள் வாழ்நாளில் எஞ்சியுள்ள நாட்களில் எங்களை உமக்கென்று பிரதிஷ்டை செய்கிறோம். எங்கள் வாழ்நாளின் முடிவுக்கு நாங்கள் வரவேண்டுமென்று அறிந்திருக்கிறோம், அதுவும் உடனடியாக . எனவே இக்காலை வேளையில், இந்த செய்திக்குப் பிறகு, இத்தருணத்தை பயன்படுத்திக் கொண்டு உம்மண்டையில் வருகிறோம். ஏனெனில் நாங்கள் வரவேண்டுமென்று கட்டளையிடப்பட் டிருக்கிறோம். அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால். உங்கள் கவலைகளையெல்லாம் அவர் மேல் வைத்து விடுங்கள்'' (1 பேது. 5:7). கர்த்தாவே நீர் எங்களுக்காக கவலை கொள்பவர். எங்கள் மேல் நீர் போதிய கவலை கொண்டு எங்களுக்காக மரித்தீர். நாங்களும், நீர் எதற்காக மரித்தீரோ அதை முன்வந்து ஏற்றுக்கொள்ள நிச்சயமாக போதிய அக்கறை கொண்டிருப்போம். கர்த்தாவே, எங்களை பரிசுத்தப்படுத்தும். பரிசுத்த ஆவி யினால் எங்களை புதிதாக நிரப்பும். பின்னானவைகளை - நாங்கள் ஒரு காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த உளையான சேற்றை - மறந்து, எங்கள் உன்னத அழைப்பின் இலக்கை நோக்கித் தொடருவதற்கென பரிசுத்த ஆவி உங்கள் இருதயங்களை ஆண்டு கொள்வாராக. அங்கு எங்கள் வெளிச்சம் இனிதாயும் தாழ்மையாயும் பிரகாசித்து, வழிபோக்கர் ஒவ்வொருவரும் இங்கு ஒரு கிறிஸ்தவர் வசிக்கிறார். அந்த நபர் - அந்த ஸ்திரீ. அந்த மனிதன் - உண்மையாக தேவனுக்கென்று பிரதிஷ்டை செய்யப்பட்ட மலராக இருக்கிறார். அவர் மிக இனிமையாயும், தயவாயும், எப்பொழும் அன்பு கூறுகிறவராயும் புரிந்து கொள்ளுகிறவ ராயும் இருக்கிறார்' என்று கூற அருள்புரியும். பிதாவே, இதை அருளும். நாங்கள் உப்பாக இருந்து, உலகத்திற்கு தாகமெடுக்க அருள்புரியும். பிதாவே, இதை அருளும். நாங்கள் இவ்வுலகத்தின் காரியங்களையும் உலகத்தின் கவலைகளையும் ஜெயங்கொள்ளும்படி செய்வீராக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென். நாம் கரங்களை உயர்த்துவோம். என் இரட்சகர் அழைப்பதை (என்ன சொல்லி அழைக்கிறார்?) 'சேற்றை விட்டு வெளியே வா. ஒரு உயர்ந்த வாழ்க்கைக்கு உனக்குள் இருக்கும் ஏதோ ஒன்று உன்னை அந்த வழியாய் இழுக்கிறது. அது என்ன? அது அவர். சேற்றுக்குள்ளே சிறுமலர்கள். அங்கு நீ ஜீவனைப் பெற்றிருக்கிறாய். அது உன்னை நெருக்கி ஏவுகிறது என்னால் கேட்க முடிகிறது என் இரட்சகர் அழைப்பதை என்னால் கேட்க முடிகிறது (சேற்றிலிருந்து வெளியே வா!) என் பின்னே வா, ................என் பின்னே வா என்று 111அதை நீங்கள்உண்மையாகவே உணருகின்றீர்களா? இப்பொழுது உங்கள் கண்களை மூடுங்கள். அவர் என்னை நடத்தும் இடத்துக்கு நான் பின் செல்வேன் (இப்பொழுது உங்களை அர்ப்பணியுங்கள்; அதை உண்மையாகஉணர்ந்து பாடுங்கள்) அவர் என்னை நடத்தும் இடத்துக்கு நான் பின் செல்வேன் அவர் என்னை நடத்தும் இடத்துக்கு நான் பின் செல்வேன் நான் வழிநெடுக அவருடன், அவருடன் செல்வேன். அவர் என்னை நடத்தும் இடத்துக்கு (இப்பொழுது இனிமையாய், உங்களை அங்கு கிடத்த ஞாபகம் கொள்ளுங்கள்) அவர் என்னை நடத்தும் இடத்துக்கு (கர்த்தாவே, அதை இங்கு கிடத்துகிறேன். இப்பொழுது முதல் உமக்குப்பின் செல்லப்போகிறேன். அதை ஏற்றுக்கொள்கிறேன்; அதை விசுவாசிக்கிறேன்.'' அவர் என்னை நடத்தும் இடத்துக்கு (ஞாபகம் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை உங்கள் சொற்களைக் காட்டிலும் உரக்க சாட்சியிடும். நீ வாழ்கின்ற வாழ்க்கை உன் பேச்சைக் காட்டிலும் அதிகமாக நிரூபிக்கும்) நான் (எங்கு?) வழிநெடுக அவருடன், அவருடன் செல்வேன். இப்பொழுது ஆழ்ந்த உத்தமத்துடன் முழு இருதயத்தோடும் உங்களைபிரதிஷ் டை செய்யுங்கள். நீங்கள் ஜெபம் செய்ய அனுமதிக்கப்படுவது ஒருக்கால் இதுவேகடைசி முறையாக இருக்குமானால், அப்படி ஒருக்கால் இருக்கக் கூடும்! இருக்காது என்று நம்புகிறேன். ஒருக்கால் இருக்கலாம். இப்பொழுது நிச்சயம்முடையவர்களாக இருங்கள், உண்மையில் நிச்சயமுடையவர்களாக. ஒருநாள் கதவு அடைபடும் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அப்பொழுது எல்லாம் முடிந்து விடும். “கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்'' அவர் உங்களுக்கு அங்கு அளித்த எல்லா மகிமைகளையும் நினைத்துப் பாருங்கள், அவர் அளித்த எல்லாவற்றையும் .... “நான் விசுவாசிக்கிறேன் கர்த்தாவே, நான் விசுவாசிக்கிறேன். நீரே எனக்காக ஜெயங்கொண்டவர் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் உம்முடன் நடக்கிறேன். கர்த்தாவே நாம் உம்முடன் நெருங்கியிருந்து, நீர் எங்கேயோ, அங்கே நானும் இருக்க விரும்புகிறேன்.'' 112பிதாவே, நாங்கள் எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு என்றென்றைக்கும் கர்த்தருடனே கூட இருப்போம் என்று நீர் எங்களுக்கு கூறியிருக்கிறீர். அவர் இப்பொழுது எங்களுடன் நடந்து கொண்டிருக்கும்போது, அவரை சிறிது மாத்திரமே (glimpse) காணமுடிகிறது. ஆனால் எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு நாங்கள்... அவர் எங்கள் மத்தியில் இருக்கிறார் என்று அறிந்திருப்பது எவ்வளவு பெரிய காரியம்! அப்படியிருக்க என்றென்றைக்கும் அவரோடே கூட இருக்கப்போவது எப்படிப்பட்டதாயிருக்கும்? நாங்கள் செய்யும் அனைத்திலும் பிரியம் கொண்டிருக்கிறோம். நாங்கள் குதிரை சவாரி செய்கிறோம். நாங்கள் அங்காடிக்குச் சென்று பொருட்களை வாங்குகிறோம். நாங்கள் வேட்டைக்கும் மீன் பிடிக்கவும், எங்களுக்கு இன்பம் தரும் இவைகளைச் செய்கிறோம். ஆனால் ஆலயம் திறக்கப்படும்போது எங்கள் கர்த்தரை நாங்கள் சந்திக்க விரும்புகிறோம். 'என்றென்றைக்கும் கர்த்தருடனே கூட இருந்து அவருடன் அவருடைய சிங்காசனத்திலே உட்கார்ந்து கொண்டிருப்போம்' என்னும் உம்முடைய வாக்குத்தத்தம் எல்லாவற்றைக் காட்டிலும் மேலானது. ஓ, தேவனே, நாங்கள் மிகுந்த தாழ்மையுடன் எங்கள் தலைகளை வணங்கி அதை ஏற்றுக்கொள்கிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். 113இப்பொழுது உங்கள் பாரங்கள் அனைத்தையும் இங்கு கீழே வைத்து விட்டு அதன் மேல் நடந்து செல்லமுடியும் என்று உணருகிறீர்களா? உங்கள் கரங்களை இப்பொழுது உயர்த்தி, ''தேவனுடைய கிருபையினால் இந்த சோதனையை நான் கீழே வைத்துவிடுகிறேன். அதனுடன் இனி நான் போராட்ட மாட்டேன். அவருடைய கரத்தை மாத்திரம் நான் பிடித்துக்கொண்டு நடந்துசெல்லப் போகிறேன். சகோ.பிரன்ஹாமே, நான் போராடினேன். நான் புகை பிடிப்பதைவிட்டுவிட முயற்சி செய்தேன். என் தலைமயிரை வளர்க்க நான் முயற்சி செய்தேன். நான் இதை செய்யவேண்டுமென்று முயன்றேன். சகோ. பிரன்ஹாமே, நான் கடினமாக முயன்றேன். என்னால் முடியவில்லை'' என்று அறிக்கை செய்யுங்கள். இனிமேல் முயற்சி செய்யாதீர்கள். அவருடைய கரத்தை மாத்திரம் பிடித்துக் கொண்டு, ''பிதாவே, என் கரத்தை பிடித்துக்கொள்ளும். என் கரத்தை உம்மிடம் கொடுக்கிறேன். கர்த்தாவே, உம்மையே சார்ந்து நான் நடக்கப் போகின்றேன்'' என்று சொல்லுங்கள். அப்பொழுது அது நடக்கும். அவர் உங்களை உண்மையான கிறிஸ்தவனாக மாற்றுவார். நீங்கள் உண்மையான கிறிஸ்தவராக இருப்பீர்கள். இன்றிரவு உங்களை நான் காணும் வரைக்கும், தேவன் தாமே உங்கள் மேல் அன்புகூர்ந்து உங்களுடன் இருப்பாராக. நீங்கள் சுவிசேஷத்தினால் நான் பெற்றெடுத்த பிள்ளைகள். நீங்கள் கிரயத்துக் கொள்ளப்பட்டவர்கள். உங்களுக்கு உங்கள் போதகரான சகோ. நெவில்லை திரும்ப அளிக்கிறேன்.